பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

Recommended Video

Pushpa Movie Audience Opinion | Allu Arjun, Rashmika Mandanna, Pushpa Public Review

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் அல்லு அர்ஜூன். ஆந்திர வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார் அல்லு அர்ஜூன். மேலும் ஃபகத் பாசில், சுனில், அனசுயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிகரித்தது ஹைப்

அதிகரித்தது ஹைப்

இப்படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் ஆண்களை பற்றி தவறாக சித்தரிக்கும் வகையில் வரிகள் உள்ளதாக ஆண்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்ததால் படத்தின் ஹைப் அதிகரித்தது.

களைக்கட்டிய தியேட்டர்ஸ்

களைக்கட்டிய தியேட்டர்ஸ்

இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இப்படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை அல்லு அர்ஜூனின் ரசிகர்கள கொண்டாடியுள்ளனர். புஷ்பா படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகள் பாலாபிஷேகம், பட்டாசு என களைக்கட்டியுள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

இதனிடையே புஷ்பா படம் எப்படி உள்ளது என்பது குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா படத்தை பார்த்த இந்த நெட்டிசன், அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

ஆன்டி ஃபேன்ஸுக்கும் விருந்து

ஆன்டி ஃபேன்ஸுக்கும் விருந்து

புஷ்பா படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் வருவதை பார்த்த இந்த ரசிகர் , புஷ்பா படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருவது, அல்லு அர்ஜூனின் ரசிகர் அல்லாதவர்களுக்கும் விருந்து என குறிப்பிட்டுள்ளார்.

முதல் பாதி சூப்பர்

முதல் பாதி சூப்பர்

படத்தை பார்த்த இந்த ரசிகர், புஷ்பா படத்தின் முதல் பாதி சூப்பர்... அவருடைய நண்பருடனான உரையாடல் நன்றாக வேலை செய்துள்ளது.. என குறிப்பிட்டுள்ளார்.

ஒன் மேன் ஆர்மி

ஒன் மேன் ஆர்மி

புஷ்பா படத்தின் முதல் பாதியை பார்த்த இந்த நெட்டிசன், முதல்பாதி படம் எப்படி என தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதன்பதி ஒன் மேன் ஆர்மியாக அல்லு அர்ஜூன் மொத்த படத்தையும் கைப்பற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 5க்கு 4 மதிப்பெண்களையும் கொடுத்துள்ள இவர் இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தேசிய விருது கொடுக்கலாம்

தேசிய விருது கொடுக்கலாம்

புஷ்பா படத்தின் புக்கிங்ஸ் மற்றும் படத்தின் முதல் காட்சியை பார்த்த இந்த ரசிகர், 3 நாட்களில் 300 கோடி ரூபாய் கலெக்ஷன் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும் அல்லு அர்ஜூனின் நடிப்பு வேற லெவல் என்றும், அவருடைய நடிப்புக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஒன் மேன் ஷோ

ஒன் மேன் ஷோ

புஷ்பா படத்தை பார்த்த இந்த ரசிகர், ஒன் மேன் ஷோ... அல்லு அர்ஜூன குளோயிங் ஸ்டார் என பதிவிட்டுள்ளார். மேலும் திரையரங்குகளில் மிகப்பெரிய கூட்டத்தை தன்னால் இழுக்க முடியும் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.

பொழுது போக்காகவும் இருக்கு...

பொழுது போக்காகவும் இருக்கு...

அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் ரிலீஸ் ஆன நிலையில் படத்தை பார்த்த இந்த ரசிகர், படத்தின் முதல் பாதி நல்லா இருக்கு... பெரும்பாலும் நன்றாக இருக்கிறது... போதுமான அளவு பொழுது போக்காவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X