Iraivan Review: ஜெயம் ரவியின் சைக்கோ த்ரில்லர் வொர்த்தா?.. இம்சையா?.. இறைவன் விமர்சனம் இதோ!

Rating:
2.5/5
Star Cast: ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ்
Director: அஹ்மத்

இசை: யுவன் சங்கர் ராஜா

நேரம்: 2 மணி நேரம் 2 நிமிடங்கள்

சென்னை: வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிகமான ரத்தம், அரை நிர்வாணக் காட்சிகள் என ஏகப்பட்ட ஐட்டங்கள் இருப்பதால் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் நம்பி ஏமாந்து படத்தை பார்க்க போன ரசிகர்களுக்கு தலைவலி மிஞ்சியது தான் மிச்சம். வாங்க முழுமையான இறைவன் படத்தின் இம்சையை (விமர்சனத்தை) பார்க்கலாம்..

Jayam Ravi, Nayanthara and Rahul Bose starrer Iraivan Review in Tamil

இறைவன் கதை: காக்க காக்க சூர்யா போல என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வழக்கம் போல போலீஸ் படங்களில் காட்டும் மாஸ் ஹீரோ அர்ஜுனாக ஜெயம் ரவி வருகிறார். அவரது டீம் நண்பராக அண்ட்ரூ எனும் கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். பிரம்மாவாக வில்லன் ராகுல் போஸ் இளம் பெண்களை தேடி பிடித்து கொடூரமாக கொலை செய்கிறார். கொலை செய்வது மட்டுமின்றி போலீஸுக்கும் சவால் விடுகிறார். இந்த வழக்கு அர்ஜுன் ஜெயம் ரவியிடம் வந்த உடனே வில்லனை சில முயற்சிகளிலேயே பிடித்து விடுகிறார்.

ஆனால், அந்த ஆப்பரேஷனில் தனது உயிர் நண்பனான ஆண்ட்ரூவை இழந்து விட, அந்த வேதனையில் போலீஸ் வேலையே வேண்டாம் என விலகி விடுகிறார். சிறையில் இருந்து எஸ்கேப் ஆகும் பிரம்மா மீண்டும் சேட்டையை ஆரம்பிக்க, பிரம்மாவை போட்டுத் தள்ளும் அர்ஜுன் நிம்மதி பெருமூச்சு விடலாம் என நினைத்தால் மீண்டும் கொலைகள் அதே பாணியில் தொடர்கிறது. யாருடா அடுத்த பிரம்மா? அவரை ஜெயம் ரவி என்ன செய்தார்? என்பது தான் இந்த இறைவன் படத்தின் கதை.

பிளஸ்: ஜெயம் ரவி வழக்கம் போல தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து கடைசி வரை ரசிகர்களை என்கேஜ் செய்ய முயற்சித்துள்ளார். சைக்கோ பிரம்மாவாக வரும் ராகுல் போஸ் அவரது அனுபவத்திற்கு ஏற்ப மிரட்டுகிறார். விஸ்வரூபம் படத்திலேயே அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் சைக்கோவாக கொலவெறியில் நடித்து இருப்பதையும் கொடூரமாக பெண்களை டார்ச்சர் செய்து கொல்வதை பார்த்தாலே கொலையே நடுங்குகிறது. சார்லி நடிப்பில் அந்த ஒரு ஷாட் பிரம்மிக்க வைக்கிறது படத்திற்கு பெரிய பிளஸ் என்றே சொல்லலாம்.

Jayam Ravi, Nayanthara and Rahul Bose starrer Iraivan Review in Tamil

மைனஸ்: படத்திற்கு பிளஸ் ஆக இருக்கவேண்டிய நயன்தாரா போர்ஷன் பெரிய மைனஸ் ஆகி விடுகிறது. ஒட்டுமொத்த படத்திற்கே நயன்தாரா மற்றும் ஜெயம் ரவியின் ரொமான்ஸ் போர்ஷன் செம ஸ்பீடு பிரேக்கராக மாறி விடுகிறது. வழக்கமான சைக்கோ கொலைகாரன் கதையாகவே எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் நகரும் சொதப்பல் திரைக்கதை 2 மணி நேர படத்தையே 20 மணி நேரமாக பார்ப்பது போன்ற ஃபீலிங்கை தருகிறது.

பார்க்கலாமா? வேண்டாமா?: சைக்கோ படங்களின் தீவிர விசிறியாக இருந்தால் இந்த படத்தை ஒரு முறை ட்ரை பண்ணலாம். ஏ சர்ட்டிபிகேட் படம் என்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. இளைஞர்கள் இந்த படத்தை ஒருமுறை ஜெயம் ரவிக்காக பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X