Inga Naan Thaan Kingu Review: கடனை அடைத்தாரா சந்தானம்?.. ’இங்க நான் தான் கிங்கு’ ட்விட்டர் விமர்சனம்
சென்னை: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமைய்யா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள 'இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? இல்லையா? என்கிற கேள்விக்கு ட்விட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறினாலும் சந்தானம் தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்து மட்டுமே மகிழ்ச்சியடைவேன் என காமெடி படங்களை கொடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ’டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்த நிலையில், ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் என்ன செய்தது என ரசிகர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்கலாம் வாங்க..
டைமிங் நல்லா இருக்கு: சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் கலக்கலாக இந்த படத்தில் வொர்க்கவுட் ஆகியிருக்கிறது என ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். சந்தானத்தை தாண்டி தம்பி ராமைய்யா மற்றும் பால சரவணன் காமெடி காட்சிகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டி உள்ளனர்.
மீண்டும் மீண்டும் ஹிட்: வடக்குப்பட்டி ராமசாமி படத்தைத் தொடர்ந்து 'இங்க நான் தான் கிங்கு’ திரைப்படமும் வெற்றிப் படம் தான் என கயல் தேவராஜ் ட்வீட் போட்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிட் என்றும் சந்தானம் காட்டில் அட மழை என அவர் படத்திற்கு 4 ரேட்டிங் கொடுத்து பாராட்டி தள்ளியிருக்கிறார்.
விக்ரம் சீன் இருக்கு: மறைந்த நடிகர் மனோபாலாவை வைத்து விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் சீன் ஸ்பூஃப் செய்திருப்பார்கள், தியேட்டரில் ஒரே குபீர் மொமண்ட் என இந்த நெட்டிசன் ஸ்பாய்லர் செய்துள்ளார்.
கமலா சினிமாவில் சந்தானம்: 'இங்க நான் தான் கிங்கு’ படத்தை ரசிகர்களுடன் திடீரென கமலா சினிமாஸில் சந்தானம் பார்த்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகி உள்ளது. காமெடி ரைடாக படம் இருப்பதாக பலரும் பாராட்டி உள்ளனர்.
சிரிப்பு சரவெடி: ரமேஷ் பாலா இந்த படத்தை பார்த்து விட்டு ரோஃபல் கலாட்டா என கமெண்ட் போட்டுள்ளார். மேலும், படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வேறலெவலில் ரமேஷ் பாலா புரமோட் செய்து வருகிறார்.
லாஜிக்கே இல்லை பாஸ்: சந்தானத்திற்கு இருக்கும் கடனை அடைக்க திருமணம் செய்துக் கொள்ள ஜமீன் பரம்பரையை சேர்ந்த பெண்ணை பார்க்கிறார். ஆனால், திருமணத்துக்கு பிறகு தான் ஜமீனுக்கே பல கோடி கடன் இருப்பது தெரியவருகிறது. அந்த கடன் சுமையும் சேர்ந்து சந்தானம் தலையில் விழும் போது தேவையில்லாமல் ஒரு கொலை பழியும் விழுகிறது. இதில், இருந்து எப்படி சந்தானம் தப்பிக்கிறார். தனது கடனை அடைத்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. பல இடங்களில் லாஜிக்கே இல்லையென்றாலும் காமெடி மேஜிக் வொர்க்கவுட் ஆகியுள்ளதாக கூறுகின்றனர். இந்த படமாவது சந்தானத்துக்கு நல்ல வசூலை கொடுக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











