டாக்டர் முதல்பாதி தீயாய் இருக்கு.. எஸ்கே படத்திலேயே பெஸ்ட் டாக்டர்தான்.. டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அதன் முதல் பாதி குறித்த விமர்சனங்கள் டிவிட்டரில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இந்தப் படத்தில் பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். உடல் உறுப்புகளை திருடி விற்கும் கதைப்பின்னனியில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.
படம் குறித்த விமர்சனங்கள்
கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் காட்சியின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
சிரிப்பு கலவரம்.. த்ரில்லிங் ரெய்டு..
சினிமா விமர்சகரான ராஜசேகர் டாக்டர் படத்தின் முதல் பாதி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, டாக்டர் முதல் பாதி தீயாய் உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் சிறந்த முதல் பாதி.. நெல்சன் மிருகத்தனமான ஃபார்மில் உள்ளார். டாக்டர் படம் சிரிப்பு கலவரம்.. த்ரில்லிங் ரெய்டு.. இருண்ட நகைச்சுவை கொன்றுவிட்டது.. சிவகார்த்திகேயனின் பர்ஃபாமன்ஸ் சிறப்பு.. அனிருத் இசையும் வேற லெவல்.. இந்த படத்தில் எல்லாம் புதிதாக இருக்கிறது! என பதிவிட்டுள்ளார்.
டாக்டர் படம் நன்றாக உள்ளது
அவருடைய மற்றொரு பதிவில் இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறேன்.. இதுவரை டாக்டர் படம் நன்றாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
தசரா முன்கூட்டியே வந்துவிட்டது
இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில் இயக்குநர் நெல்சன் கதையை விவரிக்கும் விதம் தரம். இந்தப் படம் மென்மையானது, தனித்துவமானது, மேலும் புதியது. நெல்சன் ஒவ்வொரு நிமிடமும் டாக்டரில் நம்மை வியக்க வைக்கிறார். பிரியங்கா மேம் என் இதயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. சிவகார்த்தியேன் எப்போதும் போல் ராக் செய்துள்ளார. தசரா முன்கூட்டியே வந்துவிட்டது என பதிவிடப்பட்டுள்ளது.
டாக்டர் பிளாக் பஸ்டர் படம்
டாக்டர் படத்தை பார்த்த இந்த ரசிகர், சிவகார்த்திகேயன் படங்களிலேயே டாக்டர் படம் சிறந்த படமாக இருக்கும். உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் போய் படத்தை பாருங்கள்.. சிரிப்பு.. சிரிப்பு... சிரிப்பு மட்டும் தான்... வெல்டன் நெல்சன்.. பீஸ்ட்டுக்காக காத்திருக்கிறோம். டாக்டர் பிளாக் பஸ்டர் படம் என குறிப்பிட்டுள்ளார்.
படம் முழுக்க டார்க் காமெடி
மற்றொரு ரசிகரான இவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் டாக்டர் படம் சிவகார்த்திகேயன் அண்ணாவின் கேரியரில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் படம்.. படம் முழுக்க டார்க் காமெடி.. பல பகுதிகளில் ஒன் லைனர்ஸ் நன்றாக வேலை செய்திருக்கிறது. யோகி பாபு மற்றும் கிங்ஸ்லே நகைச்சுவை செம.. சூப்பர் படம்.. தியேட்டரில் மிஸ் பண்ணிடாதீங்க.. என பதிவிட்டுள்ளார்.
குவியும் பாஸிட்டிவ் விமர்சனங்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு பின் வெளியாகி இருக்கும் டாக்டர் படம் முதல் பாதியிலேயே பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் படங்களில் டாக்டர்தான் பெஸ்ட் என்று கூறி வருகின்றனர். இதனிடையே டிவிட்டரில் #Doctor #Sivakarthikeyan ஆகிய ஹேஷ்டேக்குகளும் ட்ரென்ட்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











