சந்தானம்குட் பர்ஃபாமன்ஸ்... எம்எஸ் பாஸ்கர் அல்டிமேட்.. சபாபதி படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சந்தானத்தின் சபாபதி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். கடைசியாக டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, 'குக் வித் கோமாளி' புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தள்ளிப்போன ரிலீஸ்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திரையரங்குகள் சரியாக திறக்கப்படாமல் இருந்ததால் பல படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. சில படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதோடு 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி
இதனால் திரைப் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சந்தானத்தின் 'சபாபதி' திரைப்படம் நேற்று முதல் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இடைவேளைக்கு முன்பு வரை
அதன்படி யூட்யூபரான பிரசாந்த் ரங்கசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, நல்ல கதை, ஆனால் எக்ஸ்க்யூஷனில்தான் பிரச்சனை.. இடைவேளைக்கு முன்பு வரையான நகைச்சுவை காட்சிகள் வேடிக்கை.. முழு படமும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசை என குறிப்பிட்டுள்ளார்.
கண்ணியமான படம்
சந்தானத்தின் சபாபதி படத்தை பார்த்த இந்த நெட்டிசன், கண்ணியமான படம்... சந்தானத்தின் நடிப்பு சிறப்பு... M.S.பாஸ்கர் வழக்கம் போல் அல்டிமேட்... ஒரு முறை பார்க்கக்கூடிய படம் என பதிவிட்டுள்ளார்.
2வது பாதியில் விதியின் ஆட்டம்
திரைப்பட விமர்சகரான கவுஷிக் பதிவிட்டுள்ள டிவிட்டில் சந்தானம் மிகவும் அப்பாவியாகவும், திக்குமுக்காடும் பிரச்சினையுடன் நடித்துள்ளார். அவரது கண்டிப்பான அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர்... 2 பேரும் வழக்கம் போல் சிறப்பாக நடித்துள்ளனர்.. விதியின் ஆட்டம் 2வது பாதியில் ஆரம்பம்! என சபாபதி படத்தின் முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக
சபாபதி படத்தின் இரண்டாவது பாதி குறித்த அவரது டிவிட்டில், பண சூட்கேஸை சுற்றி சுழலும் குழப்பமான காமெடி டிராமா... கிராஸ் காமெடியை தவிர்த்திருக்கணும்.. ஆனால் முதல் பாதியை விட இரண்டாவது பாதி கலகலப்பாகவும் பொழுதுபோக்காகவும் உள்ளது. நல்ல செண்டிமென்ட் இறுதியில் விதி டச் பண்ணுகிறது. சந்தானத்தின் கதாப்பாத்திரம் வழக்கத்திற்கு மாறாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
தியேட்டரில் போய் பாருங்க
சபாபதி படத்தை பார்த்த இந்த ரசிகர், சபாபதி படம் ஆஸம்... சந்தானம் பாடி லாங்குவேஜ்லேயே கலக்கியிருக்கிறார். எல்லாரும் தியேட்டரில் போய் பாருங்க.. சிரிங்க என பதிவிட்டுள்ளார்.
பார்க்க வேண்டிய படம்..
சந்தானத்தின் சபாபதி படத்தை பார்த்த இந்த நெட்டிசன், படம் நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்... முழுக்க முழுக்க பொழுது போக்கு பார்க்க வேண்டிய படம்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











