கண்ணுல தண்ணீ வந்துட்டே இருக்கு... சூர்யாவின் ஜெய் பீம் படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ஜோஸ் லிஜிமோல், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Recommended Video
இந்தப் படம் அமேஸான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இருளர் இன மக்கள் சந்திக்கும் துயரங்களை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஞானவேல்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பிரிவியூ ஷோ போடப்பட்டது. இந்தப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலினும் படத்தை பார்த்து விட்டு நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மனதை கனமாக மாற்றிவிட்டது
ஜெய்பீம் திரைப்படத்தின் நினைவுகள் இரவு முழுவதும் தனது மனதை கனமாக மாற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். படத்தில் நடித்துள்ள நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.
அமேஸான் பிரைம்
இந்நிலையில் படம் அமேஸான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் படம் குறித்த தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் காட்டியமைக்கு நன்றி சூர்யா சார்.. வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
படத்தை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் இன்னும் அவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படியோ படம் அமேஸிங்... வாழ்த்துகள் சூர்யா சார் மற்றும் ஜெய் பீம் டீம் என பதிவிட்டுள்ளார்.
பேசப்படும் டாப்பிக்...
படத்தை பார்த்த இந்த நெட்டிசன், எண்ணிக்கையில்லா எமோஷன்ஸ்... பல காட்சிகளில் கண்களில் தண்ணீர் வருகிறது... ஜெய் பீம் தான் இந்த வாரம் பேசப்படும் டாப்பிக்காக இருக்கும்.. வேற லெவலில் உள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதை காண காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஜெய் பீம் சிறந்த படம் சார்
ஜெய் பீம் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், உண்மையிலேயே உங்களுக்கு ரசிகராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் சூர்யா சார். நீங்கள் தான் என்னுடைய இன்ஸ்பைரேஷன் சார்... சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதிலும் நீங்கள் தான் என் உத்வேகம்... ஜெய் பீம் சிறந்த படம் சார்... புரெடியூஸராக ஜோதிகா மேம்முக்கும் வாழ்த்துகள்.. இது போன்ற படங்களை கொடுங்கள்... என பிதவிட்டுள்ளார்.
அற்புதமான இயக்கம்..
சவுத் மூவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஜெய் பீம் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி... குறிப்பாக ஜோஸ் லிஜிமோலின் பர்ஃபார்மன்ஸ் ஆஸம். சந்தேகமே இல்லை.. ஜெய் பீம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. அற்புதமான இயக்கத்திற்கு ஞானவேல் சாருக்கு நன்றி... எங்களின் ரேட்டிங்.. 4 1/2 என குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும்
படத்தை பார்த்த இந்த நெட்டிசன், ஜெய் பீம் படம் சூர்யாவுக்கு ஜாக்பாட்தான். படத்தில் நடித்துள்ள அனைவருமே இந்த படத்தை பர்ஃபெக்ட் படமாக்கியுள்ளனர். மணிகண்டனை ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். குறைத்து மதிப்பிட்டு விட்டோம்.. சிம்பிளி ஆஸம்... என பதிவிட்டுள்ளார்.
நாட்டுக்கு தேவையான படம்
படத்தை பார்த்த இந்த நெட்டிசன், சூப்பர் படம் சூர்யா சார்... சில படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, படக்குழுவினருக்கு நன்றி... அனைவரும் பார்க்க வேண்டிய படம்... இந்தப் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்... நாட்டுக்குத் தேவையான ஒரு படம் என பதிவிட்டுள்ளார்.
கண்ணுல தண்ணி வருது..
ஜெய் பீம் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், படத்தின் ஒரு காட்சியை ஷேர் செய்து இந்த சீன்லலாம் கண்ணுல என்ன அறியாம தண்ணி வந்துட்டு இருக்கு.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











