முதல் பாதி தொண்டையை கவ்வுகிறது.. இரண்டாம் பாதி சூப்பர்.. மகாராஜாவை புகழ்ந்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் மகாராஜா. அபிராமி, மம்தா மோகன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர்களுக்கென பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. பெரும்பாலும் சூப்பர் ரெஸ்பான்ஸே படத்துக்கு கிடைத்துவருகிறது. இந்தச் சூழலில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மகாராஜா படத்தின் விமர்சனத்தை கூறி வெளியிட்டிருக்கிறார்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்தவர் நித்திலன் சுவாமிநாதன். சிம்ப்பிளாக அந்தப் படம் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர்; இப்போது விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Here are the Blue Sattai Maran s Maharaja Movie Review

விஜய் சேதுபதி 50: மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து தமிழில் படம் வெளியாவதால் ரசிகர்கள் ஆவலோடு படம் பார்க்க காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர்களுக்கென்று நேற்று இந்தப் படம் திரையிடப்பட்டது. படம் பார்த்த பத்திரிகையாளர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தின் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் வீடியோ: அந்த வீடியோவில் பேசிய ப்ளூ சட்டை மாறன், 'படத்தின் முதல் பாதி ஒரு குப்பைத் தொட்டிக்காக நகர்கிறது. துண்டு துண்டாக கதை இருப்பதால் முதல் தொண்டையை கவ்வும் விதமாக இருக்கிறது. முக்கியமாக ஒரு குப்பைத் தொட்டிக்கா இவ்வளவு என்றே தோன்றுகிறது. நட்டியை கெட்ட போலீஸ் என்று காண்பித்திருக்கிறார்கள். அவர் ஒரு கெட்ட போலீஸ் என்று கேப்ஷன் போட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்காக இவ்வளவு பெரிய ஃபர்ஸ்ட் ஹாஃப் என்றே தோன்றுகிறது.

இரண்டாம் பாதி சூப்பர்: முதல் பாதியை போல் இரண்டாம் பாதி இல்லை. இரண்டாம் பாதியை பார்க்கும்போது, முதல் பாதியில் எதெல்லாம் தேவையில்லாத சீன் என்று தோன்றியதோ அதெல்லாம் தேவை என்றே தோன்றுகிறது. மிக அருமையாக ஸ்க்ரீன் ப்ளே செய்திருக்கிறார்கள். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இரண்டாம் பாதி செல்கிறது. படம் முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே ஜெட் வேகத்தில் மகாராஜா பறக்க ஆரம்பித்துவிட்டது.

சிங்கம்புலி: சிங்கம்புலியை கொண்டு வந்து இவர்தான் அந்த குப்பைத் தொட்டியை திருடிவிட்டார் என்று சொல்கிறார்கள். அவர் சம்பந்தப்பட்ட சீனை பிரமாதமாக எடுத்திருந்தார்கள். சீனை நன்றாக எழுதலாம் ஆனால் அப்படி எடுக்க முடியுமா என்பது சந்தேகம். இவர்கள் நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டும் ரசிக்க வைக்கிறது. இதில் மகிழ்ச்சியான விஷயம் படத்தில் ஹீரோயின் கிடையாது. லவ் சீன் கிடையாது. அனுராக் காஷ்யப் கேரக்டர் நன்றாக இருந்தது; அவரது லிப் சிங்க் சரியாக இல்லை. மொத்தத்தில் படம் நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி போல் முதல் பாதியை எடுத்திருந்தால் இது சூப்பர் படம். அதேசமயம் இந்தப் படம் மலையாளத்தில் வந்த இரட்டா, கொரியாவில் வந்த ஓல்டு பாய் ஆகிய படங்களை நியாபகப்படுத்தும். ஒரு முறை பார்க்கும்படியாக படம் இருக்கிறது. எதிர்பார்ப்பு, லாஜிக் இல்லாமல் படம் பார்த்தால் இது விருந்து" என்று கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X