Japan Review: ஜப்பான் விமர்சனம்.. சுவாரஸ்யமே இல்லாத கதையில் கார்த்தி மட்டுமே ஸ்கோர் பண்றாரு!
நடிகர்கள்: கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: ராஜு முருகன்
நேரம்: 2 மணி நேரம் 36 நிமிடங்கள்
சென்னை: தீபாவளிக்கு கைதி, சர்தார் ரேஞ்சுக்கு படம் கொடுத்து வந்த கார்த்திக்கும் அடி சறுக்கும் என்கிற நிலையாகவே மாறிவிட்டது இந்த ஜப்பான் திரைப்படம்.
இயக்குநர் ராஜு முருகன் ஜிப்ஸி படத்தில் வாங்கிய அடிக்கு ஜப்பான் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று பார்த்தால், அதற்கான எந்தவொரு முயற்சியும் அவர் முன்னெடுக்கவில்லை என்றே தெரிகிறது.

கார்த்தியின் 25வது படம் என்றும் ஆடியோ லாஞ்சில் அத்தனை பிரபலங்களையும் அழைத்து வந்து பெரியளவில் பில்டப் கொடுத்த நிலையில், அதற்கெல்லாம் உரிய படமாக ஜப்பான் அமையவில்லை என்பது தான் ரசிகர்களின் ஆதங்கமாக மாறியுள்ளது.
ஜப்பான் கதை: ஆரம்பத்திலேயே நகை கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் சம்பவம் நடக்கிறது. இதற்கு யார் காரணமா இருப்பார்கள் என்றதுமே ஜப்பான் தான் என ஹீரோ இன்ட்ரோ நடக்கிறது. அவரை போலீஸார் தேடி பிடிக்க செல்ல பிடித்தார்களா? அல்லது அவருக்கு கடைசியில் என்ன ஆனது? என்பது தான் இந்த ஜப்பான் படத்தின் கதை.
சுவாரஸ்யமே இல்லாத ஸ்க்ரீன் பிளே: கதையின் ஒன்லைன் எளிமையாக இருந்தாலும், அதன் ஸ்க்ரீன் பிளேவில் இயக்குநர் புகுந்து விளையாடி சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் படம் நல்லாவே வந்திருக்கும். ஆனால், அதை ஏன் நான் பண்ணனும் என அவர் ஒதுங்கிக் கொண்டது தான் மொத்த பிரஷரும் கார்த்தி தலை மீது வந்து விழுந்திருக்கிறது.
பிளஸ்: நடிகர் கார்த்தியின் வித்தியாசமான நடிப்பு தான் இந்த படத்தின் ஒட்டுமொத்த பலம் என்று சொல்லலாம். ஜப்பான் கதாபாத்திரத்தில் திருட்டுத் தொழில் செய்யும் நபராக கார்த்தி நடித்துள்ளார். சுனில், கே.எஸ். ரவிகுமார், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அனு இமானுவேல் வழக்கமான ஹீரோயினாகவே வந்து போகிறார். ஜி.வி. பிரகாஷின் இசை ஓகே ரகம். ரவி வர்மனின் ஒளிப்பதிவு தான் கார்த்திக்கு அடுத்து பெரிய பிளஸ் ஆக உள்ளது.
மேலும், கதையில் குழந்தையின் படிப்புக்காக தங்கத்தை சேர்க்கும் பெற்றோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஸ்கோர் செய்கின்றனர்.
மைனஸ்: முன்பே சொன்னது போல இயக்குநர் ராஜு முருகன் ஒரு சில இடங்களில் செய்த கவனத்தை இப்படியொரு கதையை எடுப்பதற்கு முன்பே இது வொர்க்கவுட் ஆகுமா? என யோசித்திருந்தால் நிச்சயம் வேறு ஒரு நல்ல கதையை தேர்வு செய்து வேலை பார்த்து இருப்பார். ஜப்பான் எதிர்பார்த்த அளவுக்கு ஜெயிக்கவில்லை!


Click it and Unblock the Notifications