வெறுத்துப்போச்சு.. இதுல 2வது பார்ட் வேறயா.. அனபெல் சேதுபதி படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: விஜய் சேதுபதி டாப்ஸி நடிப்பில் அனபெல் சேதுபதி படம் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் அனபெல் சேதுபதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனம்
இந்த படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பேய் படமாக இல்லாமல் காமெடி படமாக அனபெல் சேதுபதி படம் உருவாகியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் படம் குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
ஃபேண்டஸி காமெடி படம்
பிரபல பத்திரிக்கையாளரும், பட விமர்சகருமான ரமேஷ் பாலா அவரது ட்விட்டர் பக்கத்தில் அனபெல் சேதுபதி படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி அன்பெல் சேதுபதி படத்திற்கு 5க்கு 3.5 மதிப்பெண்களை வழங்கியுள்ள ரமேஷ் பாலா, படம் நல்ல ஃபேண்டஸி காமெடி என தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி தனது வித்தியாசமான ஸ்டைலால் ஸ்கோர் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். டாப்ஸி நகைச்சுவையாக நடித்திருப்பதாகவும் யோகி பாபு எக்ஸலென்ட் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் எனவும் பதிவிட்டுள்ளார். ஃபேமிலி ஆடியன்ஸுட் குழந்தைகளும் ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் ரமேஷ் பாலா.
இதுல பார்ட் 2 வேற?
அதேநேரதத்தில் நெட்டிசன்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று நெகட்டிவான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, ' படம் நடிக்கிறேன்னு மொக்க படமா பார்த்து நடிக்கிறீங்க.. ஒருபடமாவது நல்லா இருக்கா.. 50+ படம் பண்ணி என்ன ரெக்கார்டா பண்ண போறீங்க.. ஒரு படம் கூட உருப்படியா பண்ணல... இதுல பார்ட் 2 வேற கேட்குதா ' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது பாதி மோசம்
மற்றொரு ரசிகரான இவர் அனபெல் சேதுபதி முதல் பாதி ஓகே.. இரண்டாவது பாதி மோசம்.. ஆவ்ரேஜ்ஜான படம் தான் என பதிவிட்டு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
ஆவ்ரேஜ் படம் தான்
மற்றொரு ரசிகரான இவர், அனபெல் சேதுபதி படம் ஒரு டைம் பாஸ் என்டெர்டெய்னர்தான்.. பெரிதாக ஒன்றும் இல்லை.. என்னை போல் ரொம்ப போராக ஃபீல் பண்ணினால் படம் பாருங்கள்.. டாப்ஸி - யோகி பாபு காம்போ செம.. மொத்தமாக ஒரு சராசரியான படம் தான்.. என பதிவிட்டுள்ளார்.
வெறுத்துப் போச்சு.. இதுல பார்ட் 2 வேற?
படத்தை பார்த்த இந்த ரசிகர், அனபெல் சேதுபதி படம் பார்த்து வெறுத்துப் போச்சு.. இதுல பார்ட் 2 வேற என சலிப்பை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
எந்த தைரியத்துல பார்ட் 2?
அனபெல் சேதுபதி படத்தை பார்த்த இந்த நெட்டிசன், காமெடின்னு சொல்லி எடுத்திருக்காங்க.. ஆனால் காமெடியும் இல்ல... ஒரு மண்ணும் இல்ல.. எந்த தைரியத்துல பார்ட் 2 எடுக்க போறாங்க என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
1948லேயே கேபிள் வொயர்லாம் இருக்கு
அனபெல் சேதுபதி படத்தை பார்த்த இந்த நெட்டிசன், 1948லேயே ஏசி அவுட்டோர் யூனிட், கேபிள் வொயர்லாம் வச்சு அரண்மனையை கட்டிய வீரய்யா.. என நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
என்ன ரங்கா நியாயமா?
அனபெல் சேதுபதி படத்தை பார்த்த இந்த ரசிகர், ட்ரெயிலர் பார்க்கும் போதே தெரிந்தது. தெரிஞ்சும் படம் பார்த்து இப்படி நெகட்டிவ் ரிவிவ்யூ போடுறீங்களே.. என்ன ரங்கா நியாயமா என கேட்டு தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications