Jana Nayagan Blue Sattai Maran Review - ஜனநாயகன் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. வெரி ராங் ப்ரோ.. சிதைச்சிட்டாரு
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்காக வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படமானது நேற்று ரிலீஸானது. கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அதி படத்துக்கும் செம அடி கொடுத்திருக்கிறார்; ரஜினிக்கும் கொடுத்திருக்கிறார்.
அவர் தன் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தப் படத்தை அப்படியே எடுத்து வைக்கவில்லை. தமிழுக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் மூன்று மணி நேரம் மூன்று நிமிடங்கள் ஓடுகிறது. அதில் இரண்டரை மணி நேரம் பல்லை கடித்துக்கொண்டு பார்த்தால்கூட; கடைசி அரை மணி நேரம் எல்லாம் ரோபோட், ஆர்சி போர் என சேர்த்து கொலையாய் கொன்றுவிட்டார்கள்.

எத்தனை பிரச்னைகள்?: பத்து நிமிடங்களுக்கு ஒரு மிஷனை எடுத்துக்கொள்கிறார் ஹீரோ.உடனே உடனே ஒன்றிலிருந்துஒன்றுக்கு தாவுகிறார். டாம் க்ரூஸ் அவருடைய உயிரை பணையம் வைத்து அந்த மிஷன்களை செய்து கொடுப்பார். இவரோ நம் உயிரை பணையம் வைத்து மிஷன்களை செய்கிறார். அப்படி எத்தனை மிஷனை அவர் செய்வார். ஜெயிலில் பிரச்னை, ஜெயிலர் வீட்டு பிரச்னை, கள்ளச்சாராய பிரச்னை, மலைவாசி பிரச்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, மத கலவரம் இடையே இடையே கட்சி பிரசாரம் வேறு. அதற்கு பிறகோ ரிமோட் கன்ட்ரோல் போர், ரோபோட்டோடு சண்டைனு போகுது.
வேஸ்ட் லக்கேஜ்: அதேபோல் தமிழ் சினிமா வழக்கப்படி படம் என்று ஒன்று இருந்தால் ஹீரோயின் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப; ஒரு வேஸ்ட் லக்கேஜ் ஹீரோயினை வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பற்றாது என்று ஒன் லாஸ்ட் டான்ஸ் வேறு. அதையெல்லாம் பார்த்துவிட்டு வந்து சேர்ந்தோம்.
வாய்ப்பே இல்லாத கதை: தெலுங்கு படத்தை தமிழில் எடுத்திருந்தால் பரவாயில்லை. தெலுங்கு படத்தை தெலுங்கு படமாக அதிகமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இதை தெலுங்கில் வேறு டப் செய்திருக்கிறார்கள். அதற்கு வேறு, 'ஏன் டா எங்கள் வீட்டு கேசரியை எடுத்துக்கொண்டு சென்று; அதில் கொஞ்சம் முந்திரி பருப்பை போட்டு எங்கள் தலையில் கட்ட பார்க்கிறீர்களா? என மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் நிஜத்தில் வாய்ப்பே இல்லை என்ற கதையை படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.
வாட் ப்ரோ? திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ: கொஞ்சம் எதார்த்தம் இல்லாமல் உண்மைக்கு நெருக்கம் இல்லாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவை கலவர பூமியாக்குவதுதான் அவனது நோக்கம். ஆனால் அந்த வில்லன் தன்னுடைய அடியாட்களை அனுப்புகிறான்; அவர்களிடம் துப்பாக்கியே இல்லை. ஹீரோவும் வெறுங்கையோடுதான் செல்கிறார். ஃபிட்டர் மாதிரி அதை ஃபிட் செய்துகொண்டு இருக்கிறார். எம்ஜிஆர் மூன்றாவது குத்து வாங்கிய பிறகுதான் அடிக்க ஆரம்பிப்பார். அது மாதிரி தன்னை மூன்று முறை ஒருவர் கூப்பிடட்டும் என இந்த ஹீரோ இருக்கிறார். வாட் ப்ரோ? திஸ் இஸ் வெரி ராங் ப்ரோ.
ஒன் லாஸ்ட் டைம் ப்ரோ: இந்தக் கேள்வியை அவருடைய பிகில் படத்துக்கு கேட்டிருக்கிறோம். வழக்கமாக கேட்பதுதான். இருந்தாலும் ஒன் லாஸ்ட் டைம் ப்ரோ இப்போ கேட்கிறேன், 'ஹீரோ சோத்துக்கு என்ன செய்றாரு?' அவரு இன்ஸ்பெக்டராக இருந்தார். வேலை போய்விட்டது. அவருடைய அம்மாவும் சோறு இல்லாமல்தன் இருக்கிறது. ஹீரோவோடு சுற்றுபவர்கள் எல்லாம் யானை லெக் பீஸ் சாப்பிடுவார்கள். அவர்கள் சோத்துக்கு என்ன செய்கிறார்கள்? படத்தில் பாடல்களும் சரியாக இல்லை.
குழந்தைகளின் மிரட்டல்: இந்தப் படத்தை பற்றி நிறைய மீம்கள் வருகின்றன. விஜய் படம் ரிலீஸ் என்றால் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காது. இந்தப் படத்துக்கு டிக்கெட் ஈசியாக கிடைக்கிறது. லீக்கானது அல்லது ஏ சான்றிதழ் ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகள்தான் விஜய்க்கு வாக்களிக்க சொல்லி அப்பா, அம்மாவை மிரட்டினார்கள். இந்தப் படத்துக்கு விட்டுட்டு போனால் மிரட்டியிருப்பார்கள் போல. அதனால்தான் அவர்கள் வரவில்லை.
ரஜினிக்கு அடி: இந்தப் படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. கட்சியின் பிரசார படம். அந்த எண்ணம் நூறு விழுக்காடு வென்றது. ஆனால் பொதுவான ரசிகனாக முக்கால் மணி நேரம் பல்லை கடித்துக்கொண்டு பார்த்துவிடலாம். கடைசி அரை மணி நேரம் இருக்கே? இதுதான் கடைசி படம் என்பதில் விஜய் ரசிகர்களுக்கு வருத்தம் இருக்கும். பொதுவான ரசிகர்களும் விஜய்யை மிஸ் செய்வார்கள். அவர் ஃபீல்டை விட்டு போவதில் தலீவருக்குத்தான் (ரஜினி)மகிழ்ச்சியாக இருக்கும். போயும் போயும் என் பட்டத்தை பறிக்க பார்த்தீங்களே என புலம்ப விட்டிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications
