twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜுமான்ஜி தி நேக்ஸ்ட் லெவல் - முதல் பாகத்தை விட கலாட்டா காமெடி கொண்டாட்டம் மூன்றுமே நேக்ஸ்ட் லெவல்

    |

    Rating:
    3.5/5
    Star Cast: டுவைன் ஜான்சன், கரேன் கிள்ளன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், நிக் ஜோன்ஸ்
    Director: ஜேக் கஸ்டன்

    சென்னை: "ஜுமான்ஜி நெக்ஸ்ட் லெவல்" வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. பழைய ஜுமான்ஜி கதையை கொஞ்சம் மெருகேற்றி வேற சாயலில் மக்களுக்கு பிடிக்கும் மாதிரி இப்படம் வெளிவந்துள்ளது.

    ஜுமான்ஜி இந்த படத்தில் அதிகபடியான பிரம்மாண்டத்தை மட்டும் சொல்லாமல் நிறைய கதைகளை சொல்லி இருக்காங்கா. ஏகப்பட்ட மிகப்பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். பழைய கதையை கொஞ்சம் மெருகேற்றி வேற சாயலில் மக்களுக்கு பிடிக்கும் மாதிரி வெளியாகியுள்ளது இந்த ஜுமான்ஜி நெக்ஸ்ட் லெவல். ஜுமான்ஜி படங்களின் வரிசையில் வரும் நான்காவது பாகம் இது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் படத்தின் அடுத்த பாகம் தான் இது.

     Jumanji the next level review,

    முன்பு வெளியான பாகத்தின் தொடர்ச்சியாக கதை நகர்கிறது. படம் ஆரம்பித்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் அவர்கள் அந்த கேம்க்குள் சென்று விடுகின்றனர். முந்தைய ஜுமான்ஜி படங்களை போல அந்த சாகச விளையாட்டிற்குள் சென்று பல தடைகளை தாண்டி மீண்டும் எப்படி வெளியே வருகின்றனர் என்பதை சுவாரசியமாக திரில்லாக சொல்லி இருக்குறாங்க.

     Jumanji the next level review,

    படம் ஆரம்பத்தில் ஒரு சிறுவன் ஜுமான்ஜி விளையாட்டை விளையாடும் பொருளை எதார்த்தமாக சரி செய்யும் போது அந்த விளையாட்டிற்குள் போய்விடுகிறான். அவனை காணவில்லை என்று அவன் நண்பர்களிடம் அவனது தாத்தா கேட்கிறார் அவன் அறையில் சென்று பார்த்தால், அவன் அந்த கேம்மை விளையாடி உள்ளான் உள்ளே சென்று விட்டான் என்று அவனது நண்பர்கள் உணர்கிறார்கள் அவனை காப்பாற்ற நண்பர்களும் தாத்தாவும் அந்த விளையாட்டை விளையாடி அதன் உள்ளே செல்கிறார்கள்.

     Jumanji the next level review,

    உள்ளே செல்லும் அனைவரும் இளமையாக மாறுகிறார்கள். பாலைவனம், அடர்ந்த காடுகள், மலைகள் போன்றதை கடந்து அவர்களின் நண்பனை காப்பாற்ற வேண்டும். உள்ளே செல்ல மூன்று வாய்ப்பு தான் அதற்குள்ளே அவர்கள் வெளியே வர வேண்டும். அவர்கள் வெளியே வந்தார்களா? உள்ளேயே மாட்டிக்கொண்டார்களா? என்பதை பல டிவிஸ்ட்களுடன் சொல்லி இருக்கிறது படம்.

    த ராக் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சான் முந்தைய பாகத்தை போல இதிலும் தன் வேலையை மிகவும் சரியாக செய்து ஆக்சன் காட்சிகளில் மிரட்டி உள்ளார். தன் பங்கிற்கு ஜாக் பிளாக் காமெடியில் கலக்கியுள்ளார். கரேன் கிள்ளான் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அப்ளாஸ்சை அள்ளுகிறார். படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்ததுதான்.

     Jumanji the next level review,

    பாலத்தின் மீது வரும் சண்டை காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது. படத்தில் ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருக்கிறது ஒரு ஹாலிவுட் படத்தை தமிழில் பார்த்த உணர்வு இருந்தது. இப்படத்தை ஹாலிவுட் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆக இருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

    Read more about: hollywood review
    English summary
    Jumanji the next level review,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X