Housemates Review: ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்.. டீன்ஸ், பிளாக் ஸ்டைலில் இன்னொரு ஹாரர் - சைஃபை படம்!

Rating:
3.0/5
Star Cast: தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜு
Director: ராஜவேல்

சென்னை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான டீன்ஸ் திரைப்படம் எப்படி ஹாரர் படம் போல காட்டப்பட்டு கடைசியில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக மாறியதோ, அதே பாணியில் ஒரு அட்டகாசமான கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜவேல்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட நிலையில், படத்துக்கு மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் கிடைத்துள்ளது. கனா படத்தில் நடித்த தர்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக படம் முழுக்க முட்ட முட்ட கண்களை காட்டி பயப்படும் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் அர்ஷா பைஜு.

Housemates Review in Tamil  A New age Horror and SCifi movie turns a feel a good at the end
Photo Credit:

காளி வெங்கட் மற்றும் வினோதினி காம்போ படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளனர். காளி வெங்கட்டின் நடிப்பு எல்லாம் வேறலெவல் என்று தான் சொல்ல வேண்டும். இன்று வெளியாகி உள்ள ஹவுஸ்மேட்ஸ் படத்தின் கதை மற்றும் பிளஸ், மைனஸ் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

ஹவுஸ்மேட்ஸ் கதை: கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான பிளாக், பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான டீன்ஸ் படங்களை போலவே இன்னொரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாகி இருக்கிறது ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம். ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜு, வினோதினி மற்றும் தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சொந்த வீடு இல்லாதவன் என் பொண்ணை காதலிக்கலாமா? என ஹீரோயினின் அப்பா கேள்வி கேட்க, ஒரு செகண்ட் ஹேண்ட் ஃபிளாட்டை கஷ்டப்பட்டு வாங்கும் ஹீரோ தர்ஷன் தனது காதலியை திருமணம் செய்துக் கொள்கிறார். சொந்த வீட்டுக்கு அவர்கள் செல்ல, அங்கே ஆனந்தபுரத்து வீடு படத்தில் வருவது போல ஏகப்பட்ட அமானுஷ்ய ஆக்டிவிட்டிகள் அரங்கேறுகின்றன. இவர்களுக்கு நடப்பதை போலவே காளி வெங்கட், வினோதினி தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் குடியேறி இருக்கும் ஃபிளாட்டிலும் "ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா" என ஹாரர் ஆட்டம் களைகட்ட, இதற்கு இடையே சயின்ஸ் ஃபிக்‌ஷனை எப்படி இயக்குநர் சாமார்த்தியமாக பிளேஸ் செய்து புதுப்படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறார் என்பது தான் கதையே.

படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்தில் என்னடா வழக்கமான பேய் படத்தில் வந்து மாட்டிக்கிட்டோமோ என்கிற உணர்வை கொடுத்தாலும், அது பேய் அல்ல என்கிற இடத்தில் இருந்து படம் பிக்கப் ஆகிறது. புதிதாக இந்த படத்தில் எந்த ஜானரை இயக்குநர் தொட்டிருக்கிறார். மாநாடு படத்தில் டைம் லூப் கான்செப்ட் போல இங்கே இயக்குநர் சொல்லியிருக்கும் புது கான்செப்ட் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவும், படத்தை அனைத்து ரசிகர்களுக்கும் புரியும் படி எடுத்துச் சொன்ன விதமும் அருமை.

பிளஸ்: அதிகமாக சிஜிக்கெல்லாம் செலவு செய்யாமல், விஷுவல் டெக்னிக்ஸ் மூலம் அந்த ஹாரர் காட்சிகளை படமாக்கிய விதம். கதை மற்றும் திரைக்கதையை எழுதி அதை திரையில் கொண்டு வர இயக்குநர் போட்ட பெரும் முயற்சி படத்துக்கு பெரிய பிளஸ் ஆக தெரிகிறது. காளி வெங்கட்டின் நடிப்பு, கிளைமேக்ஸில் கனெக்ட்டான எமோஷன் காட்சிகள் என அனைத்துமே அருமை தான்.

மைனஸ்: தர்ஷனின் பர்ஃபார்மன்ஸ் இன்னமும் பெட்டராக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் ஆரம்பத்தில் சில இடங்களில் தெரிவது மைனஸ் ஆக தெரிகிறது. சில ரிப்பீட்டட் காமெடி காட்சிகளையும் குறைத்திருந்தால், இந்த ஹவுஸ்மேட்ஸ் இன்னமும் சூப்பராக இருந்திருக்கும். கண்டிப்பாக குழந்தைகளுடன் இந்த வீக்கெண்ட் என்ஜாய் பண்ணக்கூடிய வித்தியாசமான சுவாரஸ்யமான படமாக இது நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X