Don't Miss!
- News
கமல்ஹாசனுக்கு ராகுல் கொடுத்த பேட்டியில் அத்தனையும் பொய்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளாசல்
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Hey Sinamika Review: பிருந்தா மாஸ்டரின் முதல் படைப்பு.. துல்கர் சல்மானின் ஹே சினாமிகா விமர்சனம்!
நடிகர்கள்: துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால்
Recommended Video
இசை: கோவிந்த் வசந்தா
இயக்கம்: பிருந்தா
ரேட்டிங்: 3/5
சென்னை: பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகி உள்ள ஹே சினாமிகா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் நடிப்பில் முக்கோண காதல் கதையாக உருவாகி உள்ளது இந்த படம்.
அன்பாலே அடிக்கும் ஹஸ்பென்ட் வேண்டாம் என நினைக்கும் ஒரு மனைவி எடுக்கும் முடிவு அவருக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை கொடுக்கிறது என்கிற வித்தியாசமான கதையை அழகாக கூறி முதல் படத்திலேயே அசத்தியிருக்கிறார் பிருந்தா மாஸ்டர். இந்த படம் எப்படி இருக்கு என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
தொடர்ந்து வசூல்வேட்டையில் வலிமை... தமிழ்நாட்டுல மட்டுமே இவ்ளோ வசூலா?

அதீத காதலும் தெகட்டும்
ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இந்த படத்தை எடுத்து இயக்கியிருக்கிறார் பிருந்தா மாஸ்டர். இப்படி அன்பு காட்டும், குறிப்பாக சமைத்துத் தரும், தோட்ட வேலை முதல் அத்தனை வேலைகளையும் மனைவிக்காக செய்யும் ஹவுஸ் ஹஸ்பென்ட் வேண்டும் என ஆசைப்படும் பெண்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே சளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்த்தும் படமாக ஹே சினமிகா படத்தின் கதை ஆரம்பம் ஆகிறது.

அழகும் ஆழமான நடிப்பும்
இயக்குநர் மணிரத்னமின் காற்று வெளியிடை படத்தில் பனிப்பொழிவுக்கிடையே அதிதி எட்டிப் பார்க்கும் முதல் காட்சியை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் அவர் மீது ஒருவித காதலில் மயங்கி விழுந்தனர். ஹே சினாமிகா படத்தில் தனது அழகாலும் அழமான நடிப்பாலும் ரசிகர்களை இன்னொரு முறை பிரம்மிக்க வைக்கிறார். கணவர் யாழன் (துல்கர் சல்மான்) தன்னை எந்த வேலையும் செய்ய விடாமல் பேசிக் கொண்டே இருப்பதே இவருக்கு இரிடேட் ஆகி, அவரை விட்டு பிரிய ஒரு நல்ல காரணத்தை தேடும் காட்சிகளில் எல்லாம் நடிப்பு அபாரம்.

தூள் கிளப்பிய துல்கர்
வாயை மூடி பேசவும் படத்தில் அப்படி நடித்த மனுஷனா இப்படி வாயை மூடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார். கேள்வியும் அவரே பதிலும் அவரே என ஆர்ஜேவுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருக்கிறது என்பதை இந்த படத்தில் அவ்வளவு அழகாக நடித்து தூள் கிளப்பி உள்ளார் துல்கர் சல்மான். காதல் மனைவிக்காக எல்லாம் செய்யும் கணவனாக அவர் நடிக்கும் காட்சிகளில் எல்லாம் இப்படியொருவர் கணவனாக அமைய வேண்டும் என இளம் பெண்களும், இப்படியொருவர் கணவராக அமையவில்லையே என திருமணமான பெண்களும் புலம்பும்படி நடித்துத் தள்ளியிருக்கிறார்.

சைக்காலஜிஸ்ட் காஜல்
பக்கத்து வீட்டில் இருக்கும் சைக்காலஜிஸ்ட் காஜல் அகர்வாலிடம் தனது கணவரை விவாகரத்து செய்ய காரணம் கிடைக்காமல் தவிப்பதையும், நீங்க அவரை லவ் பண்ற மாதிரி நடிச்சா போதும், அந்த காரணத்தை விட்டு அவரை விலகிடுவேன் என அதிதி அன்பு கட்டளை போட, சைக்காலஜிஸ்ட் காஜல் அகர்வால் விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட் இருவரையும் பிரித்தாரா? அல்லது சேர்த்து வைத்தாரா? என்பது தான் ஹே சினாமிகா படத்தின் அழகான கதை.

பிளஸ்
இயக்குநர் மணிரத்னம் படங்களின் பாதிப்பு பிருந்தா மாஸ்டருக்கு நிறையவே இருக்கிறது என்பது திரைக்கதை மற்றும் விஷுவல்ஸை பார்க்கும் போதே தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் வேற லெவல் காட்சிகளை திரையில் கொடுத்து கண்களுக்கு விருந்து படைக்கும் விதம் மற்றும் 96 புகழ் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை என அத்தனையும் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
மைனஸ்
முக்கோண காதல் கதைகளில் ஏகப்பட்ட படங்கள் வந்த நிலையில், இந்த படமும் அந்த ஜானரில் வந்துள்ளது. இடைவேளை வரை நன்றாக செல்லும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு டேக் ஆஃப் ஆகவேண்டிய இடத்தில் சொதப்புவது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. கிளைமேக்ஸில் மீண்டும் இழுத்துப் பிடித்து படத்தை நல்லபடியாக இயக்குநர் பிருந்தா முடித்து இருப்பது சிறப்பாக இருந்தாலும், இடையே ஏற்பட்ட சில சறுக்கல்களையும், லாஜிக் எல்லை மீறல்களையும் சரி பார்த்து இருந்தால், இந்த ஹே சினாமிகா ஹே ஹே சினாமிகாவாக மாறியிருக்கும். காதலர்கள், திருமணமானவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். ஆனால், முழுக்க முழுக்க ஏ சென்டர் ஆடியன்ஸை மட்டுமே மனதில் வைத்து எடுத்ததை போல எடுத்திருப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.