போலீஸாக சமுத்திரக்கனி... ரைட்டர் படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள ரைட்டர் படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Writer Public Review | P. Samuthirakani | Franklin Jacob | Pa. Ranjith | #Writer | Filmibeat Tamil

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய உதவி இயக்குநரான பிராங்க்ளின் ஜேக்கப்பின் 'ரைட்டர்' திரைப்படத்தை தயாரித்துள்ளார் பா ரஞ்சித். அந்தப் படம் திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமுத்திரக்கனி லீடிங் ரோல்

சமுத்திரக்கனி லீடிங் ரோல்

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காவல்துறையில் உள்ள அதிகாரப் போக்கு

காவல்துறையில் உள்ள அதிகாரப் போக்கு

காவல்துறையில் புரையோடி இருக்கும் அதிகாரப் போக்கு மற்றும் சாதிய பாகுபாடுகள் குறித்த விரிவாக பேசியுள்ளது ரைட்டர் திரைப்படம். இந்நிலையில் ரைட்டர் படத்தை பார்த்த திரைப்பட விமர்சகரான எல்எம் கவுஷிக் படத்திற்கு 5க்கு 3.4 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். மேலும் வித்தியாசமான மறக்கமுடியாத டிஸ்டர்பிங் க்ளைமேக்ஸ் என்றும்.. இயக்குநர் பிராங்க்ளின் திறமையை பார்க்க முடிகிறது. பா ரஞ்சித்தின் மற்றொரு தரமான தயாரிப்பு.. முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சிக்கலான வழக்கில் சிக்கிய மூத்த காவலராக சமுத்திரக்கனி சிறப்பு என குறிப்பிட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் துஷ்பிரயோகம்

காவல் நிலையத்தில் துஷ்பிரயோகம்

மற்றொரு விமர்சகரான ரமேஷ்பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில்,
மூத்த காவலர்கள் ஜூனியர் காவலர்களை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.. ஆண் மற்றும் பெண் இருவரும்..
போலீஸ்காரர்கள் எப்படி போலி ஆதாரங்களை பயன்படுத்தி அப்பாவிகளை பிடிக்கிறார்கள்... விசாரணை மற்றும் ஜெய்பீம் வரிசையில் காவல் துறையில் உள்ள மோசமானவர்களை எப்படி அம்பலப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான நடிப்பு

அற்புதமான நடிப்பு

இதேபோல விமர்சகர் ஆஷா மீரா அய்யப்பன் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த வாரம் என்ன ஒரு நல்ல வாரமாக இருக்கும். சொல்லப்படாத கண்ணோட்டங்களை மிக உண்மையான முறையில் திரையில் கொண்டு வந்துள்ள Writer எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமுத்திரக்கனியின் நடிப்பு அற்புதம் என பதிவிட்டுள்ளார்.

உணர்ச்சிகரமான சவாரிக்கு உதாரணம்

உணர்ச்சிகரமான சவாரிக்கு உதாரணம்

ரைட்டர் படத்தை பார்த்த இந்த ரசிகர், ரைட்டர் திரைப்படம் நல்ல எழுத்து மற்றும் உணர்ச்சிகரமான சவாரிக்கு நல்ல உதாரணம்... அருமையான வேலை... ஆனால் கொஞ்சம் தொய்வு.. இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்... நடிகர்களின் நடிப்பு நேர்த்தியாக உள்ளது.. தவற விடாதீர்கள்... என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X