Jawan Twitter Review: ஜெயிச்சிட்ட அட்லீ.. ஜவான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை அட்லீ இயக்கிய 4 தமிழ் படங்களும் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், முதன்முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஆக்ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, எமோஷன் என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் என ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
பிளாக்பஸ்டர்: ஃபேன், ஜீரோ உள்ளிட்ட படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், நடிகர் ஷாருக்கான் சுமார் 4 ஆண்டுகள் சினிமாவுக்கே ஓய்வு கொடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவாக இந்த ஆண்டு வெளியான பதான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் 4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக்பஸ்டர் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
கலர் புகையுடன் கொண்டாட்டம்: பட்டாசை எல்லாம் கடந்து தற்போது ஜவான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு மேள தாளங்களுடன் கலர் பவுடரை எல்லாம் கொட்டி தியேட்டரையே ஹோலி கொண்டாட்டம் நடைபெறும் இடமாக மாற்றி ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில வாரங்களுக்கு தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டம் காணப்படும் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட்டிலும் மாஸ் காட்டிய அட்லீ: இயக்குநர் அட்லீ கோலிவுட்டில் மட்டுமின்றி குருநாதர் ஷங்கருக்கு முன்னாடியே பாலிவுட்டுக்கு சென்று தெறி மாஸ் காட்டி உள்ளார் என அட்லீயை ஷாருக்கான் ரசிகர்கள் ஏகப்பட்ட வீடியோ மீம்களை பதிவிட்டு ஜெயிச்சிட்ட அட்லீ என்றும் படம் பிளாக்பஸ்டர் என்றும் அடுத்த 1000 கோடி ரெடி என தெறிக்க விட்டு வருகின்றனர்.
இன்கிரெடிபிள் ஷாருக்கான்: இப்போ தான் ஜவான் படத்தை பார்த்து முடித்தேன், ஷாருக்கான் ஏகப்பட்ட கெட்டப்புகளில் தனது மொத்த நடிப்பையும் இந்த ஒரு படத்தில் இறக்கி இருக்கிறார். இன்கிரெடிபிளான அவரது நடிப்பை பார்த்து விட்டு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
வேறலெவல் வெற்றி: பாலிவுட் விமர்சகர் சுமித் காடேல் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் Gigantic Blockbuster என்றும் 4.5 ஸ்டார்களை போட்டு இப்படியொரு படம் பாலிவுட்டுக்கு உடனடியாக தேவையாக இருந்த நிலையில், ஷாருக்கான் அந்த சம்பவத்தை செய்துள்ளார் என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











