சூப்பரா.. சுமாரா.. எப்படி இருக்கு கார்த்தியின் சுல்தான்? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: ரெமோ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகி உள்ள படம் சுல்தான்.

கைதி, தம்பி உள்ளிட்ட படங்களில் மிரட்டிய நடிகர் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில் பக்கா கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகி உள்ள சுல்தான் படம் எப்படி இருக்கு என்கிற ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காண்போம்.

தரமான பிளாக்பஸ்டர்

தரமான பிளாக்பஸ்டர்

போய் நல்லா ரெஸ்ட் எடுங்க, தரமான பிளாக்பஸ்டர் ரெடியா இருக்கு, எவன் நெகட்டிவ் ரிவ்யூ சொல்றான்னு பார்க்கலாம் என சூரரைப் போற்று புகைப்படத்தை பதிவிட்டு இந்த சூர்யா - கார்த்தி ரசிகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவ்ளோ தான் சுல்தான்

இவ்ளோ தான் சுல்தான்

படத்துக்கு பாசிட்டிவ் என்று சொன்னால் அது கார்த்தி மட்டும் தான். முதல் 15 நிமிடங்கள் படம் செம ஸ்பீடாகவும் சூப்பராகவும் செல்கிறது. இண்டர்வெல் பிளாக் பக்கா மாஸாக உள்ளது. இரண்டாம் பாதி சற்றே இழுவையாக செல்கிறது. ஸ்க்ரீன் பிளே கொஞ்சம் வீக் ஆக உள்ளது இது தான் என்னுடைய விமர்சனம் என இந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் ஆக்டிங்

ராஷ்மிகாவின் ஆக்டிங்

தமிழ் சினிமாவுக்கு சுல்தான் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்றே இந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிளைமேக்ஸ் ட்விஸ்ட் சிறப்பாக உள்ளதாகவும் தனது விமர்சனத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Recommended Video

SULTHAN Public opinion | Sulthan Review , karthi, Rashmika Mandanna | Sulthan Public Talk
இரண்டு தெலுங்கு படம்

இரண்டு தெலுங்கு படம்

சுல்தான் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து செம மசாலாவாக இருப்பதால், தமிழ் ரசிகர்களை விட அதிகமாக தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் என இந்த நெட்டிசன் கூறியுள்ளார். மேலும், இரண்டு தெலுங்கு படங்களை ஒன்றாக இணைந்து பார்த்தது போல உள்ளது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X