ஃபன் எண்டெர்டெய்னர்.. சிவகார்த்திகேயன் கேரியரில் சிறந்த படம்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் டாக்டர்!

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம் பெரும் இழுபறிக்கு பின்னர் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது.

இதனை பல நகரங்களில் உள்ள தியேட்டர்களில் செண்டை மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என திருவிழா போல் திரையரங்கு வாசல்களில் கொண்டாடியுள்ளனர் ரசிகர்கள்.

முதல் நாள் முதல் காட்சி

முதல் நாள் முதல் காட்சி

இந்நிலையில் டாக்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி டாக்டர் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும் என்றும் நெல்சன் திலீப்குமாருக்கும் இந்தப் படம் பெரும் பெயரை பெற்றுத் தரும் என்றும் கூறி வருகின்றனர்.

ஃபன் எண்டெர்டெய்னர்

ஃபன் எண்டெர்டெய்னர்

சினிமா விமர்சகரான ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில் டாக்டர் படம் ஒரு ஃபன் எண்டெர்டெயினர். டார்க் காமெடி.. எல்லா வகையான பார்வையாளர்களுக்கும் ஏற்ற படம். சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு ஏற்றது போல் நடித்திருக்கிறார். இருப்பினும் மாஸ் காட்சிகளிலும் காமெடியிலும் அவர் இன்னமும் ஸ்கோர் செய்கிறார். இது அவருக்கு முற்றிலும் மாறுபட்ட பயணம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது ரேட்டிங் என 3.5/5 மதிப்பெண்களை கொடுத்துள்ளார்.

ஏன் ஓடிடிக்கு கொடுக்கலைன்னு புரியுது

ஏன் ஓடிடிக்கு கொடுக்கலைன்னு புரியுது

டாக்டர் படத்தை பார்த்த இந்த ரசிகர், OTT நல்ல விலைக்கு

கேட்டும் ஏன் கொடுக்க வில்லை என்பது படம் பாக்கும் போது புரியும் டாக்டர் பிளாக்பஸ்டர் ஹிட் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு பிடிக்கும்

ரசிகர்களுக்கு பிடிக்கும்

மற்றொரு ரசிகரான இவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் காமெடி நன்றாக வேலை செய்துள்ளது. ஆனால் குழந்தை கடத்தலின் முக்கிய கருத்துடன், டார்க் காமெடியாக சமரசம் செய்துகொள்வது கடினம். க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்வார்கள். ஹீரோ வில்லனுக்கு இடையிலான சண்டை இன்னும் தீவிரமாக இருந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

தியேட்டரிக்கல் பிளாக் பஸ்டர்

தியேட்டரிக்கல் பிளாக் பஸ்டர்

மாஸ்டர் கர்ணன் படங்களுக்கு பிறகு டாக்டர் படம் ஒரு தியேட்டரிக்கல் பிளாக் பஸ்டர் படம். படத்தில் லாஜிக்காக சில குறைகள் உள்ளன. அதைப்பற்றி அவர்களே கண்டு கொள்ளவில்லை. நாம் ஏன்? இந்தப் படம் தியேட்டர்களில் ரசிக்க ஒரு உண்மையான வேடிக்கையான பொழுதுபோக்கு படம் என குறிப்பிட்டுள்ளார்.

கேரியரில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்

கேரியரில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்

படத்தை பார்த்த இந்த ரசிகர் பதிவிட்டிருப்பதாவது, டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ். நெல்சனிடம் இருந்து முழுக்க முழுக்க சிரிப்பு பேக்கேஜ். இப்போது வரை சிவகார்த்திகேயனின் கேரியரில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ். சூர்யாவுக்கு பிறகு டோலிவுட்டுக்கு தத்துப்பிள்ளை ஆனார் சிவகார்த்திகேயன் என பதிவிட்டுள்ளார்.

இந்த அளவுக்கு சிரித்தது இல்லை

படத்தை பார்த்த இந்த ரசிகர் பதிவிட்டிருப்பதாவது, டாக்டரை பிடித்திருக்கிறது. ரொம்ப நாட்களாக இந்த அளவுக்கு சிரித்தது இல்லை. நான் எப்படி சில எண்டெர்டெய்னர்களை மிஸ் பண்ணினேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X