Hi Nanna BlueSattai Review: “பலான பலான படமா எடுத்து வச்சிருக்காய்ங்க” Hi நன்னா ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: நானி, மிருனாள் தாக்கூர் நடித்துள்ள ஹாய் நன்னா திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

ஹாய் நன்னா ப்ளூ சட்டை விமர்சனம்
தெலுங்கில் நானி, மிருணாள் தாகூர், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாய் நன்னா திரைப்படம் நேற்று வெளியானது. ஷௌரியவ் இயக்கியுள்ள இந்தப் படம் ஃபீல்குட் மூவியாக இருந்தாலும் மேக்கிங்கில் சொதப்பிவிட்டதாக ப்ளூ சட்ட மாறன் விமர்சனம் செய்துள்ளார். அதாவது, படத்தோட ஆரம்பத்துல ஹீரோவும் அவரோட 6 வயசு பெண் குழந்தையும் தனியா வாழ்ந்துட்டு இருக்காங்க.
அந்த பெண் குழந்தைக்கு தன்னோட அம்மாவ பத்தி தெரிஞ்ச்சுக்கணும்ன்னு ஆசை. அதனால அப்பாகிட்ட பலமுறை அம்மாவ பத்தி சொல்லுங்கன்னு கேட்டுட்டே இருக்குது. தொடர்ந்து மழுப்பிட்ட வர்ற நானி, ஒருகட்டத்துல க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனா அம்மாவ பத்தி சொல்றேன்னு ப்ராமிஸ் பண்றாரு. அந்தப் பொண்ணு ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டு வந்த பின்னாடியும் அம்மாவ பத்தி சொல்ல மறுக்குறாரு ஹீரோ.
இதனால கோவமான அந்த பொண்ணு, வீட்டை விட்டு போய்டுது. இதனால பதட்டத்தோட அந்த குழந்தைய தேடி போறார் ஹீரோ நானி. வீட்ட விட்ட போன குழந்தை ஒரு விபத்துல சிக்க பார்க்குது, அப்போ ஹீரோயின் மிருணாள் தாகூர் அந்த பொண்ண காப்பாத்திடுறாங்க. அப்புறம் நானிக்கு போன் பண்ணி குழந்தைய பத்தி சொல்லிட்டு ஒரு காஃபி ஷாப்ல வெயிட் பண்றாங்க.
அதன்பிறகு காஃபி ஷாப் வர்ற நானி, இப்போது அந்த குழந்தை கிட்ட அம்மா பத்தி சொல்றாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்ன்னு நீங்களே கெஸ் பண்ணிருப்பீங்க என இந்தப் படத்தில் கதையே இல்லை என ரசிகர்களுக்கு விபூதி அடித்துள்ளார். மேலும், நீங்க கெஸ் பண்ணது, பண்ணாதது இப்படி இன்னும் பலான பலானதுலாம் இந்தப் படத்துல எடுத்து வச்சிருக்காங்க என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
மேலும், இந்தப் படத்தோட முதல் சீனை பார்த்தாலே, இது தான் க்ளைமேக்ஸா இருக்கும்ன்னு கண்டுபிடிச்சிடலாம். அந்தளவுக்கு ஒரு வழக்கமான கதையை எடுத்து வைத்துள்ளதாகவும், அதுமட்டும் இல்லாம படம் முழுக்க தங்களுக்கு தேவையானத எல்லாம் தேவைக்கேற்ப வளைச்சிக்குறாங்க. இந்த கதைல வித்தியாசம்ன்னு மெமரீ லாஸ்ங்குறத கொண்டு வந்துருக்காங்க. அதாவது ஹீரோயினுக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகி பழசு எல்லாம் மறந்துடுது.
இதுல எல்லாம் மறக்காம, அம்மா, அப்பா, தங்கை எல்லாம் நியாபகம் இருக்கும். ஆனால், காதலிச்சது, கல்யாணம் பண்ணது மட்டும் மறந்துருமாம். மேலும், ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்றதுல பிரச்சினை, கல்யாணம் பண்றதுல பிரச்சினை, அப்புறம் பார்த்தா குடும்பம் நடத்துறலயும் பிரச்சினை வருது. இப்படி பிரச்சினையே இல்லாத எல்லாத்தையும் பிரச்சினை பிரச்சினைன்னு சொல்றது தான் பெரிய பிரச்சினையா இருக்குது.
படம் முழுக்க நல்ல எமோஷனலா கொண்டுபோக வாய்ப்பிருந்தும் பல இடங்கள்ல மிஸ் பண்ணிருக்காங்க. அப்பா - மகள் செண்டிமெண்ட், ஹீரோ - ஹீரோயினுக்கு இடையே வர்ற லவ் போர்ஷன் இப்படி எல்லாத்தையும் மேம்போக்கா பண்ணி, நல்லா ஒர்க்அவுட் ஆக வேண்டிய படத்த கெடுத்து வச்சிருக்காங்க. இந்தப் படத்தை ஓரளவாவது உக்கார்ந்து பார்க்கலாம்ன்னா அதுக்கு மேக்கிங் தான் காரணம். ஒட்டுமொத்தமா ஹாய் நன்னா படம் ஹை பட்ஜெட் சீரியல் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











