twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    JAIBHIM MOVIE REVIEW: ஜெய்பீம் படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.5/5
    Star Cast: நடிகர்கள் : சூர்யா , லிஜோமோல் , மணிகண்டன் எம் எஸ் பாஸ்கர் பிரகாஷ் ராஜ் தமிழரசன்
    Director: T.J. Gnanavel

    சென்னை : தமிழ்நாட்டை மிகவும் ஆச்சர்ய படுத்திய வழக்குகளில் ஒன்று, 'ஜெய்பீம்' படமாக உருவாகியிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிய கே.சந்துரு வாதாடிய காலகட்டத்தில் நடத்திய வழக்குதான் இந்தப்படம்.

    Recommended Video

    Jai Bhim Review Tamil | Surya | 2D | Manikandan | Lijomol jose | yessa? bussa? | Filmibeat Tamil

    பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, காவல்துறையினரால் பெரும் அநீதி ஏற்படுகிறது . யாரிடம் சென்று நியாயம் கேட்பது என தெரியாமல் தவித்து நிற்கிறார். அப்போது ஒரு கூட்டத்துக்காக வந்த வழக்கறிஞர் சந்துருவிடம் அந்த பெண் விஷயத்தை சொல்கிறார். அந்த வழக்கை சந்துரு கையில் எடுத்து உயர் நீதிமன்றத்தில் ஒன்றரை வருடங்கள் வாதாடி வெற்றி பெறுகிறார் .

    அரண்மனை 3 படத்தின் தாலாட்டுப் பாடல்... வீடியோ வெளியிட்ட படக்குழு! அரண்மனை 3 படத்தின் தாலாட்டுப் பாடல்... வீடியோ வெளியிட்ட படக்குழு!

    நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் 'ஜெய் பீம்' உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாராகியிருக்கிறது. இதனை ஊடகவியலாளரும் கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

    நிஜ நாயகனாக

    உண்மையாக நடந்த அந்த நீதி மற்றும் அநீதிக்கு உண்டான போராட்டத்தை ஓவர் பில்ட் அப் இல்லாமல் ரசிக்கும்படி உருவாக்கி இருக்கிறார்கள். இப்படியோர் கதையை படமாக்க, நடிக்க பெருந்துணிவு மற்றும் மாற்று சிந்தனை வேண்டும்.அந்த வகையில் சமூகப்பொறுப்புள்ள நிஜ நாயகனாக உயர்ந்து நிற்கிறார் சூர்யா.டைட்டில் கார்டில் எந்தவொரு எக்ஸ்ட்ரா பட்டப்பெயரையும் வைத்துகொள்ளவில்லை படம் ஆரம்பித்து சில காட்சிகளுக்குப் பிறகுதான் வருகிறார் இருந்தாலும் மிகவும் கவனம் ஈர்க்கிறார் .

     வாழ்ந்த ,வாழ்கின்ற

    வாழ்ந்த ,வாழ்கின்ற

    ரேசன் கார்டு, ஒட்டர் ஐ டி எதுவும் இல்லாத மக்களை,அவர்களுது வாழ்வியலை அலசி ஆராய்ந்து கதை எழுதியதோடு இல்லாமல், பசித்தால் அணில்,முயல்,பன்றி என வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் அப்பாவி எளிய மனிதர்களான இருளர் வாழ்ந்த ,வாழ்கின்ற மக்களை கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் ஞானவேல்.செங்கனியாக லிஜோமோல் பேசுவதும் ,பார்ப்பதும் கர்ப்பிணி பெண்ணாக தவிப்பதும் நம்மை உலுக்கி எடுக்கும் . மணிகண்டன் மற்றும் லிஜோமோல் கண்டிப்பாக பல விருதுகள் வாங்குவார்கள் என்று நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்கள் .

     அரசியல் போக்கு

    அரசியல் போக்கு

    அறிவொளி இயக்கம் மக்களுக்காக போராடும் ஒரு டீச்சர் என்று ரஜிஷா விஜயன் மிகவும் எதார்த்தமான நடிப்பு. மனசாட்சிக்கு கட்டுப்பட்ட காவல் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் மிக அருமை. பிரகாஷ் ராஜ் பேசும் சில வசனங்களை மிக கூர்மை மிக பெரிய வலி .சங்கரன் எனும் கதாபாத்திரத்தில் எம் எஸ் பாஸ்கர் படத்தின் சீரியஸ் காட்சிகளில் ஒட்டு மொத்த ரிலாக்ஸ் தருணங்களை ஏற்படுத்தி சிரிக்க வைக்கிறார் . படத்தில் இருளர்களின் வாழ்க்கையை காட்டப்பட்ட விதம் அதன் உண்மை தன்மை மற்றும் அவர்களது பாஷை அனைத்தும் மிக பெரிய மெனக்கெடல் . அந்த மக்களுக்கு தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல,எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியாது எனும் பொழுது நம் நாட்டின் அரசியல் போக்கு புலப்படுகிறது .

    நம்பவே முடியாது

    நம்பவே முடியாது

    ஷான் ரோல்டனின் இசை அங்கங்கே வரும் சின்ன சின்ன பாடல்கள் கச்சிதம் குறிப்பாக "தலை கோதும் இளம்காத்து செய்தி கொண்டு வரும்"என்ற பாடல் உன்னதம் .கதிரின் ஒளிப்பதிவு திரைக்கதையை நன்கு படித்து செயல்பட்டு இருக்கிறார் . டாப் அங்கிள் ஷாட்ஸ் , கோர்ட் வளாகம் , மலைவாழ் மக்கள் என்று கதையை புரிந்து வித்யாசமாக லென்ஸ் பயன் படுத்திய விதம் படத்துக்கு கூடுதல் பலம் .
    படத்தில் வரும் நீதிமன்ற வளாகம், செட் என்றால் நம்பவே முடியாது. கலை இயக்குநருக்கு சிறப்பு பாராட்டுகள்.இந்தப் படமும் ஒரு பீரியட் பிலிம் என்பதனால் சின்ன சின்ன பல விஷயங்களை மிகவும் நுணுக்கமாக யோசித்து அற்புதமாக செயல்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அந்த காலத்தில் பயன்படுத்திய ஆடியோ கேசட் மற்றும் (vhs ) வீடியோ டேப்ஸ், சினிமா போஸ்டர்கள், பேருந்து நிலையங்கள், டெலிபோன் பூத் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    பெண் கைதிகளுக்கு

    பெண் கைதிகளுக்கு

    எளிய மனிதர்களான இருளர் சமூகம் தங்களுக்கான அடையாளத்துக்கு அரசு அதிகாரிகளிடம் போராடுகிறார்கள் . ஒரு காட்சியில் "இந்த கவர்மெண்டு ஆபீஸுக்குள்ள பாம்பை கொண்டுவந்துவிடனும்.. அப்போ நம்மளத்தானே கூப்பிடுவாங்க" என ஒரு இருளர் சொல்லும் போது வேதனையும் சிரிப்பு நம்மை யோசிக்க வைக்கும். 'காயம் கூட ஆறிடும். ஆனா திருடன்ங்கிற பட்டம் சாகுற வரைக்கும் துரத்தும்' என்பதற்காக பொய் சொல்ல மறுக்கும் (ராஜா கண்ணு) மணிகண்டன், அதற்காக வாங்குகிற அடி உதய், நமக்கு வலிக்கிறது. பெண் கைதிகளுக்கு ஏற்படும் பயங்கரவாதம் மனசை பதபதைக்கும் .மேலும் அந்த சிறையில் சிக்கிக் கொண்ட (ராஜா கண்ணு) மணிகண்டன் உறவினர்கள் வாங்கும் அடி நடிப்பா? நிஜமா? என்று தவிக்க விடுகிறார்கள் .மக்களுக்காக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பதிவுகள் ஸ்வாரஸ்யமான புத்தகங்களாக நிறைய இருக்கின்றன. இது மிகையில்லாத உண்மையான திரைக்கலைப்பதிவு.

     பெரும்பாலோர் நினைக்க

    பெரும்பாலோர் நினைக்க

    'ஜெய்பீம்' என்பதை குறிப்பிட்ட சாதிக்கான குறியீடு , அம்பேத்கர் முழக்கமாக பெரும்பாலோர் நினைக்கின்றனர். அது ஒடுக்கப்பட்டவர்கள் எவரானாலும்,தேவையான பொது வீறுகொண்டெழ சக்திவாய்ந்த ஒரு சொல் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.ஒரு காட்சியில் செங்கனி (லிஜோமோல் ) டி ஜி பி (DGP) அலுவலகத்தில் காசு வேண்டாம் சார் என்று சொல்லி அதற்கான காரணத்தை சொல்லும் போது நம்மை அறியாமல் கை தட்டுவோம் .

    மிகத் தெளிவாக

    மிகத் தெளிவாக

    ஜெய்பீம் படத்தை பொருத்தவரை சூர்யா கதாநாயகன் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காக வாதாடுகிறார் கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வெற்றி பெறப் போகிறார் என்பதை படம் ஆரம்பித்த முதல் காட்சி முதல் நமக்கு மிகத் தெளிவாக புரிகிறது. ஒருபக்கம் அது மைனஸ் என்று இருந்தாலும் திரைக்கதை மூலம் அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை சொல்லிய விதத்தில் இயக்குனர் சாமர்த்தியம் புரிகிறது.சப் இன்ஸ்பெக்டர் குரு மூர்த்தியாக ஒரு அரக்க குணம் கொண்ட மனிதனாக தமிழரசன் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். ராவ் ரமேஷ் குரு சோமசுந்தரம் போன்ற நடிகர்கள் மற்றும் அவர்களது கதாபாத்திரங்கள் நேர்த்தியாக இடம் பெற்று உள்ளது . பிலோமின் ராஜ் எடிட்டிங் மூலம் சிறப்பாக பல தருணங்களை செதுக்கி இருக்கிறார் . திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது 'ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்

     வெகுஜன மக்களை

    வெகுஜன மக்களை

    இருளர் பழங்குடி இன மக்களுடைய வாழ்க்கையை ஓடிடி ( OTT ) தளமான அமேசான் பிரைம்மில் ரீலீஸ் செய்வது ஒரு பக்கம் சாதனை என்றாலும் இன்னொரு பக்கம் வேதனை தான் . இப்படிப்பட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகி இருந்தால் இன்னும் வெகுஜன மக்களை எளிதில் சென்றடையும். இருப்பினும் அமேசான் பிரைம்இல் வந்த ஜெய் பீம் சிறிது காலம் கழித்து அனைவரது பார்வைக்கும் மிக எளிதில் கிடைக்கும் ஒரு திரைப்படமாக அமைய வேண்டும். தீபாவளி வெடி கேட்க தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் போலீசின் அடியை உணர்த்தி ஜெய்பீம் எனும் சொல்லுக்குப் பின்னால் இருக்கும் சக்தியை புரியவைத்த இந்தப்படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்.

    English summary
    jaibheem is one of the most expected movie from actor surya fans. Gnanavel is the director who took particular case of advocate chandru and with extraordinary screenplay he has finally made jaibheem .movie has been released in amazon prime and the story revolves around a particular community where basic amenities and recognition of a mankind are been stopped.An indian citizen who struggles for everyday and everything in life is been portrayed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X