twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிவி பிரகாஷ் ‘ஜெயில்‘ திரைப்படம் எப்படி இருக்கு... ரசிகர்கள் விமர்சனம்!

    |

    சென்னை : வசந்த பாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படம் குறித்து பலர் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Recommended Video

    Jail Movie Public Review | GV Prakash | Vasantha Balan | Filmibeat Tamil

    சென்னையில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்களை அரசு சென்னைக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் காவேரி நகர் என்ற பகுதியில் குடியமர்த்துகிறது. அந்தப் பகுதியில் லோக்கல் திருடனாக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

    காவேரி நகரில் கஞ்சா விற்பனை செய்யும் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட பகையில் நந்தன் ராம் கொலை செய்யப்படுகிறார். நண்பன் கொலை செய்யப்பட்ட கோபத்தில் பசங்க பாண்டி எதிரணியில் ஒருவரை தீர்த்து கட்டுகிறார். அதன்பிறகு கதையில் என்னவெல்லாம் நடக்கிறது கடைசியில் ஜிவி பிரகாஷ் என்னவானார் என்பது தான் இந்த படத்தின் கதை.

    பொதுவாக கேட்ட தாமரை.. வார்த்தையை விட்டு.. அடிப்பது போல் எகிறிய அபினய்.. அல்லோகளப்பட்ட பிக்பாஸ் வீடு!பொதுவாக கேட்ட தாமரை.. வார்த்தையை விட்டு.. அடிப்பது போல் எகிறிய அபினய்.. அல்லோகளப்பட்ட பிக்பாஸ் வீடு!

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    குடிசைவாசிகள் குறித்து வெளியாகி உள்ள ஜெயில் திரைப்படம் குறித்து ஒரு நெட்டிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், வாழ்வாதாரத்தைப் பிடுங்கிக் கொண்டு வாழ்ந்திட சொல்வதில் நியாயம் உள்ளதா? நகரமயமாதலால் அனைத்தையும் தொலைத்து நிற்கும் மனிதர்கள் எப்படித்தான் வாழ்கிறார்கள்? ஜெயில் அவர்களின் வாழ்வை திறந்து காட்டுகிறது. வசந்த பாலன் மற்றும் ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

    வசந்தபாலன் சார் சூப்பர்

    வசந்தபாலன் சார் சூப்பர்

    ஜிவியின் தீவிர ஃபாலோயர்கள், இத்திரைப்படத்தின் ஃபீட்பேக்குகளை சரமாரியாக ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஜெயில் திரைப்படத்தின் முதல்பாதி மிகவும் அருமையாக உள்ளது. கருணா கதாபாத்திரத்தில் நடித்துள்ளன ஜிவி பிரகாஷின் நடிப்பு சிறப்பு எனவும் வசந்த பாலன் சார் சூப்பர் எனபதிவிட்டுள்ளார்.

    யதார்த்தமான நடிப்பு

    யதார்த்தமான நடிப்பு

    ஜெயில் ஜிவிபிரகாஷிற்கு ஒரு நல்ல படம், கர்ணன் என்ற யதார்த்தமான பாத்திரத்தில், மீள்குடியேற்ற சேரியிலிருந்து ஒதுக்கப்பட்ட ஒரு பையன். அன்பரிவின் ஆக்‌ஷன் காட்சிகள் அதற்குத் தேவையான பச்சைத் தோற்றத்தைக் கொடுக்கிறது. இது நல்ல எண்ணம் ஆனால் ஒரு கிளுகிளுப்பான கதை என நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

    ஊக்கமில்லாத கதை

    ஊக்கமில்லாத கதை

    மற்றொரு இணையவாசி, ஜெயில் சோர்வடைய செய்கிறது, ஊக்கமில்லாத எழுத்து, சாதாரணமான கதை, வெறுப்பூட்டும் பாத்திரங்கள். அதே நேரத்தில் கர்ணன், காலா, மெட்ராஸ் போல இருந்ததாக கூறியுள்ளார்.

    English summary
    GV Prakashkumar Jail movie review twitter feedbacks
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X