The Sheep Detectives Review: தி ஷீப் டிடெக்டிவ்ஸ் விமர்சனம்.. வீக் எண்டில் பார்க்கலாமா? வேண்டாமா?

சென்னை: ஹாலிவுட் படங்கள் என்றாலே நம்ம ஊர் ரசிகர்கள் பெரும்பாலும் அதிரடி படங்கள், சூப்பர் ஹீரோ படங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். ஆனால் அப்படி அதிரடிப் படங்களில் நடித்து உலக அளவில் புகழ் பெற்ற நடிகர்கள் திடீரென ஒரு நார்மலான கதையில் நடித்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுவார்கள். அப்படி எக்ஸ் மேன் படங்கள், வேன் ஹெல்சிங், பிரிஸ்டீஜ் உள்ளிட்ட படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற ஹக் ஜாக்மேன் நடித்த படம் தான், தி ஷீப் டிடெக்டிவ்ஸ். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ள படம் இது. இதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஒரு சாதாரண ஆடு வளர்க்கும் ஜார்ஜ் ஆக இருக்கிறார் கதாநாயகன். மிகவும் சிறிய கிராமம், அதில் இருக்கும் சில ஆட்டுப் பண்ணைகளில் அவரது ஆட்டுப் பண்ணையும் ஒன்று. தனது ஆடுகளுக்கு பெயர் சூட்டுவது, ஒவ்வொன்றின் மீதும் தனித்தனியே அக்கறை செலுத்துவது, தீவனங்கள் அளிப்பது, மாலையில் ஆடுகள் அனைத்திற்கும் க்ரைம் திரில்லர் நாவல்களை, டிடெக்டிவ் கதைகளைச் சொல்வது என்பதுதான் அவரது வாடிக்கை.

Hugh Jackman s The Sheep Detectives Review Whole Movie Gives Feel Good Emotions Prime Video Hits Again

கதை & திரைக்கதை: அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருடனும் அவருக்கு தனிப்பட்ட பழக்கம் உள்ளது. குறிப்பாக ஒருவருடன் நெருங்கிய நட்பு, ஒருவர் மீது காதல், ஒருவர் மீது பகை என இந்த உறவு நீளுகிறது. ஆடுகளுக்கும் மிகவும் பிடித்த பண்ணைக்காரனாக இருக்கிறார் ஜார்ஜ். இப்படி இருக்கையில் ஒரு நாள் இரவு ஜார்ஜ் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதை அந்த ஊரில் உள்ள காவல் அதிகாரி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அவருக்கு ஜார்ஜ் வளர்க்கும் ஆடுகள் பல்வேறு வகைகளில் உதவுகிறது. இறுதியாக கொலைகாரனை கண்டுபிடித்தாரா இல்லையா? ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு அந்த ஆடுகளுக்கு என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

Hugh Jackman s The Sheep Detectives Review Whole Movie Gives Feel Good Emotions Prime Video Hits Again

படம் எப்படி இருக்கு?: இயக்குநர் கைல் பால்டா தனது அட்டகாசமான இயக்கத்தில் ஒரு தரமான ஃபீல் குட் படத்தைக் கொடுத்துள்ளார். படம் முழுக்க ஆடுகள் பேசுவது, அதற்கான தமிழ் டப்பிங் என எல்லாமே சிறப்பு. தமிழ் டப்பிங் செய்த கலைஞர்களுக்கு பாராட்டுக்கள். ஒரு தரமான ஃபீல் குட் படம் பார்த்த திருப்தி. கிறிஸ்ட்டோ பெக்கின் இசை இந்த படத்திற்கு மிகவும் பக்கபலம். அதேபோல் அனிமேஷன் காட்சிகளும் மிகவும் அற்புதம். ஒவ்வொரு ஆட்டிற்கும் வித்தியாச வித்தியாசமான உடல் அமைப்பை கொடுத்து, அந்த கதாபாத்திரங்களை கச்சிதமாக உருவாக்கிக் கொடுத்தது அருமை.

வீக் எண்ட் விருந்துக்கு ஆகுமா?: மொத்தத்தில் இந்த வார வீக் எண்டில் ஒரு ஜாலியான அதே நேரத்தில் ஒரு ஃபீல் குட் படத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படும் ரசிகர்களுக்கு தி ஷீப் டிடெக்டிவ்ஸ் ஒரு நல்ல தேர்வு. படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் பார்க்கலாம்.

Hugh Jackman s The Sheep Detectives Review Whole Movie Gives Feel Good Emotions Prime Video Hits Again

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X