Mix n Match Mappillais Review: ஐயா.. பொண்டாட்டி மாறிப்போச்சு.. ரீல்ஸ் பாக்குற கேப்ல ஒரு வெப் சீரிஸா?

சென்னை: ஸ்மார்ட்போனும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும் நம் கைகளை ஆக்கிரமித்திருக்கும் இந்த காலகட்டத்தில், தியேட்டருக்குப் போகவோ, டிவி முன்னாடி உங்காந்து மணிக்கணக்கில் வெப் சீரிஸ் பார்க்கவோ நேரமில்லாத சினிமா பிரியர்களுக்காகவே செதுக்கப்பட்ட ஒரு அட்டகாசமான புது முயற்சிதான் 'ஒன்-மினிட்' மினி வெப் சீரிஸ்கள், அந்த வகையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டாகி இருக்கும் ''Mix n Match Mappillais'' மினி வெப் சீரிஸின் சுவாரசியமான விமர்சனம் இதோ.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என 60 செகண்ட் வீடியோக்களைப் பார்த்துப் பழகிய நமக்கு, அதே ஃபார்மட்டில் உருவான வெப் தொடர் தான் 'Mix n Match Mappillais'. இதில் மொத்தம் 25 எபிசோடுகள் உள்ளன. இதைக்கேட்டதுமே அப்பாடா... அவ்வளவு நேரமா? எனப் பயப்பட வேண்டாம். ஏனெனில், ஒரு எபிசோடின் ரன்-டைம் வெறும் 'ஒரே ஒரு நிமிடம்' தான். அதாவது, அடுத்த 25 நிமிடங்களில் ஒரு முழு வெப் சீரிஸை நீங்கள் பார்த்து முடித்துவிடலாம்.

Mix n Match Mappillais  web series  review  Jio Hotstar
Photo Credit:

மாறிய தாலி: ஒருகோவிலில் ஏகப்பட்ட ஜோடிகளுக்கு ஒரே மேடையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடக்கிறது. கெட்டிமேளம் முழங்க, ஹோம குண்டப் புகை அந்த இடத்தையே முழுமையாக மறைக்கிறது. அந்தப் புகைமூட்ட குழப்பத்தில் கதிர், காவியாவிற்கும்... மகேஷ், ராதிகாவிற்கும் என மாற்றித் தாலி கட்டிவிடுகிறார்கள். விஷயம் தெரிந்ததும் இரு தரப்பு குடும்பமும் அதிர்ச்சியடைகிறது. கோவில்ல வச்சு தாலி கட்டியாச்சு, இனி நீங்க சேர்ந்துதான் வாழணும் எனப் பெரியவர்கள் பஞ்சாயத்து செய்ய, இந்தத் திணிக்கப்பட்ட திருமணத்தில் இரண்டு ஜோடிகளுக்குமே விருப்பம் இல்லை.

Mix n Match Mappillais: இதனால், திருமணமான அடுத்த நாளே, விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுகிறார்கள். அடுத்த நாளே ஜோடிகள் விவாகரத்து கேட்பதைப் பார்த்து ஸ்தம்பித்துப் போன நீதிபதி, இவர்களுக்கு உடனடியாக விவாகரத்து தராமல், பரஸ்பரமாக இரண்டு ஜோடிகளும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும், இவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். அதன் பிறகும் இதே முடிவில் இருந்தால் விவாகரத்து தரப்படும் என்கிறார். அதன் பின், இந்த இரண்டு ஜோடிகளும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அதன் பிறகு இவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? ஈகோ உடைந்ததா? அல்லது பிரிந்தார்களா? என்பதுதான் 'Mix n Match Mappillais' வெப்தொடரின் கதை.

Mix n Match Mappillais  web series  review  Jio Hotstar
Photo Credit:

பிளஸ் பாயிண்ட்ஸ்: இந்த மினி சீரிஸில் மோதேஷ் ஆர்.கே, பூர்ணிமா மீரா, பவித்ரா சீனிவாசன், தருண் ஷிவா ஆர், திலீப் மற்றும் பவித்ரன் ஜோ எனப் பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வெறும் ஒரு நிமிட எபிசோட் என்பதால், பெரிய அளவில் எக்ஸ்பிரஷன் காட்டி நடிக்கக் கூட நேரம் இல்லை. ஆனாலும், அதற்குள் தங்களின் எதார்த்தமான நடிப்பால், காமெடி மற்றும் எமோஷனை கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார்கள். இயக்குனர் கதையை எங்கும் தொய்வில்லாமல், அடுத்த எபிசோடில் என்ன நடக்கும்? என்ற ஆர்வத்தை ஒவ்வொரு 60 வினாடிகளிலும் தூண்டும் விதமாகத் திரைக்கதை அமைத்திருப்பது மிகப்பெரிய பலம். தேவையில்லாத சென்டிமென்ட், வசனம் என எதுவுமே இல்லாமல் படம் ரசிக்கும்படி இருக்கு.

சினிமா பிரியர்களுக்காக: சோசியல் மீடியாவில் எதையாவது சும்மா ஸ்க்ரோல் செய்து டைம்பாஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், ஆபீஸ் பிரேக் டைமில் ஜாலியாக எதையாவது பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்த மினி வெப் சீரிஸ் ஒரு பக்கா சாய்ஸ். ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகியிருக்கும் இந்த 'மிக்ஸ் அண்ட் மேட்ச் மாப்பிள்ளைஸ்' தொடரை தாராளமாக பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X