Black Review: பிளாக் விமர்சனம்.. ஜீவா, பிரியா பவானி சங்கருக்கு கை கொடுத்ததா இந்த சைஃபை ஹாரர்?

ரேட்டிங்:

Rating:
3.0/5

நடிகர்கள்: ஜீவா, பிரியா பவானி சங்கர்

இசை: சாம் சி.எஸ்

இயக்கம்: கே.ஜி. பாலசுப்பிரமணி

சென்னை: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'பிளாக்' திரைப்படம் வெளியானது. படத்தின் டிரெய்லரை பார்த்ததும் ரசிகர்கள் ஹாலிவுட் படமான விவாரியம் படத்தின் காப்பி என கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால், இந்த படம் 2013ம் ஆண்டு வெளியான Coherence எனும் ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்பதை படத்திலேயே குறிப்பிட்டு அந்த சர்ச்சைக்கு இயக்குநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

black  black review  jiiva

பேய் படமா? த்ரில்லர் படமா? என யோசித்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மாநாடு, டீன்ஸ் போல இது கொஞ்சம் வித்தியாசமான சைஃபை ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கருக்கு இந்த படம் கை கொடுக்குமா? இல்லையா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே காணலாம்.

பிளாக் கதை: ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். வசந்த் எனும் கதாபாத்திரத்தில் ஜீவாவும் ஆரண்யாவாக பிரியா பவானி சங்கரும் தங்கள் நடிப்பில் எந்தவொரு குறையுமின்றி நடித்துள்ளனர். புதிதாக கேட்டட் கம்யூனிட்டி வில்லா ஒன்றை வாங்கிய இவர்கள் அந்த இடத்திற்கு ஒரு நாள் ஸ்டேகேஷன் செய்கின்றனர். இவர்கள் மட்டுமே அந்த ஏரியாவில் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், திடீரென இன்னொரு வீட்டில் லைட் எரிவதை பார்த்து ஷாக் ஆகின்றனர். அங்கே போய் பார்ப்பவர்களுக்கு அங்கேயும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கரை பார்க்கும் இடத்தில் தான் படத்தின் ட்விஸ்ட் தொற்றிக் கொள்கிறது. அந்த இடத்தில் என்ன நடக்கிறது அங்கிருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: 3 மணி நேரம் படம் எடுத்தாலே சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இரண்டாம் பாதி லெந்தாக இருக்கிறது என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துள்ள நிலையில், 2 மணி நேரத்துக்கும் விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலசுப்பிரமணி. ஜீவாவுக்கு தொடர்ந்து படங்கள் பெரிதாக கை கொடுக்காத நிலையில், பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்துள்ள அவர் தனது பெஸ்ட் பர்ஃபார்மன்ஸை கொடுத்துள்ளார். பிரியா பவானி சங்கர் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். பேரலல் யூனிவர்ஸ் கதையாக படம் விரியும் இடத்தில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் இயக்குநர். ஆனால், ஒரே இடத்தில் படம் சர்க்கஸ் குதிரை போல ஓடுவது தான் ரசிகர்களை கடைசியில் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.

பிளஸ்: படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் இந்த படத்துக்கு பெரும் பலமாக மாறியுள்ளார். சாம் சி.எஸ். ஹாரர் எஃபெக்ட்டுகளை சரியாக கடத்தி ஒரு ஹாரர் த்ரில்லர் படத்தை பார்க்கும் உணர்வை வழங்கியுள்ளார். ஹாலிவுட் படத்தில் இருந்து இன்ஸ்பிரேஷன் செய்தது மட்டுமின்றி மேக்கிங்கிலும் ஹாலிவுட் படம் போலவே இயக்குநர் உருவாக்க தயாரிப்பாளர்கள் தாராளமாக செலவு செய்தது படத்திற்கு பலமாக உள்ளது. விவேக் பிரசன்னா வரும் இடங்களும் படத்திற்கு பலம் கூட்டுகிறது.

மைனஸ்: முதல் பாதி முழுக்க விறுவிறுப்பாக செல்லும் பிளாக் திரைப்படம் இரண்டாம் பாதியில் முக்கிய கதைக்கு வரும் இடத்தில் சில சொதப்பல்களை சந்திக்கிறது. படத்தில் குறை இருப்பதை தாண்டி படம் புரியவில்லை என்பது தான் பெரிய குறையாக மாறிவிடுகிறது. கடைசி 20 நிமிடக் காட்சியை இயக்குநர் கொஞ்சம் தெளிவாக ரசிகர்களுக்கு புரியும் அளவுக்கு இயக்கி இருந்தால் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும். வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X