’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!

நடிகர்கள்: கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி, ஆதித்யா பாஸ்கர், சாண்டி, கலையரசன்
இசை: சதீஷ் ரகுநாதன்
நேரம்: 2 மணி நேரம் 2 நிமிடங்கள்
இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

Rating:
2.5/5
Star Cast: கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி, ஆதித்யா பாஸ்கர், சாண்டி, கலையரசன்
Director: விக்னேஷ் கார்த்திக்

சென்னை: Yours Shamefully எனும் குறும்படத்தை இயக்கி சோஷியல் மீடியாவை அதிர வைத்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தான் ’ஹாட் ஸ்பாட்’. திட்டம் இரண்டு, அடியே உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கி உள்ள நிலையில், 3வதாக இயக்கியுள்ள படம் தான் இந்த ஹாட் ஸ்பாட். தயாரிப்பாளர் ஒருவரிடம் இளம் இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லப் போவது போல படம் ஆரம்பிக்கிறது. 4 தனித்தனி குறும்படங்களாக படத்தில் 4 கதைகள் வருகின்றன.

Hot Spot Review in Tamil  4 Taboo break stories will give you surprise


அந்த 4 கதைகளும் சமூகத்தில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், ஏற்பட வேண்டிய விஷயங்களையும் சொல்லும் கதைகளாக உருவாகியிருக்கின்றன. சாதாரண ரசிகர்களையும் பல ஆண்டுகள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த 4 கதைகளில் முதல் 3 கதைகள் கனெக்ட் ஆகாமல் போகலாம். ஆனால், கடைசி கதை எல்லோரையும் கனெக்ட் செய்து விடும்.

ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி, கலையரசன், சுபாஷ் மற்றும் சோஃபியா உள்ளிட்டோர் நடித்துள்ள ’ஏ’ சான்றிதழ் படமான இந்த ஹாட் ஸ்பாட் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க.

ஹேப்பி மேரிட் லைஃப் கதை: முற்போக்கு சிந்தனையுடன் இருக்கக் கூடிய ஆதித்யா பாஸ்கர் தான் காதலிக்கும் கெளரி கிஷனிடம் எனக்கு நீ தான் தாலி கட்ட வேண்டும் என்பதில் தொடங்கி உங்க வீட்டில் தான் திருமணத்துக்கு பிறகு நான் வந்து தங்குவேன் என புரட்சிகர கணவராக மாறி செய்யும் அலப்பறையான காதல் கதையாக ஹேப்பி மேரிட் லைஃப் செல்கிறது. கடைசியில் என்ன ஆச்சு என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

கோல்டன் ரூல்ஸ்: சாண்டி மாஸ்டர் மற்றும் அம்மு அபிராமி நடித்துள்ள கோல்டன் ரூல்ஸ் கதையில் இருவரும் காதலித்து வருகின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் அண்ணன் தங்கை உறவுமுறை என்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அவர்கள் காதல் என்ன ஆனது என்பது தான் 2வது கதை.

தக்காளி சட்னி: 3வது கதையாக தக்காளி சட்னி கதையில் ஜனனி மற்றும் சுபாஷ் நடித்துள்ளனர். பணியிடத்தில் செய்யும் மோசமான செயல் காரணமாக வேலையை விட்டு தூக்கப்படும் சுபாஷ் கால் பாயாக மாறுகிறான். தனது உடலை வைத்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் அவனது ரகசியம் காதலி ஜனனிக்கு தெரியவர என்ன நடக்கிறது என்பது தான் 3வது கதை.

ஃபேம் கேம்: ஆட்டோ ஓட்டுநரான கலையரசனின் மகள் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அதனால் அதற்கு ஏற்படும் ஒரு சங்கடத்தை தெளிவாக தோலுரித்துக் காட்டியுள்ளனர். ”அப்பா நான் செக்ஸியாக இருக்கிறேனா” என்றெல்லாம் அந்த பிஞ்சு கேட்கும் அளவுக்கு நஞ்சை டிவி நிகழ்ச்சிகள் விதைப்பதை கூறியுள்ளார். அருவி படத்தில் ரியாலிட்டி ஷோவை வைத்து சம்பவம் பண்ணது போல, குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்யும் டிவி சேனல்களுக்கு எதிரான முழக்கமாகவும் குழந்தைகளின் எதிர்காலம் இதனால் கேள்விக்குறி ஆகிவிடும் என்கிற எச்சரிக்கை மணியுடன் ஒலிக்கும் 4வது கதை அனைவரையும் கவர்கிறது.

பார்க்கலாமா? வேண்டாமா?: 4 கதைகளும் வித்தியாசமான கதைகள் தான். கண்டிப்பாக வித்தியாசமான படங்களை பார்க்க விரும்புவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். முடிந்த வரை சுவாரஸ்யமாகவே இயக்குநர் விக்னேஷ் கார்த்தி படத்தை கொடுத்துள்ளார். ஆனால், படம் முழுக்க வரும் ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. 'ஏ’ சர்ட்டிபிகேட் படம் என்பதால், மட்டுமல்ல படம் முழுக்கவே அடல்ட் காட்சிகள் அதிகம் உள்ளன. மேலும், ஆங்காங்கே சில சொதப்பல்களும் இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X