Indian 2 Positive Review: இந்தியன் 2 படத்தின் மூலம் என்ன சொல்ல வராரு ஷங்கர்.. எதெல்லாம் சூப்பர்!
சென்னை: இந்தியன் தாத்தாவின் மறைந்த மகன் சந்துருவின் மகனாகத்தான் சித்தார்த்தை காட்டப் போறாங்களா? என்கிற யூகங்கள் மற்றும் மாஸ்க்கை கழட்டி விட்டு சித்தார்த் தான் இந்தியன் தாத்தா எனக் கூறுவாரா? என்கிற யூகங்களுக்கு எல்லாம் ஷங்கர் 'நோ’ சொல்லி மறுத்து விட்டார்.
இந்தியன் படத்தோடு அவரது குடும்பம் எல்லாம் என்ன ஆனது என்பதை அப்படியே விட்டு விட்டு இந்தியன் தாத்தா இப்போ வந்தா எப்படி இருக்கும் என்கிற கதையை கையில் எடுத்துக் கொண்டு அதற்கு எப்படியெல்லாம் திரைக்கதை பண்ணலாம் என்கிற ஐடியாக்களை உருவாக்கி இந்த படத்தை ஷங்கர் உருவாக்கியுள்ளார்.

2.0 படத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என்கிற கருத்தை முன் வைத்த போதே ரசிகர்கள் அதை கலாய்த்தனர். இந்நிலையில், அதை விட ஒரு படி மேல் சென்று அதற்கும் மேல் கருத்து சொல்லியிருக்கிறார் ஷங்கர். அது கசக்கத்தான் செய்யும். ஆனால், அதன் நோக்கம் புரிந்து கொண்டால் நிச்சயம் இந்தியன் 2 படமும் பிடிக்கும்.
28 ஆண்டுகளாக ஒழியாத ஊழல்: இந்தியன் படம் வந்து 28 ஆண்டுகள் ஆன பின்னர், மீண்டும் இந்தியன் தாத்தா கம்பேக் ஆன போதும் ஊழல் ஒழியவில்லை என்றும் நோய் முற்றிய பின்னர் மருந்து செலுத்தினால் தான் நன்றாக இருக்கும் என இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியாவுக்கு வர சம்மதம் சொல்லும் அறிமுக காட்சிகள் சிறப்பாகவே இருந்தன.

கவனிக்க வைத்த காமன் மேன்: இந்தியன் தாத்தா வருகைக்கு முன்பாக சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் ’பார்க்கிங் டாக்ஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி காமன் மேன் எனும் கார்ட்டூன் மூலம் தப்புகளை ட்ரோல் செய்யும் அந்த போர்ஷன் கதைக்கு தேவையான ஒன்றாகவே உருவாக்கப்பட்டு இருந்தது.
கமல்ஹாசன் நடிப்பு: 100 வயதுக்கும் மேலான நபராக இருந்தாலும், வர்மக் கலையை கரைத்துக் குடித்த ஆசானாக தாய்பெய் நகரில் வர்மக் கலையை சொல்லிக் கொடுத்து வரும் சேனாபதியாகவும் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பி வந்து நேதாஜி சிலையை பார்த்து பூரித்துப் போவதும், இங்கே உள்ள மக்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என நினைப்பதும், சோஷியல் மீடியாவில் ஒரு ஹாஷ்டேக் அப்படியே நெகட்டிவ் ஹாஷ்டேகாக மாறும் போது இந்தியன் தாத்தாவே வேண்டாம் என துரத்தும் மனநிலைக்கு மாற்றப்படும் போது கமல்ஹாசன் நடிப்பு அந்த ப்ராஸ்தெடிக் மேக்கப்பையும் தாண்டி வெளிப்படுவது தான் சிறப்பு.

மாற்று வழி: நேதாஜி வழியில் நானும், காந்திய வழியில் நீங்களும் செல்லுங்கள் என இளைஞர்களை இந்தியன் தாத்தா தூண்டி விடுவது படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டான காட்சியாக மாறுகிறது. ஆனால், அதுவே கடைசியில், ஒரு கட்டத்துக்கு மேல், இளைஞர்களால் கடைபிடிக்க முடியாது என்பதையும் ஷங்கர் இறுதியில் உணர்த்துகிறார். இந்தியன் 3 படத்தில் எப்படி இளைஞர்கள் இதயத்தில் இந்தியனை விதைக்கப் போகிறார் என்பதை முழுவதுமாக பார்த்தால் தான் புரியும். சமுத்திரகனியின் மகனாக வரும் சித்தார்த்துக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே நடக்கும் அந்த எமோஷனல் காட்சிகள் முதல் பாதி டல் அடித்தாலும், இரண்டாம் பாதியை பார்க்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications











