பக்கா ஃபேமிலி என்டர்டெயினர்.. சிவகுமாரின் சபதம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: மீசையை முறுக்கு படத்தைத் தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படம் பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளதாக படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

Recommended Video

Sivakumarin Sabatham FDFS Review | Tamil Filmibeat

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தனக்கான படத்தை தானே இயக்கி நடித்து அசத்தி உள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

காலையிலேயே ஸ்பெஷல் ஷோ ரோகிணி திரையரங்கில் திரையிட ரசிகர்களுடன் படத்தை பார்த்து சந்தோஷப்பட்ட ஆதி தியேட்டரையே இசை கச்சேரி கூடமாக மாற்றி உள்ளார்.

தியேட்டரில் கச்சேரி

தியேட்டரில் கச்சேரி

ரசிகர்களின் கோட்டையான ரோகிணி சினிமாஸில் சிவகுமாரின் சபதம் படக்குழுவினர் ஸ்பெஷல் ஷோவில் ரசிகர்களுடன் படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஹிப் ஹாப் தமிழா ஆதி ரசிகர்களுக்காக தியேட்டரிலேயே பாடல்களை பாடி கச்சேரியையும் நடத்தி விட்டார்.

பிரான்க்ஸ்டர் ராகுல்

பிரான்க்ஸ்டர் ராகுல்

மீசையை முறுக்கு படத்தில் ஏகப்பட்ட யூடியூபர்களை வைத்து இளைஞர்களை கவர்ந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி இன்று வெளியாகி உள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் யூடியூபில் பிரபலமான பிரான்க்ஸ்டர் ராகுலை நடிக்க வைத்து காமெடியில் கலக்கி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

காஞ்சிப் பட்டு

காஞ்சிப் பட்டு

மேலும், நெசவு துறையை மையப்படுத்திய காட்சிகளுக்கு பலத்த கைதட்டல்கள் கிடைத்து வருகின்றன. காஞ்சிப் பட்டு காட்சிகளுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது படத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

பக்கா ஃபேமிலி என்டர்டெயினர்

பக்கா ஃபேமிலி என்டர்டெயினர்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்ப படம் பார்த்த திருப்தியை சிவகுமாரின் சபதம் திரைப்படம் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். படத்தின் மெசேஜும் ரொம்ப சூப்பராக இருப்பதால் நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆதியின் சபதம்

ஆதியின் சபதம்

நீங்கள் எடுத்த சபதம் (சிவக்குமாரின் சபதம்) வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஆதி என சன் நியூஸ் செய்திவாசிப்பாளர் கண்மணி பெயரில் உள்ள ட்விட்டர் ஐடியில் இருந்து ஆதி மற்றும் படக்குழுவினர் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

2K கிட்ஸுக்காக

2K கிட்ஸுக்காக

மீசையை முறுக்கு படத்தில் காதல் மற்றும் லட்சியம் என சொந்த வாழ்க்கையை படமாக எடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி சிவகுமாரின் சபதம் படத்தில் 2K கிட்ஸ்களை டார்கெட் பண்ணி படம் எடுத்துள்ளார் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் குடும்ப உறவுகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது

யாரு படம் ஓடினாலும்

ஹிப் ஹாப் தமிழாவின் சிவகுமாரின் சபதம் திரைப்படம் அப்படியே மீசையை முறுக்கு படத்தை போலவே ஜாலியாக எடுக்கப்பட்ட படமாக உள்ளது என்றும், படத்தில் சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்கிறது என சிலர் விமர்சித்துள்ளனர். தியேட்டரில் படம் பார்த்த பலரும் இடைவேளையின் போது ஒளிபரப்பான தல அஜித்தின் வலிமை க்ளிம்ஸை பார்த்தவுடன் செய்த ஆரவாரம் வேற லெவல். யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க தல தான் என அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X