Iraivan Twitter Review: அய்யோ இறைவா காப்பாத்து.. ஜெயம் ரவி, நயன்தாராவின் இறைவன் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: ராட்சசன், போர்த் தொழில் வரிசையில் சைக்கோ த்ரில்லராக ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் நடித்த இறைவன் படம் மிரட்டும் என்று பார்த்தால், அய்யோ இறைவா காப்பாத்து, ஆளவிடுடா சாமி என சொல்லும் அளவுக்குத் தான் இறைவன் படம் இருப்பதாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

ஏ சான்றிதழ் வாங்கியுள்ள படம் செம த்ரில்லராக ரசிகர்களுக்கு ஒரு ரா படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை இயக்குநர் அகமது மற்றும் ஜெயம் ரவி கொடுத்துள்ளனர் என்கின்றனர்.

Jayam Ravi and Nayanthara starrer Iraivan Movie Twitter Review in Tamil

இறைவன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அந்த படத்துக்கு கொடுத்துள்ள விமர்சனத்தையும் ரேட்டிங்கையும் இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

பலத்த ஏமாற்றம்: டெரிப்பிள் கிரைம் த்ரில்லர் படம் என ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்திற்கான விமர்சனத்தை இந்த நெட்டிசன் கூறியுள்ளார். நயன்தாரா வரும் காட்சியெல்லாம் ஆளைவிடுங்கடா சாமி என சொல்லும் அளவுக்கு மோசமாக இருப்பதாகவும் பலத்த ஏமாற்றம் என இறைவன் படத்துக்கு 10க்கு 4.5 ரேட்டிங் கொடுத்திருக்கிறார் இந்த ரசிகர்.

Jayam Ravi and Nayanthara starrer Iraivan Movie Twitter Review in Tamil

இறைவா காப்பாத்து: ஜெயம் ரவியின் இறைவன் படத்தை பார்த்து விட்டு தியேட்டரை விட்டு அய்யோ இறைவா காப்பாத்து என்று தான் ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றன்ர்.

Jayam Ravi and Nayanthara starrer Iraivan Movie Twitter Review in Tamil

முதல் பாதி சூப்பர்: இறைவன் படத்தின் முதல் பாதி சூப்பர் ஜெயம் ரவி, ராகுல் போஸ் நல்லா நடிச்சிருக்காங்க, செகண்ட் ஹாஃப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

Jayam Ravi and Nayanthara starrer Iraivan Movie Twitter Review in Tamil

இடைவேளைக்கு பிறகு இழுவை: இறைவன் ஒருமுறை பார்க்கலாம். ராகுல் போஸ் வில்லனாக சிறந்த தேர்வு, யுவன் சங்கர் ராஜா பிஜிஎம் மிரட்டுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு படம் இழுவையாக மாறியது தான் இறைவன் படத்தின் மிகப்பெரிய கொடுமை என இந்த ரசிகரும் படத்தின் இரண்டாம் பாதி டோட்டலாக சொதப்பி விட்டதாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X