Indian 2 X Review: இந்தியன் 2 ட்விட்டர் விமர்சனம்.. தாத்தா தாறுமாறா?.. இல்லை தடுமாறுனாரா?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்த நிலையில், சோஷியல் மீடியாவில் முதல் சீனில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை படம் எப்படி இருக்கிறது என வழக்கம் போல நெட்டிசன்கள் விமர்சனங்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர்.
28 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்தியன் படத்தின் 2ம் பாகமாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். பிக் பாஸ் முதல் சீசனின் போது அறிவிக்கப்பட்ட இந்த படம் 7 சீசன்களும் முடிந்த நிலையில், ஒருவழியாக பல போராட்டங்களை தாண்டி கடைசி நேரத்தில் வர்மக் கலை ஆசான் தொடுத்த வழக்கையும் தாண்டி படம் வெளியாகி இருக்கிறது.

தியேட்டர்களில் விக்ரம் படத்தை கொண்டாடிய கமல்ஹாசன் ரசிகர்கள் இந்தியன் 2 படத்தை கொண்டாடாமல் இருப்பார்களா? "தாத்தா வராரு கதற விடப் போறாரு" என டிஜே எல்லாம் வைத்து வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் இந்த படத்தை பற்றி சொல்லி வரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை இங்கே பார்க்கலாம்.
இந்தியன் 2வுக்கு வெற்றி: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படத்துக்கு நிச்சயம் வெற்றிக் கிடைக்கும். இந்த படத்தில் அனிருத் இசையை தாண்டி முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான் இசையும் இருப்பதாக ஷங்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியன் 2 கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தாத்தா வந்துட்டாரு: அமெரிக்காவில் இந்தியன் 2 படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்த ரசிகர்கள் தாத்தா வந்துட்டாரு என்றும் கமல்ஹாசன் சார் ஒரு லிவிங் லெஜண்ட் என்றும் ஃபயர் விட்டு வருகின்றனர். வட இந்தியாவுக்கும் சென்று இந்த முறை இந்தியன் தாத்தா அநீதிகளையும் ஊழல்களையும் களையெடுக்க களமிறங்கியுள்ளார்.

கப்பலேறி போயாச்சு பிஜிஎம்: இந்தியன் தாத்தா கமல்ஹாசனை பாபி சிம்ஹா மற்றும் அதிரடி படையினர் கைது செய்வதற்கு முன்னதாக சோஷியல் மீடியாவில் இந்தியன் தாத்தாவுக்கு எதிராக குவியும் கமெண்ட்டுகளால் அவர் மனம் உடைந்து நடந்து செல்லும் போது "கப்பல் ஏறி போயாச்சு" பிஜிஎம் ஒலிக்கும் போது தியேட்டரில் ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைவதாக பதிவிட்டுள்ளனர்.

கருத்து கந்தசாமி: இந்தியன் 2 படத்தில் ஷங்கர் ஏகப்பட்ட நீண்ட வசனங்களை வைத்து ரசிகர்களை ரொம்பவே சோதித்து விட்டார். படம் பல இடங்களில் தொய்வாக உள்ளது. ஷங்கரின் பிரம்மாண்ட காட்சிகள் மட்டுமே பார்க்கும்படி உள்ளன. கமல்ஹாசன் என்னதான் எஃபோர்ட் போட்டு நடித்தாலும், இந்தியன் 2 போர் அடிக்கிறது என வெங்கி ரிவ்யூஸ் என்பவர் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

கிளைமேக்ஸ் ட்விஸ்ட் செம: இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் தாறுமாறாக இருக்கிறது என்றும் இந்தியன் 3 படத்துக்கான டிரைலர் கடைசியில் வருவது படத்திற்கான பலம். அதை பார்க்கவே ரசிகர்கள் நிச்சயம் இந்தியன் 2 படத்துக்கு வருவார்கள் என இந்த ரசிகர் இந்தியன் 2 படத்துக்கு ஃபயர் விட்டுள்ளார்.

லைகாவுக்கு பட்டை தான்: இந்தியன் 2 படத்தின் முதல் பாதியே சிறப்பாக இல்லை என்றும் ஒரே பில்டப்பில் தான் படம் நகர்கிறது. ஃபர்ஸ்ட் ஹாஃபிலேயே போட்டான் பட்டையை லைகாவுக்கு என ரஜினிகாந்த் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தாத்தா தாறுமாறா அல்லது தடுமாறினாரா என்பது குறித்த முழுமையான விமர்சனம் விரைவில் தமிழ் பிலிமிபீட்டில் வெளியாக உள்ளது.



Click it and Unblock the Notifications











