twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது நம்ம ஆளு- விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    1.5/5
    Star Cast: சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா
    Director: பாண்டிராஜ்
    -எஸ் ஷங்கர்

    நடிப்பு: சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ்

    ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம்

    இசை: குறளரசன்

    தயாரிப்பு: சிம்பு சினி ஆர்ட்ஸ்

    இயக்கம்: பாண்டிராஜ்

    காதலித்துப் பிரிந்த சிம்பு - நயன்தாராவை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். இது காதல் படம் என்கிறார் இயக்குநர். காதல் படம்தானா? பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

    சென்னை ஐடி இளைஞன் சிம்பு. பல காதல்களைப் பார்த்தவர். லேட்டஸ்டாக ஆன்ட்ரியாவை உருகி உருகிக் காதலித்துப் பிரிகிறார். பிரிந்த கையோடு திருவையாறில் நயன்தாராவைப் பெண் பார்க்கப்போகிறார். பார்த்த நொடியிலேயே அவர் மீது காதல் கொள்கிறார்.

    Ithu Namma Aalu Review

    ஆரம்பத்தில் ரொம்ப கெடுபிடியான பெண்ணாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நயன்தாரா போகப் போக சிம்பு மீது காதல் கொள்கிறார். ஆனால் இருவரின் அப்பாக்களின் இரவு குடி உளறலால், சிம்பு - நயன் பிரிய நேர்கிறது. மீண்டும் எப்படிச் சேர்கிறார்கள் என்பது இரண்டேகால் மணி நேர இழுவை.

    இது படம் தானா, ஒரு காதல் கதையை இப்படியா படமாக்குவார்கள், காட்சிகளில் ஒரு குறைந்தபட்ச நேர்த்தி இல்லை.

    அழகன் என்ற படத்தில் காதலனும் காதலியும் விடிய விடிய பேசினார்கள் என்ற ஒரு வரியை மூன்று நிமிடப் பாடலாக, கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பார் கேபி. இந்தப் படத்திலும் அப்படி ஒரு காட்சி. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள். காரணம் யாராக இருந்தாலும் பழி முழுவதும் இயக்குநர் பாண்டிராஜ் மீதுதான்!

    Ithu Namma Aalu Review

    ஏற்கெனவே பார்த்த பல படங்களின் காட்சிகளை இந்தப் படத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். பிப்ரவரி 14 என்று ஒரு படம் வந்ததே நினைவிருக்கிறதா... அதே பாணியில் படம் முழுக்க ஸ்மைலிகள். சிம்பு, நயன்தாராவுக்குப் பிறகு அதிகமாக இடம்பெறும் கேரக்டர் செல்போன். ஒரு முறை இருமுறை என்றால் பரவாயில்லை... படம் முழுக்கவா.. ஷ்ஷப்பா!

    வசனம் பேசுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை கடித்துத் துப்புகிறார் சிம்பு. காதில் ரத்தம் வராத குறைதான். இவரது நிஜ குணத்தைப் பிரதிபலிக்கும் வசனங்களுக்கு ஏதோ பெரிய காப்பிய ரேஞ்சுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். கூடவே அவ்வப்போது சூரி அடிக்கும் கமெண்டுகள் இன்னும் எரிச்சலூட்டுகின்றன.

    Ithu Namma Aalu Review

    படத்தின் மிகப் பெரிய ஆறுதல் நயன்தாரா. 2020-லும் கூட இவரை அடித்துக் கொள்ள முடியாது போலிருக்கிறது. சில காட்சிகளில் சிம்புவிடம் அவர் காதல் வசப்படுவது செயற்கையாகத் தெரிந்தாலும், இறுதிக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு ப்ளஸ் பாலசுப்பிரமணியம் கேமிரா!

    ஜெயப்பிரகாஷ், அவரது சம்பந்தி என ஓரிரு பாத்திரங்கள் வந்தாலும், படம் முழுக்க சிம்புவையே காட்டிக் கொல்லுகிறார்கள். அவர் முகமும் உடல் அமைப்பும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு மாதிரி தெரிகிறது. நேரம் கிடைத்தபோது வந்து தலையைக் காட்டிவிட்டுப் போயிருப்பார் போல.

    சந்தானம் இரண்டு காட்சிகளில் வருகிறார். நட்புக்கு மரியாதை. ஆன்ட்ரியாவை தெலுங்குப் பெண்ணாகக் காட்டி, அவரது உச்சரிப்பு கொடுமையை நியாயப்படுத்திவிட்டார் பாண்டிராஜ்.

    Ithu Namma Aalu Review

    இசை..? பாவம்.. சின்னப் பையன். உண்மையைச் சொன்னால் மனசு கஷ்டப்படும்!

    'எனக்காகப் பொறந்தாளே
    அவ என் கூட இருந்தாளே
    அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
    காணவில்லை
    அவ கூட இருந்த
    நாட்கள் எதையும் மறக்க முடியல
    அவ இல்லாத ஒரு வாழ்க்கைய
    நினைச்சுப் பாக்க முடியல... '

    - இது படத்தில் வரும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகள். இனி தமிழ் சினிமா பாட்டுன்னாலே தெறிச்சு ஓட வைப்பாங்க போலிருக்கிறது!

    நிச்சயமா இது 'நம்ம ஆளு' இல்லே!

    English summary
    Simbu - Nayanthara starrer Ithu Namma Aaalu is a romantic movie with boring sequences and poor narration.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X