Hotspot 2Much X Review: என்னது திருச்சி தலைநகரா? அந்த நடிகர் முதல்வர்.. இவரு எதிர்க்கட்சி தலைவரா?

சென்னை: ஹாட்ஸ்பாட் படத்தை இயக்கி அதிர விட்ட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இந்த முறை மேலும், பல வித்தியாசமான டாப்பிக்குகளை தொட்டு படமாக்கியுள்ளார். பிரபல நடிகர்களை இந்த முறை தனது படத்தில் அதிகம் பயன்படுத்தி எப்படியாவது ஒரு வெற்றியை பெற்று விட வேண்டும் என அவர் போட்டுள்ள முயற்சி மிகப்பெரியது.

பிரியா பவானி சங்கர், பவானிஸ்ரீ, அஸ்வின், தம்பி ராமைய்யா, எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து இந்த படத்தையும் ஆந்தாலஜி பாணியிலேயே உருவாக்கியுள்ளார்.

Hotspot 2Much X Review in Tamil  Sivakarthikeyan CM and future concept and creativity is superb

முதல் படம் டிரைலர் கட்ஸ் வேறு மாதிரி இருந்த நிலையில், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினாலும், படம் ஓடவில்லை. அதனால், இந்த படத்தின் டிரைலரையே செல்ஃப் ட்ரோல் போல கொடுத்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். இந்த வாரம் மங்காத்தா ரீ ரிலீஸ் உடன் மோதும் ஹாட்ஸ்பாட் 2 மச் படம் ரசிகர்களை தியேட்டர் பக்கம் கவருமா? படம் எப்படி இருக்கு? என பிரஸ் ஷோவில் படம் பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

பிரியா பவானி சங்கர் ஷாக்கிங்: "முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் கூடுதல் முயற்சி. அதிரடி கதையமைப்பு. ஹீரோக்கள், அவர்களின் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட கதை நெத்தியடி. பிரியா பவானி சங்கர் போர்ஷன் ஷாக்கிங். பவானி ஸ்ரீ போர்ஷன் ஆச்சர்யம்.. தம்பி ராமையா சீன் கள் நெகிழ்ச்சி . திரைக்கதை விறுவிறுப்பு" என பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

அஸ்வின் ஸ்டோரி பிரில்லியண்ட்: ஸ்லீப்பிங் ஸ்டார் என ஹாட்ஸ்பாட் 2மச் படத்திலேயே கிண்டல் செய்யப்பட்ட குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் கதை ரொம்பவே பிரில்லியண்ட்டாக உள்ளது என்றும் ஒவ்வொரு கதையையும் இயக்குநர் மெனக்கெட்டு எழுதி இயக்கியுள்ளது சூப்பர் என நந்தா என்பவர் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் சிஎம்: "என்னது திருச்சி தலைநகரா? அந்த நடிகர் முதல்வர்.. இந்த நடிகர் எதிர்க்கட்சி தலைவரா? எதிர்காலத்தில் இருந்து பவானிஸ்ரீ, @BhavaniSre பேசும் விஷயங்கள் ஆச்சரியம். அவர் நடிப்பும் , கேரக்டரும் அழகு. ஒரு வித்தியாசமான துணிச்சலான முயற்சி" என்றும் மீனாட்சி சுந்தரம் இன்னொரு பதிவில் படத்தை பற்றிய விஷயங்களை கூறியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிஎம், விஜய் சேதுபதி எதிர்கட்சி தலைவர் என விக்னேஷ் கார்த்திக் எதிர்கால கதை என தனது கற்பனை குதிரைகளை பறக்கவிட்டுள்ளார்.

வெற்றி பெறுமா?: மங்காத்தா ரீ ரிலீஸ், திரெளபதி 2 உள்ளிட்ட படங்களுடன் மோதும் ஹாட்ஸ்பாட் 2மச் வெற்றி பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. வித்தியாசமான படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த ரொம்பவே வித்தியாசமான படம் பிடிக்கும் என்கின்றனர். அனைவரையும் கவருமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X