Idhayam Murali Bule Sattai Maran Review: லொக்கேஷன் தான் மாறுது கதை நகரல! இதயம் முரளி ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூவ்

சென்னை: அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், தமன், டிராவிட், ஃபகத் ஃபாசில் என பலரும் நடித்துள்ள படம் இதயம் முரளி. படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது விமர்சனத்தில், " படத்தின் கதை என்று எடுத்துக் கொண்டால் ரொம்பவும் சுமாரான கதை தான். அதை விட சுமாரான திரைக்கதையை எடுத்து வைத்துள்ளார்கள். ஒரு நல்ல திரைக்கதை என்பது கதையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும், அதுதான் சரியான திரைக்கதையாக இருக்கும். இந்த படத்தில் அடுத்ததடுத்த கட்டத்திற்கு கதை நகரவேயில்லை, இன்னும் சொல்லபோனால் கதை நகரவேயில்லை.

Idhayam Murali Blue Sattai Maran Review He Slams Screenplay and Appreciates Cinematography

அடுத்தடுத்த காட்சிகள் என்று அடுத்தடுத்த லொக்கேஷனைத்தான் காட்டி உள்ளார்களே தவிர, கதை நகரவில்லை. இந்த லொக்கேஷனில் எப்போதும் ஒரு 10 பேர் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களே பேசி அவர்களே காமெடி என்று சிரித்துக் கொள்கிறார்கள். படத்திற்கு இதயம் முரளி என்று பெயர் வைத்துள்ளார்கள். இதயம் படத்தில் கதாநாயகன் காதலித்தாலும் கடைசி வரை காதலைச் சொல்லவே மாட்டார், அதனால் தான் அந்த டைட்டிலை இந்த படத்திற்கு வைத்துள்ளார்கள்.

இதைக் கூட செய்யமாட்டாங்களா?: ஆனால் இதயம் படம் வெளியான கால கட்டம் வேறு, இப்போது ஒரு பெண்ணை பிடித்திருந்தால் போய் சொல்ல வேண்டியது தானே? கூடவே நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மூலமாவது சொல்லலாமே என்று பலரும் கேட்கிறார்கள். சிறிய சிறிய கதாபாத்திரத்திற்கும் நன்கு மக்களுக்குத் தெரிந்த நடிகர்களை நடிகைகளை நடிக்க வைத்து, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டயலாக்குகள் பேச வைத்து, படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

Idhayam Murali Blue Sattai Maran Review He Slams Screenplay and Appreciates Cinematography

இதுதான் பெஸ்ட்: படத்தில் குறிப்பிடும் படியாக சில காட்சிகள் நன்றாகவே உள்ளது. சுமார் நான்கு முதல் ஐந்து காட்சிகள் நன்றாக உள்ளது. ஃபகத் ஃபாசிலைக் கூட்டி வந்து வழக்கம் போல் வேஸ்ட் செய்து வைத்துள்ளார்கள். படத்தை ஓரளவுக்கு உட்கார்ந்து பார்க்க முடிந்ததற்கு காரணம், படத்தின் ஒளிப்பதிவு தான். நன்றாக செலவு செய்து படத்தை எடுத்துள்ளார்கள். ஆனால் கதாபாத்திரங்களுடன் கனெக்ட் ஆக முடியவில்லை" என்று தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவரது இந்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X