ஹாட்ஸ்டாருக்கு ஒரு பூமி மாதிரி.. நெட்பிளிக்ஸுக்கு ஜகமே தந்திரமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: தனுஷ் நடிப்பில் பிரம்மாண்ட விளம்பரங்களுடன் வெளியாகி உள்ள ஜகமே தந்திரம் படம் எப்படி இருக்கு என நெட்பிளிக்ஸில் பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் புட்டு புட்டு வைத்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் இன்று ஒடிடி தளத்தில் வெளியானது.
எதிர்பார்த்த அளவுக்கு ஜகமே தந்திரம் இருக்கிறதா? இல்லையா? நெட்டிசன்களின் கருத்துக்களை இங்கெ காண்போம்.
கலவையான விமர்சனங்கள்
கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக ரிலீஸ் ஆகுமா ஆகாதா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஜகமே தந்திரம் ஒரு வழியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ஓட்டத் தக்காளி
"வியாபாரமே ஆகாத ஓட்டத் தக்காளியை டைரக்ட்டா ஒடிடியில் வியாபாரம் பண்ணிடுராணுங்க" என ஜகமே தந்திரம் படம் பேட்ட படத்தை விட படு மொக்கை என்கிற விமர்சனத்தை இந்த நெட்டிசன் வைத்துள்ளார்.
பரோட்டா கடை சம்பவம்
எதிர்பார்த்த அளவுக்கே ஜகமே தந்திரம் படம் தரமாக உள்ளது. மதுரை காட்சிகளும், பரோட்டாக் கடை மாஸ்டரும் தனுஷ் செய்யும் சம்பவமும் வேற லெவல். நல்ல என்டர்டெயினர் இந்த ஜகமே தந்திரம் என இந்த நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹாட்ஸ்டாருக்கு ஒரு பூமி மாதிரி
ஜகமே தந்திரம் படமா இது.. 2 மணி நேரம் 40 நிமிஷன் வேஸ்ட், இதுல ட்ரீம் ப்ராஜெக்ட்டாம்.. முடில டா சாமி.. ஹாட்ஸ்டார்க்கு ஒரு பூமி மாதிரி நெட்பிளிக்ஸுக்கு ஜகமே தந்திரம் என பங்கமாக ஓட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.
தரமான சம்பவம் இல்லை
கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து ஜிகர்தண்டா அளவுக்கு ஒரு தரமான சம்பவமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான படமாக இல்லை என இந்த நெட்டிசனும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், நடிகர் தனுஷ் சுருளியாக வழக்கம்போல தனது நடிப்பால் கலக்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
700 எம்பி
நெட்பிளிக்ஸ் சந்தா இல்லாத ஏகப்பட்ட நெட்டிசன்களும் டெலிகிராம் லிங்கில் படத்தை டவுன்லோடு பண்ணி பார்த்து விட்டு தங்கள் குமுறல்களையும் கொட்டித் தீர்த்து வருகின்றனர். 700 mbல டவுன்லோடு பண்ணியிருக்கலாமோ என அழுது புலம்புகிறார்.
தியேட்டரை மிஸ் பண்றேன்
ஜிகர்தண்டா படத்தில் வரும் ஆரம்ப காட்சி போலவே இந்த படத்தையும் குப்பை படம் என்றும் மாஸ் படம் என்றும் இரு வேறுபட்ட கருத்துக்களால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த தீவிர தனுஷ் ரசிகர் படம் பக்கா மாஸ்.. தியேட்டரில் வெளியாகி இருந்தால் வேற லெவல்.. அதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என புலம்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











