Agilan Review: ஜெயம் ரவியின் அகிலன் எப்படி இருக்கிறது...? முழுமையான திரை விமர்சனம்

Rating:
3.0/5

இயக்குநர் : கல்யாண் கிருஷ்ணன்
இசை :
சாம் சிஎஸ்
நடிகர்கள் :
ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன்.

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹார்பர் கதைக்களத்தில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

கடலும் கடல் சார்ந்த இடமும்

கடலும் கடல் சார்ந்த இடமும்

உலகம் முழுவதும் 30 சதவீதம் தான் நிலம், மீதமுள்ள 70 விழுக்காடும் கடல் தான். அதன்படி 30 சதவீத நிலத்தில் வாழும் மக்களின் தேவைகளை தீர்த்து வைப்பதும் தீர்மானிப்பதும் கடல் வாணிபம் தான். எளிய மக்களின் கண்களுக்கு தெரியாமல் இங்கே மிகப் பெரிய கடல் வாணிபம் நடந்து வருகிறது. அதில் மக்கள் நலனுக்கு எதிரான முறைகேடான பல தொழில்களும் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அகிலன்.

கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்

கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்

ஹார்பரில் சாதாரண லேபராக இருக்கும் அகிலனுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. அவனுக்கு சர்வதேச ஹார்பர் கேங்ஸ்டரான கபூரை சந்திக்க வேண்டும் என்பதே திட்டம். அதற்காக கொலை, இல்லீகல் பிஸினஸ் என எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறான். இறுதியாக ஒரு சைபர் கிரைம் ஸ்பெஷலிஸ்ட் ஒருவனையும் Human Traffic முறையில் கண்டெய்னரில் ஏற்றி தப்பி செல்ல வைக்கிறான். அதன் மூலம் அவன் நினைத்தபடி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் என்ற பட்டத்தையும் கைப்பற்றுகிறான்.

அகிலனின் டபுள் ஆக்‌ஷன்

அகிலனின் டபுள் ஆக்‌ஷன்

இன்னொரு பக்கம் லோக்கல் ஹார்பரில் இருக்கும் யூனியன் பிரச்சினை முதல் தன்னுடன் இருந்தவர்களை ஓரங்கட்டுவது, அடங்கிப் போக செய்வது என பல அதிரடிகளை அரங்கேற்றுகிறான் அகிலன். இதற்கெல்லாம் போலீஸ் கேரக்டரில் வரும் மாதவியும் உதவி செய்கிறார். அகிலன் இதையெல்லாம் எதற்காக செய்ய வேண்டும், அவனது உண்மையான நோக்கம் என்னவென்பது தான் மொத்த கதையும்.

கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதை

கண்ணாமூச்சி ஆடும் திரைக்கதை

அகிலனாக ஜெயம் ரவி, மாதவியாக ப்ரியா பவானி சங்கர், இவர்களுடன் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, ஜிராக் ஜானி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, பாக்ஸர் தீனா, மதுசூதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதென்ன பிரமாதம் ரசிகர்களுக்கு ட்வீஸ்ட் தருவதாக நினைத்து, ஜெயம் ரவிக்கு அப்பா, மகன் என டபுள் ஆக்‌ஷன் ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன். சம்பந்தமே இல்லாமல் இரண்டு கேரக்டரில் வரும் ஜெயம் ரவியைப் போலவே, திரைக்கதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்கிறது.

எங்கே செல்லும் இந்த பாதை

எங்கே செல்லும் இந்த பாதை

முதல் பாதியிலேயே இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் ரசிகர்கள் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். இதில் இரண்டாம் பாதியில் இன்னொரு ஜெயம் ரவி, தான்யா, அவர்களுக்கு சில வில்லன்கள், இதுவும் போதாதென்று 'தமிழன்னை' என்ற கப்பல் வியாபாரம் என, ரசிகர்களுக்கு கண்டெய்னர் கண்டெய்னராக கண்ணீர் வரவைத்து வேடிக்கை காட்டுகிறார் இயக்குநர். உள்ளூர் பகை, வெளியூர் கேங்ஸ்டர், சர்வதேச அரசியல், பொருளாதாரம் என எல்லாம் கலந்த கொத்து பரோட்டாவாக இலையில் பரிமாறப்பட்டது தான் அகிலன்.

ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

அகிலன் படம் முழுக்க ஹார்பர், கண்டெய்னர், கடல் தான் கண்ணில் தென்படுகிறது. அதனால் தான் என்னவோ ஜெயம் ரவி உட்பட அத்தனை பாத்திரங்களும் கண்டெய்னர்கள் போலவே முரட்டு முரட்டு ஆசாமிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு நடுவே பாவம் போல செல்வது ப்ரியா பவானி சங்கர், தன்யா இறுதியாக திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்கள் தான். படத்தில் ஒரேயொரு பாடல் தான், அதிலும் ரசிகர்களை தியேட்டரில் அமர விடாமல் தெறித்து வெளியே ஓடுங்கள் என விரட்டிவிடுகிறார் சாம் சிஎஸ். பின்னணி இசை கேட்கவே வேண்டாம், கப்பல் ஜென்ரேட்டர் ரூமில் சிக்கிக் கொண்டதை போல ஃபீல் பண்ண வைக்கிறது.

ஜெயம் ரவிக்கு திருஷ்டி பொட்டு

ஜெயம் ரவிக்கு திருஷ்டி பொட்டு

ஒட்டுமொத்தமாக அகிலன் திரைப்படம் ஜெயம் ரவி கேரியரில் திருஷ்டி பொட்டாக வந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் கூட ஒரு தூக்கம் போட்டு முழித்துவிடலாம் போல, அவ்வளவு அயர்ச்சியான காட்சிகள். அதுவும் கூட கோர்வையாக இல்லாமல் கடல் நண்டை பிடித்து அதனை உயிருடன் ரசிகர்களின் தொண்டைக்குள் விட்டதைப் போல ஜீரணிக்க முடியவில்லை. ஜெயம் ரவி - கல்யாண் கிருஷ்ணன் கூட்டணியில் வெளியான பூலோகம் திரைப்படத்தை விடவும், ரொம்பவே சுமார் ரகமாக வெளியாகியுள்ளது அகிலன். படம் எப்படா முடியும் என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள் போல ரசிகர்கள், எண்ட் கார்டு போட்டதும் திரையரங்குகளில் 50 மீட்டர் ரன்னிங் ரேஸ் நடந்ததையும் பார்க்க முடிந்தது. அகிலன் - தான் யாரென்று தனக்கே தெரியாதவன்.!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X