பிரதர் விமர்சனம்.. ஜெயம் ரவி, ராஜேஷ் படம் எப்படி இருக்குது தெரியுமா.. வெற்றியா, தோல்வியா?

Rating:
3.0/5

சென்னை: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என காமெடி ஜானரில் கிங்கான ராஜேஷ் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் பிரதர். கடந்த சில வருடங்களாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிதாக ஹிட்டாகாத சூழலில் ராஜேஷ் ஜெயம் ரவியை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை அலசலாம்

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர் எம்.ராஜேஷ் அவரது முதல் படமான சிவா மனசுல சக்தி படம் பெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய பாஸ் (எ) பாஸ்கரன படம் அதிரி புதிரி ஹிட். இடையில் அவருக்கு சறுக்கல் வர மிகப்பெரிய வீரியத்தோடு பிரதர் படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமைத்திருக்கிறார்.

brother  jayam ravi

2024ன் பாசமலர்: பொதுவாக மனிதர்கள் கூட்டம் தனிமையாக இருக்காது. வேண்டுமானால் வீம்புக்கு தான் தனிமையாக இருக்கிறேன் என சொல்லிக்கொள்ளலாம். அதிலும் அக்கா, தம்பி உறவு என்பது உன்னதமானது. அந்த உன்னத உறவை தொட்டிருக்கிறார் ராஜேஷ். அந்த உறவை தொட்டதற்காகவே அவருக்கு ஒரு கட்டிப்பிடி வைத்தியம் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் 2024ல் பாசமலரை கொண்டு வந்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ்: ராஜேஷ் இயக்கம் என்றாலே அதில் நகைச்சுவை எப்போது இழைந்தோடும், அதை பிரதரில் எம்.ராஜேஷ் செய்திருக்கிறார். காமெடி மட்டுமின்றி ராஜேஷின் இன்னொரு ப்ளஸ் எமோஷன். உறவுகளுக்குள் நடக்கும் உளவியல் சிக்கலை போகிற போக்கில் தூவிவிட்டு செல்பவர். அதை வெகு இயல்பாக செய்யும் இயக்குநர்களில் ராஜேஷ் முக்கியம். அக்கா, தம்பி உறவை வைத்து தன்னால் இப்படியும் ஒரு ஜானரில் கொடுக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். .

மிக முக்கியமாக ஜெயம் ரவி. இந்தக் கதைக்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் தாண்டி செய்திருக்கிறார். தன் அப்பாவிடம், அக்காவிடம், மாமாவிடம் அவர் பேசும்போது இப்படி ஒரு தம்பியாக அக்காவிடம் இருக்க வேண்டும் என உணர வைத்து கலங்க வைக்கிறார். உங்களுக்கு இனி ஜெயமதான் ரவி வாழ்த்துகள். அடுத்ததாக பூமிகா. ரோஜா கூட்டம், பத்ரி என நமது மனதை கவர்ந்தவர் பிரதரில் அக்காவாக நம் மனதை அணைக்கிறார். வெல்கம் பேக் பூமிகா. அடுத்தடுத்து உங்கள் வீட்டை சுற்றி குணசித்திர கதாபாத்திரங்களுக்கு கூட்டங்கள் மொய்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக தனது தம்பியிடம் பூமிகா ஒரு வசனத்தை பேசும்போது அவர அக்கா மட்டிமில்லாமல் அம்மாவாவகாவும் பிரவாகம் எடுத்திருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ்: எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி ஒரு ரீ ரெக்கார்டிங்கை கேட்க ஹாரிஸ். எங்கே இருக்கிறீர்கள். மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக விரைவில் வாருங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் பின்னணி இசையில் சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன. இசையை காதுகள் தேடுகின்றன. இடைவேளை காட்சியில் நீங்கள் செய்த RR இந்த காலத்துகான கிளாஸ். ஊட்டியை இவ்வளவு ஃப்ரெஷ்ஷாக, வேறு கோணத்தில் காண்பிக்க முடியும் என்று ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் நிரூபித்திருக்கிறார். ஊட்டியை பார்த்தவர்களிடம் அந்த ஊட்டியை புது விதமாக ஊட்டும் வித்தை அவருக்கு தெரிந்திருக்கிறது.

படத்தின் மைனஸ்: ராஜேஷிடம் மிகப்பெரிய ப்ளஸ்ஸும் காமெடிதான் மைனஸும் காமெடிதான். முதல் பாதியை பார்ப்பதற்குள் எப்போ இந்த சீன் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார். முக்கியமாக விடிவி கணேஷை வைத்து ராஜேஷ் செய்தது எல்லாம் அபத்தத்தின் உச்சம். அதையெல்லாம் மீறி ஒன்று தோன்றியது. சரண்யா எவ்வளவு பெரிய நடிகை . இதில் அவரை ராஜேஷ் யூஸ் செய்திருந்த விதத்தை பார்க்கையில் அவரே அவரை சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இதற்கிடையே எதற்காக எம்.எஸ். பாஸ்கர். அவர் இந்த யுகத்தின் ஆகச்சிறந்த நடிகன். அவரையும் ஏன் இந்தப் படத்தில் கொண்டு வந்ந்தார் என்று தெரியவில்லை.

மிக முக்கியமாக அக்கா, தம்பி உறவை பேசுகிறார் சரி. இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் சரி. அதிலும் முக்கியமாக parenting பற்றிய எமோஷனை தொட்ட ராஜேஷால் ஸ்க்ரீன் ப்ளேவிலும், மேக்கிங்கிலும் அந்த் எமோஷனை கொண்டு வரவே முடியவில்லை. இதே ராஜேஷ்தான் வைன் ஷாப்பில் க்ளைமேக்ஸி வைத்து க்ளிஷேவை உடைத்தவர். ஆனால் பேரண்ட்டிங் , க்ளைமேக்ஸ் சீனில் அந்த ராஜேஷா என்றுதான் ரசிகர்களுக்கு தோன்றியது.

அடுத்ததாக படத்தின் பெரிய மைனஸ் மேக்கிங். அக்கா, தம்பி என்ற உணர்வை தொட்டால் அதில் அடித்து ஆட வேண்டும். ஆனால் ராஜேஷ் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். அக்கா என்றால் ஒரு தாய், தம்பி என்றால் ஒரு மகன். இவர்களுக்குள் இருக்கும் உணர்வு போராட்டங்களை ராஜேஷ் ஆழமாக பேசியிருக்க வேண்டும். அப்படி பேசவில்லையெனில் இந்தக் கதையை தனது சிந்தைக்குள்ளே கொண்டு சென்றிருக்க வேண்டாம். அதேபோல் காமெடி என்ற பெயரில் ரம்பத்தை கழுத்தில் வைத்தால் அதே ரம்பத்தை கொடுத்தவரின் கைகளில் கொடுக்கலாம். ராஜேஷ் நீங்கள் ஜாலியான இயக்குநர்தான். இன்னும் கொஞ்சம் மெனக்கெடுங்கள்.

ஆகமொத்தம் அக்கா மீது பாசம் உள்ள தம்பிக்கும், தம்பி மீது பாசம் உள்ள அக்காக்கும் இந்த பிரதர் ஒருமுறை நினைவுக்கு வரலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X