Irugapatru Twitter Review: இந்த வாரம் ஃபீல் குட் மூவி பார்க்கணுமா.. இறுகப்பற்று ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: Irugapatru Review - வடிவேலுவை வைத்து தெனாலி ராமன், எலி உள்ளிட்ட படங்களை இயக்கி சினிமாவில் இருந்தே பல ஆண்டுகள் காணாமல் போன இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த் மற்றும் அபர்ணதி நடிப்பில் உருவாகி உள்ள காதல், விவாகரத்து, மீண்டும் காதல் டிராமா படம் தான் இறுகப்பற்று.
அக்டோபர் 5ம் தேதி பல படங்களுக்கு மத்தியில் வெளியாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது.

இந்த படத்துக்கு சினிமா பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பொது மக்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
ஃபீல் குட் படம்: இந்த வாரம் கத்தி, ரத்தம், சத்தம் எல்லாம் இல்லாமல் அமைதியா ஒரு ஃபீல் குட் ஃபேமிலி டிராமா படம் பார்க்க நினைத்தால் தாராளமாக இறுகப்பற்று படத்தை சென்று பார்க்கலாம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த படத்திற்கு தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார்.

ரொம்ப லெந்த் பாஸ்: விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை தனது விமர்சனத்தில் படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, நல்ல திரைக்கதை, நல்ல எழுத்து, இயக்கம், டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங்காவே இருக்கு, ஆனால், மூன்று பேரின் காதல், திருமணம் மற்றும் விவாகரத்து என்பதால் ரொம்ப லெந்தா போகுது, எடிட்டர் கொஞ்சம் கருணை காட்டி எடிட் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என விமர்சித்துள்ளார்.

பிரபலங்கள் விமர்சனம்: இறுகப்பற்று படத்தின் செலிபிரிட்டி ஷோவில் கலந்து கொண்டு படம் பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் ரொம்ப பர்ஃபெக்ட்டான படம் என்றும் கணவன் மனைவி, காதல் ஜோடிகள் என அனைவருமே பார்க்க வேண்டிய படம் என பாராட்டி உள்ளனர்.

படம் நல்லா இருக்கு: படத்தில் நடித்த விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த் மற்றும் அபர்ணதி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் யதார்த்தமாக ரியல் லைஃப் ஜோடிகளை போலவே உள்ளது படத்திற்கு பாசிட்டிவ். கண்டிப்பா தியேட்டரில் போய் இந்த படத்தை பார்க்கலாம் என 3.75 ரேட்டிங்கையும் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











