Jigarthanda Double X Review: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஜிகர்தண்டா படத்தில் இயக்குநராக சித்தார்த்தும் அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹாவும் நடித்திருப்பார்கள். கடைசியில் அழுகினி குமாராக ஒரு பயங்கர கேங்ஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் காட்டி ஒட்டுமொத்த தியேட்டரின் கைதட்டலையும் பெற்று வெற்றி இயக்குநர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராகவும், ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் நடித்துள்ள இந்த படத்தில் என்ன மாதிரியான ட்விஸ்ட் இருக்கிறது என்றும் படம் பார்க்கலாமா? வேண்டாமா? என ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டு வரும் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க..
இதுதான் சினிமா: ஜிகர்தண்டா படத்தில் இருப்பது போலவே இந்த படத்திலும் செம ட்விஸ்ட் இடைவேளையிலேயே உள்ளதாகவும், மேலும், இதுதான் ரியல் சினிமா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தீபாவளி வின்னராக கார்த்தியின் ஜப்பான் இருக்குமா? ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இருக்குமா? என்கிற பஞ்சாயத்தும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ரொம்ப இன்டென்ஸான படம்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரொம்பவே இன்டென்ஸா இருக்கிறது என்றும் கேரக்டருக்குள் டபுள் லேயர் ட்ரீட்மென்ட்டை கார்த்திக் சுப்புராஜ் பக்காவாக வைத்து இரு நடிகர்களையும் பில்டப் பண்ணி கொண்டு வந்து நிறுத்தும் இடத்தில் தியேட்டர் தெறிக்குது என அபிஷேக் ராஜா விமர்சித்துள்ளார்.
இடைவேளை தெறிக்குது: ஸ்ரீதர் பிள்ளை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து விட்டு இடைவேளை காட்சி தெறிக்குது என்றும் இப்படியொரு இன்டர்வெல் பிளாக் போதும் இந்த படத்தை ஹிட் படமாக மாற்ற என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
ஃபேன்பாய் சம்பவம்: ரஜினிகாந்தின் ஃபேன் பாயான கார்த்திக் சுப்புராஜ் உங்க எல்லாரையும் ஓட விட ஒருத்தன் வருவான் டா என வசனம் வைத்து தான் எந்தளவுக்கு தீவிர ரஜினி ரசிகர் என்பதை மீண்டும் ஜிகர்தண்டா 2 படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
ஜிகர்தண்டா தான் வின்னர்: இந்த தீபாவளி வின்னர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான் என்றும் ஜப்பான் சோலி முடிஞ்சுச்சு என்றும் ராகவா லாரன்ஸ் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











