Jaat X Review: சன்னி தியோல் மீண்டும் சாதித்தாரா? இல்லையா?.. ஜாட் ட்விட்டர் விமர்சனம் இதோ!

ஹைதராபாத்: கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பாபி தியோலின் சகோதரரான சன்னி தியோல் இன்று வெளியான ஜாட் திரைப்படம் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கதார் 2 படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த சன்னி தியோல் இந்தி பெல்ட்டிலேயே 500 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து அசால்ட் காட்டினார். இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜாட் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது.

Jaat Twitter Review in Tamil  Sunny Deol Mass Action only saves the movie

தமிழில் குடு பேட் அக்லி மொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்த நிலையில், மலையாளத்தில் பஸூகா, மரணமாஸ், ஆலப்புழா ஜிம்கானா படங்கள் வரிசைக் கட்டியுள்ள நிலையில், ஜாட் திரைப்படம் டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் இந்த படத்துக்கு கிடைத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

தரன் ஆதர்ஷ் விமர்சனம்: பாலிவுட்டின் பிரபல விமர்சகர் தரன் ஆதர்ஷ் ஜாட் திரைப்படம் பவர் பேக்கட் என 3.5 ரேட்டிங் கொடுத்து படம் பட்டாசாக இருப்பதாக விமர்சித்துள்ளார். சன்னி தியோ மீண்டும் இந்த படத்தின் மூலம் கர்ஜித்திருக்கிறார். சீட்டிமார் வசனங்கள் எல்லாமே தியேட்டரில் விசில் பறக்க செய்துள்ளன. ஜபர்தஸ்த் ஆக்‌ஷன் காட்சிகள் அல்டிமேட் என பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

பைசா வசூல் படம்: மற்றொரு பிரபல விமர்சகரரான் சுமித் காடேல் சரியான பைசா வசூல் படமாக ஜாட் உள்ளது. ஒவ்வொரு சீனும் ரசிகர்களை கூஸ்பம்ஸ் ஆக்குகின்றன. போர் அடிக்காமல், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த பக்கா படமாக சன்னி தியோலுக்கு கோபிசந்த் மலினேனி கொடுத்திருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

80ஸ் 90ஸ் சன்னி தியோலை பார்க்கலாம்: ஜாட் படத்தின் முதல் பாகம் மிரட்டலாக உள்ளது. 80கள் மற்றும் 90களில் இருந்த சன்னி தியோலை ரசிகர்கள் மீண்டும் பார்க்கலாம். கதை, திரைக்கதை, ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்துமே ஃபயர் ஆக உள்ளதாக இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

மைண்ட்லெஸ் மசாலா படம்: சன்னி தியோல், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி ரவுத்தேலா, ரம்யா கிருஷ்ணன், ரந்தீப் ஹூடா என பலர் நடித்துள்ள ஜாட் திரைப்படம் மைண்ட்லெஸ் மசாலா படம். சன்னி தியோல் மட்டுமே தனது மாஸ் ஆக்‌ஷனில் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். படம் சுமார் தான் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X