John Wick 4 Review: வந்தா சுட்டான் ரிப்பீட்டு.. ஹை டேபிளின் அதிரடி.. ஜான் விக் விமர்சனம்!

Rating:
3.5/5

நடிகர்கள்: கீயானு ரீவ்ஸ், டோனி யென்
இசை: டைலர் பேட்ஸ், ஜோயல் ஜே. ரிச்சர்ட்
இயக்கம்: சட் ஸ்டாஹெல்ஸ்கி

லாஸ் ஏஞ்சல்ஸ்: மேட்ரிக்ஸ், ஜான் விக் படங்கள் மூலம் உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்களை கொண்டவர் ஹாலிவுட் நடிகர் கீயானு ரீவ்ஸ். ஏற்கனவே வெளியான ஜான் விக் படத்தின் மூன்று பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய நிலையில், 4வது பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 3 மணி நேரம் ஓடக் கூடிய பெரிய படமாக இந்த படத்தை இயக்குநர் சட் ஸ்டாஹெல்ஸ்கி (Chad Stahelski) இயக்கி உள்ளார்.

ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் 25 நிமிடங்களுக்கு மேல் நீள்வது ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கான வேறலெவல் ட்ரீட்டாகவே பார்க்கப்படுகிறது.

ஜான் விக் கதை

ஜான் விக் கதை

உலகத்துல யாரா இருந்தாலும் போட்டுத் தள்ளுர ஒரு பெரிய கூலிப்படை இயக்கம் தான் ஹை டேபிள். அதில், ஒருவராக வேலை பார்த்து வந்த ஜான் விக் தனது மனைவி மரணத்துக்கே ஹை டேபிள் ஆட்கள் தான் காரணம் என பந்தாட ஜான் விக் ஆரம்பிக்கிறார். அதே சமயம் ஜான் விக்கை போட்டுத் தள்ள ஹை டேபிள் ஆட்கள் பலம் வாய்ந்த வில்லன்களை ஒவ்வொரு பாகமும் அனுப்பி வைக்கின்றனர். இதில், யார் யாரை வீழ்த்தினார்கள் என்பதை விட ஸ்டன்ட் காட்சிகள் எப்படி பிரம்மிக்க வைத்தன என்பதாகவே இந்த படம் ஒவ்வொரு பாகமாக கடந்து வருகிறது. இந்த பாகத்தின் கதையும் அதே தான்.

3வது பாக தொடர்ச்சி

3வது பாக தொடர்ச்சி

3வது பாக முடிவில் ஜான் விக்கை சுட்டுக் கொன்ற நிலையில், அத்தனையாவது மாடியில் இருந்து விழுந்த ஜான் விக் அப்படியே மீண்டும் எழுந்து வந்து எதிரிகளை பந்தாடுவது தான் இந்த படத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. துணிவு படத்தில் அஜித்தை எத்தனை புல்லட்டுகள் சுட்டாலும் ஒன்றும் ஆகாது என்பது போலத்தான் இந்த படத்திலும் ஜான் விக்கை யாராலும் ஏன் எந்த புல்லட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. லாஜிக் இல்லாத மேஜிக்காக ஆக்‌ஷன் காட்சிகளின் நேர்த்தியையும் டெக்னாலிஜின் சித்து விளையாட்டுக்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு ஜான் விக்கை ஒரு சூப்பர் மேனாகவே காட்சிப்படுத்தி வருகின்றனர்.

எதெல்லாம் ஹைலைட்

எதெல்லாம் ஹைலைட்

படம் முழுக்க சண்டை சரவெடியாக இருக்கிறது. வில்லனாக இந்த பாகத்தில் சீன நடிகர் டோனி யென் நடித்துள்ளார். கண் தெரியாத அவர் ஜானி விக் செய்வதை எல்லாம் செய்து மிரட்டுகிறார். அதுக்கும் மேலயும் ஸ்டன்ட் செய்து ஜான் விக்கையே தலை தெறிக்க ஓட விடுகிறார். டிராபிக்கில் நடக்கும் கார் ஸ்டன்ட் சீன் ஒன்றே போதும், தாராளமாக 200 ரூபாய் டிக்கெட் கொடுத்து தியேட்டரில் இந்த படத்தை பார்க்க, இயக்குநர் சட் கேமராமேனை இந்த காட்சியில் பாடாய்ப்படுத்தி உள்ளார்.

மாடிப்படி சண்டை

மாடிப்படி சண்டை

கார் ஸ்டன்ட் காட்சியை போலவே கிளைமேக்ஸில் வரும் அந்த படிக்கெட்டு சண்டை காட்சியும் ரசிகர்களை அதன் சிங்கிள் டேக் சாகச கட்ஸ் காரணமாக பிரம்மிக்க வைக்கிறது. கதையா முக்கியம் கீயானு ரீவ்ஸின் ஆக்‌ஷனை பாருடா என ஜான் விக் ரசிகர்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை பறக்க விடும் அளவுக்கு 3 மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு ஆக்‌ஷன் அதகளம் செய்துள்ளது இந்த படம்.

பிளஸ்

பிளஸ்

கீயானு ரீவ்ஸ்க்கு கடைசியாக மேட்ரிக்ஸ் 4 படம் கை கொடுக்கவில்லை. அந்த படத்தை பெரிதும் நம்பி இருந்தார். உடனடியாக தனது பிரம்மாஸ்திரமான ஜான் விக் படத்தின் 4ம் பாகத்தை வெளியிட்டுள்ளார். நிச்சயம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய மிரட்டல் சாதனையை படைக்கும் என தெரிகிறது. கீயானு ரீவ்ஸ், டோனி யென், பில் ஸ்கார்ஸ்கார்ட், ஹீரோயுகி சனாடா என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை கச்சிதமாக செய்து கலக்கி உள்ளனர். படத்தின் கேமரா ஒர்க், பின்னணி இசை மற்றும் ஸ்டன்ட் டைரக்டர் தான் மிகப்பெரிய பிளஸ்.

மைனஸ்

மைனஸ்

எமோஷனல் கனெக்ட் முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு தொடர்ந்து மற்ற பாகங்களில் மிஸ் ஆகிறது. இதிலும், ஒரு இளம் பெண்ணை வைத்து லேசாக எமோஷனல் கனெக்ட் டச் பண்ணியுள்ளனர். ஆனால், மற்றபடி பெரிதாக ரசிகர்களை திரைக்கதை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஒவ்வொரு ஃபைட்டும் ரொம்ப லென்தா போறது ஒரு கட்டத்தில் ரசிகர்களை டென்ஷன் ஆக்குகிறது. 3 மணி நேர நீளத்தை சற்றே குறைத்திருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X