Inga Naan Thaan Kingu Review: சந்தானத்துக்கு சக்சஸா? சறுக்கலா?.. ’இங்க நான் தான் கிங்கு’ விமர்சனம்!

Rating:
2.5/5

நடிகர்கள்: சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா
இசை: டி. இமான்

நேரம்: 2 மணி நேரம் 12 நிமிடங்கள்

இயக்கம்: ஆனந்த் நாராயணன்

சென்னை: தொடர்ந்து காமெடி படங்களில் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம். இந்த ஆண்டு கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' ரசிகர்களை நல்லாவே சிரிக்க வைத்தது. இந்நிலையில்,, இந்த வாரம் வெளியான 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? படத்தின் கதை எப்படி இருந்தது? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே காணலாம்.

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் மே 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு பெரியளவில் எல்லாம் சந்தானம் புரமோஷன் செய்யவில்லை.

Inga Naan Thaan Kingu Review in Tamil

கடன் வாங்கக் கூடாது என்பதற்காக கடன் வாங்கி எடுத்த படம் என பிரஸ் ஷோவில் அவர் பேசியது நேற்று தீயாக பரவியது. இந்நிலையில், படம் போட்ட பணத்தை அள்ளுமா? என்பது சந்தேகம் தான்.

'இங்க நான் தான் கிங்கு' கதை: திருமணத்துக்காக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 25 லட்சத்துக்கு வீடு ஒன்றை சந்தானம் வாங்குகிறார். அந்த கடனை அடைக்கும் அளவுக்கு வசதியான குடும்பத்தில் பெண்ணை பார்த்து திருமணம் செய்ய நினைக்கும் அவருக்கு ஜமீன் வீட்டு பெண்ணே கிடைக்கிறது. ஆனால், அந்த ஜமீனுக்கு 10 கோடி ரூபாய் கடன் இருப்பதை அறிந்து ஆரம்பத்திலேயே அப்செட் ஆகிறார் சந்தானம். ஒரு ஆள்மாறாட்ட பிரச்சனையில் தீவிரவாதி ஒருவரை சந்தானம் குடும்பம் போட்டுத் தள்ள அதன் பின்னர் என்ன ஆகிறது என்பது தான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: படம் பணத்தை மையமாக வைத்து இப்படியே நகர்ந்திருந்தால் கூட ஓரளவுக்கு க்ளிக் ஆகியிருக்கும். அதில் இருந்து டேக் டைவர்ஷன் எடுத்து தீவிரவாதி கதைக்கு சென்ற இடத்தில் தான் பிரச்சனை ஆரம்பமானது. அறிமுக இயக்குநர் படம் என்பதால் பல இடங்களில் கன்டினியூட்டி மிஸ்ஸிங், கனெக்‌ஷனே இல்லாமல் நடிகர்கள் படத்தை விட்டு விலகி நடிகர்களாகவே தெரிவது மற்றும் துளி கூட லாஜிக் பார்க்கக் கூடாது என எடுத்திருப்பது என படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை டல்லாகவே போகிறது.

பிளஸ்: சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா ஒரு சில இடங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். சந்தானத்தின் ஒன் லைனர்கள் பல இடங்களில் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. டி. இமானின் இசையில் 'குலுக்கு குலுக்கு', 'மாயோனே' பாடல்கள் நல்லா இருக்கு. பார்பி படத்தின் எஃபெக்ட்டில் அமைக்கப்பட்ட பாடலில் ஜீவன் இல்லை. விவேக் பிரசன்னாவின் நடிப்பு மட்டுமே இந்த படத்தில் கொஞ்சம் ஆறுதல் என்று சொல்லலாம்.

மைனஸ்: படம் முழுவதும் ஏகப்பட்ட மைனஸ்கள் உள்ளன. தீவிரவாதிகளாக காட்டும் நபர்கள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வானை நோக்கி சுடும் காட்சிகள் எல்லாம் கடுப்பை கிளப்புகிறது. முனிஷ்காந்த் டிராக் எல்லாம் சுமாரான ரைட்டப். பக்கத்து வீட்டு ஐட்டம் பெண்ணாக வரும் நபர், அவருடைய தோழியாக வரும் சினிமா பைத்தியம் மற்றும் அவர்கள் காஸ்ட்யூம் எல்லாம் குழந்தைகள் கூட பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. சுமாரான படத்தில் சில இடங்களில் சந்தானம் மட்டுமே சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார். படத்தில் அவர் சொல்வது போலவே படமே கிரிஞ்சாகத்தான் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X