twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனின் ஹீரோ முதல் சூப்பர் ஹீரோ பயணம் தான் இந்த ஹீரோ

    |

    Rating:
    3.5/5
    Star Cast: சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்சன், இவானா, அபேய் தியோல்
    Director: மித்ரன் பி எஸ்(இயக்குனர்)

    Recommended Video

    நல்லா தூங்குனேன் | HERO MOVIE PUBLIC OPINION | FILMIBEAT TAMIL

    சென்னை: சிவகார்த்திகேயனின் அடுத்த ஒரு பரிமானம் ,கமர்சியல் ஹீரோவில் இருந்து ஒரு சூப்பர் ஹீரோ ஆகும் முயற்சி தான் இந்த ஹீரோ .நடிகர் விஜய்க்கு அடுத்து குழந்தைகள் அதிகம் விரும்புவது சிவகார்த்திகேயன் படங்களை தான் . அவர்கள் மனநிலையும் கனவுகளையும் புரிந்து எடுக்க பட்ட படம் தான் ஹீரோ என்று கூட சொல்லலாம் .சிவகார்த்திகேயனின் புதிய முயற்சிகள் அவரை எப்போதும் ஏமாத்திவிடாது அது தான் தற்போது ஹீரோவிலும் நடந்தேறி இருக்கிறது .

    நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக அசத்தி இருக்கும் படம் தான் ஹீரோ .படத்தை இரும்புதிரை இயக்குனரான பி.எஸ்.மித்ரன் இயக்கி இருக்கிறார் .படத்தில் சிவகார்த்திகேயனுடன் ,ரோபோ சங்கர் ,அர்ஜீன் ,அபய் தியோல் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்தை கே.ஜே .ஆர் நிறுவனம் தயாரித்து இருக்கிறது .

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    சிவகார்த்திகேயன் மற்றும் அர்ஜீன் தான் படத்தின் ஹீரோக்கள் அந்த அளவுக்கு தெளிவான மற்றும் சரியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள் .படத்தின் வில்லனான அபய் தியோல் படத்தின் மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு மிரட்டும் ஒரு நடிப்பை கொடுத்து இருக்கிறார் .மேலும் ரோபோ சங்கர் ஒரு துணை நடிகராக தனது பணிகளை சரியாக செய்து நகர்ந்திருக்கிறார் .கல்யாணி தமிழில் முதல் படம் இருந்தாலும் எங்கும் லிப்சிங்க் பிரச்சினை இல்லாமல் நடித்து இருக்கிறார் மேலும் அவரின் கதாபாத்திரம் படம்முழுக்க இல்லாதது மற்றொரு வருத்தம் .

    படத்தில் சக்தி கதாபாத்திரத்தில் ஹீரோவாக அசத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன், இன்க் என்ற கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்து இருக்கிறார், அறிவுபூர்வமான நவீன டெக்னாலஜி தெரிந்த மாஸ்டர் கதாபாத்திரத்தில் அர்ஜீன் நடித்து இருக்கிறார் .

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    சக்தி டிஸ்ட்ரிக்ட் அளவில் முதல் இடம் பிடித்தும் மாநில அளவில் முதலிடம் பிடிக்கவில்லை என்று வருத்தப்படும் அப்பா, அவரின் மருத்துவ செலவிற்காக தனது சான்றிதழை விற்று அப்பாவை காப்பாத்துகிறான் .அதன் பின் வாழ்க்கை மாற போலி சான்றிதழ் தயாரிக்கும் ஒருவனாக மாறி போகிறான் சக்தி.முதல் பாதி சக்தி மற்றும் கதாநாயகிக்கு இருக்கும் காதலே அதிகமாய் கதையை நகர்த்தி செல்கிறது .வில்லன் அபய் தியோல் திறமை மிகுந்த மாணவர்களின் வாழ்கையை அழித்து அவர்களை திசை திருப்பும் தொழிலை செய்து வருகிறார் .

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    அதற்கு எதிரான முறையில் மாணவர்களுக்கு தொழில் முறை பயிற்சி கொடுத்து மாணவர்களின் சிந்தனையை பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் இறங்கி செயல்பட்டு வருகிறார் அர்ஜீன் . ஒரு கட்டத்தில் அர்ஜீனும் சிவகார்த்திகேயனும் வில்லனால் பாதிக்கபட அங்கிருந்து ஹீரோ உருவாகிறான் .அதற்கு மேல் தனது முயற்சிகளால் வில்லனை வென்றானா ஹீரோ என்பதே கதை .

    படம் முழுக்க முழுக்க பேசியிருப்பது கல்வி முறையில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி தான் அதை சுற்றி தான் கதை நகர்கிறது .படத்தில் அர்ஜீனின் வசனம் ஒன்று கூட அதை தான் கூறியிருக்கிறது 'இங்க இத மாத்த ஜென்டில்மேன் மட்டும் இருந்தா பத்தாது ஒரு ஹீரோவும் வேண்டும்' போன்ற வசனங்கள் இருக்கிறது .

    இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில் மேன் படம் முழுக்க முழுக்க கல்வி முறை பற்றி தான் அதிகம் பேசி இருக்கும். அந்த படத்தில் நடித்த அர்ஜுன் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதே போல் நிறைய கல்வி சார்ந்த வசனங்கள் பேசி நம்மை அசத்துகிறார்.

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    படத்தின் மற்றொரு முக்கிய வசனம் வில்லன் பேசும் " நான் படிப்ப வச்சு வியாபாரம் பண்றவன் கிடையாது படிக்கிறவன வச்சு வியாபாரம் பண்றவன் " போன்ற வசனங்கள் கதையின் வில்லன் பற்றி புரிய வைகிறது. சிறுவயதில் இருந்து சக்திமான் சூப்பர்மேன் போன்று ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என குழந்தைகள் எல்லோருக்கும் ஆசை இருக்கும் அந்த ஆசையும் கனவும் சிவகார்த்திகேயனுக்கு நிறைவேறி உள்ளது அதை வைத்து வில்லனை அழிக்கிறார் .

    புதிய சிந்தனை , புதிய கண்டுபிடிப்புகள் எப்போதும் சிறு வயது முதல் ஆரம்பம் ஆகும். ஆனால் அதை சரியாக கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் உள்ளது. நல்லா படிக்கறவன் மட்டும் ஹீரோ கிடையாது. சுயமா சிந்திக்கிற ஒவ்வொருத்தனும் ஹீரோ தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்கள்.

    ஹீரோ படத்தில் இருக்கும் குறைகள் என்னவென்றால் எளிதில் கணிக்க கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை .அடுத்து இதுதான் வரபோகிறது என நாம் எளிதில் கணித்து விடலாம் அந்த அளவிற்கு திரைக்கதை ஓட்டம் இருக்கிறது .அதை மாற்றி இருந்தால் படம் இன்னும் கூட சூப்பராக இருந்திருக்கும் என்று சொல்லிருக்கலாம் .

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    மேலும் தற்போதைய கல்வி முறையின் பிரச்சினையை பற்றி பல படங்கள் பேசியிருக்கிறது.முக்கியமாக அமீர் கானின் தாரே சமீன் பர் படம் நிறைய விசயங்களை பேசியிருப்பது போல் சிலவற்றை இந்த படமும் பேசியிருக்கிறது .

    ஹீரோ படம் முதல் காட்சி சென்னை ரோகினியில் காலை நாண்கு மணிக்கு போடப்பட்டது அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி விருந்து வைத்தார் சிவகார்த்திகேயன்.நேரில் வந்த சிவகார்த்திகேயனை கட்டி தழுவி ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர் .

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    ஹீரோ படம் மொத்தத்தில் எப்படி இருக்கிறது என்றால் கல்வி முறை பிரச்சனைகளை பேசியிருக்கிறது . அது நன்று , அதை தாண்டி கணிக்ககூடிய அளவில் இருந்த திரைக்கதை படத்தின் ஒரு சுவாரஸ்யம் மாறிவிட்டது .

    என்ன இருந்தாலும் படம் ரசிகர்கள் மனதை வென்று வசூல் வேட்டை நடத்த உள்ளது உறுதி .
    மொத்தத்தில் படம் ஒரு முறை பார்க்க கூடிய ஹீரோ படம் தான். எஸ் கே ரசிகர்கள் மற்றும் எஸ் கே வுடைய குட்டி குட்டி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

    நிறைய இடங்களில் சில மாணவர்கள் கொஞ்சம் அதிக பரசங்கி போல் பேசுகிறார்கள் என்று தோன்றும் . ஆனால் அப்படி பேசுபவர்கள் தான் பின்னாளில் நிறைய சாதிப்பார்கள். அவர்களை கட்டி போட வேண்டாம். ஜஸ்ட் விதிமுறைகளை கொஞ்சம் மாற்றுங்கள் என்று சொல்ல வைக்கிறார் இயக்குனர்.

    Hero becomes super hero is the script of sivakarthikeyan movie.

    ஒரு முக்கியமான காட்சியில் அப்துல் கலாம் அவர்களை நினைவு படுத்தியது கை தட்டல்களை வாங்கி கொடுத்தது இயக்குனருக்கு பெருமை . கிளாஸ் ஒர்க் நோட், ஹோம் ஒர்க் நோட் , சயின்ஸ் நோட், மேத்ஸ் நோட் மட்டும் பார்க்கும் பெற்றோர் இனிமேல் ரஃ ப் நோட்டும் பார்க்க வேண்டும் என்று புரிய வைக்கும் படம் தான் ஹீரோ.

    அப்பாவாக நடித்திருக்கும் அழகம் பெருமாள் தன் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
    இந்த படத்திற்கு ஒரு மிக பெரிய பலம் எடிட்டிங் மற்றும் ரி ரெக்கார்டிங் . யுவன் மிகவும் அழகான பின்னணி இசை கொடுத்துள்ளார். சில இடங்களில் மிரள வைக்கும் சப்தங்களுடன் ஆச்சரியபடுத்தியிருக்கிறார்.

    கல்வி முறை திட்டங்களில் நிறைய மாற்றங்கள் வேண்டும் என்பதை கமெர்சியல் படமாக சொல்லி இருப்பது சாமர்த்தியம் தான். நிறைய நல்ல வசனங்கள் இருந்தும் , சில ரெகுலரான காட்சிகள் தான் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் நிறைய ஸ்கிரீன்பிளே மாற்றங்கள் செய்து விறுவிறுப்பை கூட்டி இருந்துருக்கலாம்.

    புத்தக படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்று சொல்லி புரிய வைக்கும் இந்த ஹீரோ நிறைய குட்டி பசங்களுக்கு சூப்பர் ஹீரோ தான்.

    English summary
    educational system needs lots of changes and that has to be done from schools itself says the movie " HERO " mithran has directed this movie and keeping the children in mind and the fans who follow sivakarthikeyan from the age of seven to fifteen will sure love this movie. lot of commercial elements being added in this movie and its a jolly entertaining film with lot of moral values added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X