Identity Review: அஜித் ஏமாற்றினாலும் ஜனவரியில் படத்தை இறக்கிய த்ரிஷா.. ஐடென்டிட்டி விமர்சனம் இதோ!

நடிகர்கள்: டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய்
இசை: ஜேக்ஸ் பிஜோய்
இயக்கம்: அகில் பால், அனாஸ் கான்
ரேட்டிங்:

Rating:
3.0/5
Star Cast: டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய் இசை: ஜேக்ஸ் பிஜோய்
Director: அகில் பால், அனாஸ் கான்

சென்னை: ஜனவரி 10ம் தேதி அஜித் குமார், த்ரிஷா நடித்த விடாமுயற்சி படம் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் லைகா நிறுவனம் அல்வா கொடுத்துவிட்டது. அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் பொங்கல் பண்டிகைக்கு மோதப் போகின்றன என்றெல்லாம் பில்டப் பண்ணி கடைசியில் உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என இரண்டு படங்களும் வெளியாகவில்லை.

அஜித் ஏமாற்றினால் என்ன? நான் உங்களை கைவிட மாட்டேன் என ஜனவரி 2ம் தேதியே த்ரிஷா நடித்த ஐடெனடிட்டி திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு செம த்ரில்லர் அனுபவத்தை கொடுத்துள்ளது. மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு திரைப்படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதே அளவுக்கு இந்த படமும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

identity review  trisha  tovino thomas

இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனாஸ் கான் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பு மிரட்டியதா? டொவினோ தாமஸுக்கு வெற்றி கிடைத்ததா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே முழுமையாக பார்க்கலாம் வாங்க..

ஐடென்டிட்டி கதை: காமக் கொடூரர்கள் நிறைந்த உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. துணி மாற்றும் அறையில் கூட திருட்டுத்தனமாக ரகசிய கேமராவை வைத்து பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து பார்த்து ரசிக்கும் காமுகனை தேடிக் கண்டுபிடித்து ஒருவர் அவனை எரித்துக் கொள்கிறார். அங்கே நடந்த சம்பவத்தை ஆலிஷா (த்ரிஷா) பார்த்துவிடுகிறார். ஆனால், அவருக்கு ஃபேஸ் பிளைண்ட்னஸ் எனும் பார்வை குறைபாடு இருக்க, அவர் சொல்லும் அடையாளங்களை வைத்து அந்த கொலையாளியை கண்டுபிடிக்க உதவும் ஆர்ட்டிஸ்ட்டாக ஹரன் (டொவினோ தாமஸ்) வருகிறார். த்ரிஷா சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து வரையும் உருவம் அப்படியே ஹீரோ டொவினோ தாமஸின் உருவமாக இருக்க அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் ட்விஸ்ட்டான கதை.

identity review  trisha  tovino thomas

படம் எப்படி இருக்கு?: தமிழில் தூள் கிளப்பி வரும் த்ரிஷா மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வருடம் த்ரிஷாவுக்கு ஜாக்பாட்டாக அமையவுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே மலையாளப் படம் வெளியாகி உள்ளது. டொவினோ தாமஸ், த்ரிஷா மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் வினய் இந்த மூன்று பேரை சுற்றித் தான் கதை நகர்கிறது. முதல் பாதி முழுக்க இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக படம் சூடு பிடிக்க 2வது பாதியில் தேவையில்லாத இடங்களுக்கு படத்தின் கதையை சுற்ற விட்டு இயக்குநர்கள் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டனர்.

பிளஸ்: ஃபேஸ் பிளைண்ட்னஸ் நோயால் பாதிக்கப்படும் த்ரிஷா மட்டுமே ஐ விட்னஸாக இருக்க காமுகனை எரித்த கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்க உதவுகிறார். அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு குற்றவாளியை வரையும் டொவினோ தாமஸ் ஏன் தனது முகத்தையே வருகிறார் என்கிற ட்விஸ்ட்டுகள் நிச்சயம் ரசிகர்களுக்கு தியேட்டரில் தீனி தான். அதே போல அந்த ஓடும் விமானத்தில் நடக்கும் சம்பவம் செம ஹைலைட். ஜேக்ஸ் பிஜோய் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துமே சரியாக அமைந்துள்ளது.

identity review  trisha  tovino thomas

மைனஸ்: த்ரில்லர் படங்களில் அதிகமான லாஜிக் மீறல்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். மசாலா படங்கள் என்றால் எப்படி இருந்தாலும் ரசிப்பார்கள். ஆனால், மலையாள த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ஐடென்டிட்டி படத்தில் இயக்குநர்கள் எதை உருட்டினாலும் பார்ப்பார்கள் என நினைத்து எழுத்து போர்ஷனில் கோட்டை விட்டது தான் படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை மட்டும் கவனித்திருந்தால் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே டொவினோ தாமஸ், த்ரிஷாவுக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக இந்த ஐடென்டிட்டி அமைந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X