கன்றாவி.. ஆங்கில படத்தை பார்த்து..“வளத்து வசதே கல்லன்“ மலையாள பட விமர்சனம்!

சென்னை: த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2, மெமரீஸ் போன்ற பல வெற்றிப்படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் "வளத்து வசதே கல்லன்". இதில் பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். க்ரைம், த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஜனவரி 30ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து ப்ளூசட்டை மாறன் விமர்சனம் கொடுத்துள்ளார்.

அதில், "வளத்து வசதே கல்லன்" திரைப்படத்தின் கதை என்னவென்றால், படத்தில் பிஜு மேனன்ஒரு கரைபடிந்த காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இந்த காவல் நிலையத்திற்கு வரும் ஜோஜு ஜார்ஜ் என்னுடைய மகள் காணவில்லை என புகார் கொடுக்க வருகிறார். காவல்நிலையத்திற்கு வரும் ஜோஜு ஜார்ஜுக்கு இன்ஸ்பெக்டர் பிஜு மேனன் மீது சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகம் என்ன? அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் "valathu vashathe kellan'' படத்தின் கதை.

malayalam  review
Photo Credit:

வளத்து வசதே கல்லன்: ஜித்து ஜோசப் திரைப்படம் திரைப்படம் என்பதால் ஆர்வத்துடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பிக்க போது மிகவும் அருமையாகவே ரசிக்கும்படி இருந்தது. ஆனால், வழக்கமான திரைப்படம் போல, ஒரு குடும்பம் எப்படி சந்தோஷமா இருந்தது என்பதை சொல்வதை போல ஒரு பாட்டை வைத்து சொதப்பிவிட்டார். அதோடு மட்டுமில்லாமல், திரைப்படங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தான் பழி வாங்குவார்கள். ஆனால், இந்த படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விடுகிறார்கள். ஊரில் இருக்கும் பல ஆங்கில படங்களை பார்த்து தவறாக புரிந்து கொண்டு இந்த திரைப்படத்தை இயக்குநர் எடுத்து இருக்கிறார்.

வகை தொகை இல்லாத படம்: பாதிக்கப்பட்டவன் நல்லவனாக இருந்தால், அவன் காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்போம், நல்லவனாக இருந்தால் அவன் அழிய வேண்டுமென நினைப்போம். ஆனால், படத்தில், ஒரு கெட்டவனை காப்பாற்ற வேண்டும் என படம் முழுக்க போராடுகிறார்கள் கடைசியில், அவனை எப்படியாவது நாசமா போ என விட்டுவிடுகிறார்கள். இப்படி வகை தொகை இல்லாமல் ஒரு படத்தை எடுத்து வைத்து இருக்கிறார்கள் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X