twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    July Kaatril review: ஒரு முக்கோண காதலும்... இன்றைய இளம் தலைமுறையும்... ஜூலை காற்றில்! விமர்சனம்

    இன்றைய இளம் தலைமுறை காதலை பற்றி பேசுகிறது ஜூலை காற்றில் திரைப்படம்

    |

    Rating:
    2.0/5
    Star Cast: ஆனந்த் நக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஷ்
    Director: கே சி சுந்தரம்

    Recommended Video

    July katril Movie Audience Review | ஜூலை காற்றில் படம் எப்படி இருக்கு? | Filmibeat Tamil

    சென்னை: இன்றைய இளம் தலைமுறையினர் காதல் குறித்து முடிவெடுக்க முடியாமல் எப்படி திணறுகிறார்கள் என்பது பற்றி பேசுகிறது ஜூலை காற்றில்.

    ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் நாயகன் அனந்த் நாக், காதலிக்க ஆள்கிடைக்காமல் அல்லாடுகிறார். அப்போது அவருக்கு அஞ்சு குரியனின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் டேட் செய்கிறார்கள். அஞ்சுவுக்கு அனந்த் மீது காதல் வருகிறது. ஆனால் அனந்த்துக்கு அஞ்சு மீது பெரிய ஈர்ப்பு எதுவும் வரவில்லை.

    July Kaatril review: A romantic on relationship

    இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் சம்யுக்தா மேனன் மீது அனந்த்துக்கு காதல் வருகிறது. தனக்கான ஜோடி சம்யுக்தா என முடிவெடுக்கும் அனந்த், அஞ்சுவுடன் பிரேக்கப் செய்துவிட்டு, சம்யுக்தாவுடன் காதல் சல்லாபல் செய்கிறார். ஒருகட்டத்தில் சம்யுக்தாவுடன் பிரேக்கப் ஆகிறது. கடைசியில் இந்த முக்கோண காதல் என்ன ஆகிறது என்பதை ஒவ்வொருவர் கோணத்தில் இருந்தும் விவரிக்கிறது படம்.

    இந்த காலத்து இளைஞர்கள் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் எந்த அளவுக்கு அலைபாய்கிறார்கள் என்பதை அனந்த் நாக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் விளக்கியுள்ளார். அதனை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையின் மூலம் விவரித்து, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

    July Kaatril review: A romantic on relationship

    அனந்த் நாக்குக்கு நாயகனாக முதல் படம். குழப்பமாகும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளிலும் குழப்பமாகவே இருப்பது ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

    July Kaatril review: A romantic on relationship

    சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் என இரண்டு கதாநாயகிகளும் படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறார்கள். அஞ்சு குரியன் சேலையில் அழகாக வந்து காதலிக்க வைக்கிறார். சம்யுக்தா மேனன் தன் பங்குக்கு மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். இரண்டு கதாநாயகிகளும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

    படத்தை கலகலப்பாக நகர்த்துவது சதீஷ் தான். தனது வழக்கமான ஒன்லைன் கவுண்டர் வசனங்கள் மூலம் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறார். படத்தில் நடித்துள்ள மற்றவர்களும், தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

    July Kaatril review: A romantic on relationship

    இதுபோன்ற காதல் படத்துக்கு இசை மிகவும்முக்கியம். ஆனால் ஜோஸ்வா ஸ்ரீதரின் இருப்பை டைட்டிலில் மட்டுமே பார்க்க முடிகிறது. ரீரெக்கார்டிங்கும் காட்சிகளுக்கு தகுந்தார் போல் இல்லை.

    சேவியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் வண்ணமயமாக இருக்கிறது. அதுவும் காதல் காட்சிகளை ரசித்து, ருசித்து எடுத்திருக்கிறார். நிறுத்தி, நிதானமாக, மிக பொறுமையாக எடிட் செய்திருக்கிறார் அனுசரன்.

    July Kaatril review: A romantic on relationship

    படம் ஆரம்பத்தில் இருந்தே அன்ன நடை போட்டு மெதுவாக நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து காட்சிகள் விரிவதால், பார்த்த காட்சியையே மீண்டும் பார்ப்பது சுவாரஸ்யமாக இல்லை. காதல் படங்களில் வசனமும், இசையும் தான் முக்கியம். ஆனால் இதில் இந்த இரண்டு விஷயங்களும் சொதப்பல். படத்தின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம்.

    ஒரு வார்த்தை சொன்ன ஜி. வி. பிரகாஷ்: 'அசுரன்' தனுஷ் ரசிகர்கள் ஹேப்பிஒரு வார்த்தை சொன்ன ஜி. வி. பிரகாஷ்: 'அசுரன்' தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி

    இருந்தாலும், காதலில் ஏற்படும் மனக்குழப்பங்களை தெளிவாக சொன்ன விதத்தில் இந்த ஜூலை காற்றில், இளைஞர்களுக்கான தென்றலாக மாறி இருக்கிறது.

    English summary
    The tamil movie July Kaatril is a romantic drama, starring Ananth Nag, Anju Kurian, Samyuktha Menon in the lead role, show how the youngsters today handle love and relationship in their life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X