ஜிகினா விமர்சனம்

By Shankar

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5
Star Cast: விஜய் வசந்த், சானியாதாரா, ஸ்ரீதேவி
Director: நந்தா பெரியசாமி

நடிகர்கள்: விஜய் வசந்த், சானியாதாரா, ஸ்ரீதேவி, சிங்கம்புலி

இசை: ஜான் பீட்டர்

தயாரிப்பு: லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் & திருக்கடல் உதயம்

இயக்கம்: ரவி நந்தா பெரியசாமி

கால் டாக்சி ஓட்டிப் பிழைப்பு நடத்தும் சாதாரண இளைஞன் பாவாடைச் சாமி (விஜய் வசந்த்). அப்பா அம்மா இல்லாத அவனுக்கு நான்கு நண்பர்கள்தான் துணை. நண்பர்களுக்கு கிடைத்ததைப் போல தனக்கும் பெண் நட்பு வேண்டும் என ஆசைப்படும் அவனை பேஸ்புக்கில் நுழைய வைக்கிறார்கள்.

தன் பெயரும் நிறமும் பெண் நட்புக்கு தடையாக இருக்குமே என்ற சந்தேகத்தில், கிஷோர் என்ற போலி பெயர் மற்றும் போலிப் படத்துடன் கணக்கு தொடங்குகிறான்.

Jigina Review

அப்போதுதான் ஏஞ்சல் என்ற பெயரில் ஒரு பெண் அறிமுகமாகிறாள் பேஸ்புக்கில். சாட்டில் பேசி காதல் வளர்க்கிறார்கள். ஒரு நாள் ஏஞ்சலை தன் டாக்சியில் சந்திக்கிறான் பாவாடை. அப்போதுதான் அவள் ஒரு பாடகி என்று தெரிந்து, இன்னும் நெருக்கமாகிறான். அந்த நேரத்தில் தான்தான் அந்த பேஸ்புக் கிஷோர் என சொல்ல முனைகிறான். ஆனால் முடியாமல் போகிறது. அப்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது, பேஸ்புக் கணக்கில் இருக்கும் ஏஞ்சல் வேறு பெண் என்பதும், பாடகியின் படத்தை போலியாகப் பயன்படுத்தியிருப்பதும்.

அடுத்து எந்தப் பெண்ணுடன் விஜய் வசந்த் சேர்ந்தார் என்பது மீதிக் கதை.

இன்றைய தலைமுறையின் போக்கை அறிந்து அவர்களுக்கேற்ற ஒரு கதையைச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி. வசனங்களிலும் காட்சி அமைப்புகளிலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் இன்னும் வேறு ரேஞ்சில் இருந்திருக்கும்.

விஜய் வசந்துக்கு மிக எதார்த்தமான வேடம். இதற்கு முன் நடித்த படங்களை விட சிறப்பாகவே அமைந்திருக்கிறது இந்தப் படத்தில் அவர் வேடம். ஏஞ்சல் என்ற பெயருக்கேற்ப தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார் சானியாதாரா.

Jigina Review

கருகுமணியாக வரும் ஸ்ரீதேவிக்கு நாயகிக்கு இணையான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

சிங்கம் புலி, ரவி மரியா மற்றும் விஜய் வசந்தின் நண்பர்களாக வரும் அந்த நால்வரும் தங்கள் வேலையைக் கச்சிதமாகச் செய்து, காட்சிகளை சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் உள்ள வேகக் குறைவை சரி செய்திருக்கலாம்.

பாலாஜி வி ரங்காவின் ஒளிப்பதிவு, ஜான் பீட்டர்ஸின் இசை இரண்டுமே படத்துக்கு ப்ளஸ்.

இந்தப் படத்தில் குறைகள் இருந்தாலும், பேஸ்புக்கே கதி என்று கிடக்கும் சமூகத்தில், அந்த பேஸ்புக்கால் வரும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கதையைச் சொன்னதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X