twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Movie Review :அமேசான் காடுகளை சுற்றி காட்டும் "ஜங்கிள் கூருஸ்" எப்படி இருக்கு

    |

    Rating:
    3.0/5
    Star Cast: நடிகர்கள் : டுவைன் ஜான்சன் எமிலி பிளண்ட் எட்கர் ஜாக் வைட்ஹால்
    Director: இயக்கம் : ஜ்வமே கொலெட் -செர்ரா

    சென்னை : "உடைந்த இதயத்தை சரிசெய்ய" தேவைப்படும் ஒரு திரைப்படம் தொடங்குவதற்கு இதயம் இருக்க வேண்டும்.அதை நன்கு புரிந்த டிஸ்னி மிகவும் அழகாக எல்லா வயதினரும் பார்த்து மகிழும்படி ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக "ஜங்கிள் கிருஸ்" திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்

    எமிலி பிளண்ட் மற்றும் டுவைன் ஜான்சன் ஆகிய இரண்டு தனித்துவமான அழகைக் கொண்ட நடிகர்கள், மிகவும் நேர்த்தியாக கொடுத்த வேலையை மிகவும் பிரம்மாணடமாக செய்து உள்ளனர் .

    அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!

    டிஸ்னியின் சாகச படங்களில் இந்த "ஜங்கிள் கூருஸ்" மிகவும் முக்கியமான படம் ஆகும் .எமிலி பிளண்ட் மற்றும் டுவைன் ஜான்சன் மிகவும் அற்புதமாக சாகசம் செய்து நடித்து உள்ளார்கள் .இருந்தாலும் கூட சில காரணங்களால், இருவரும் திரையில் ஜெல் செய்யத் தவறிவிட்டனர் என்று சில ஹாலிவுட் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் .

     கப்பல் பயணம்

    கப்பல் பயணம்

    படம் ஆரம்பித்த முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் காட்சி வரை பரபரப்பின் உச்சமும் நிறைய அட்வென்சர்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் . அடர்ந்த காட்டுப் பகுதிகள், அதற்குள் செல்லும் ஒரு அற்புதமான கப்பல் பயணம் அந்த பயணத்தின் பொழுது ஏற்படும் திடுக்கிடும் சம்பவங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக பேண்டசி கலந்த ஒரு பொழுதுபோக்கு படம் "ஜங்கிள் கிருஸ்".

    காமெடி கலந்த ஸ்டன்ட்ஸ்

    காமெடி கலந்த ஸ்டன்ட்ஸ்

    ஹாலிவுட் படங்களில் (ராக்) டுவைன் ஜான்சன் நடிக்கிறார் என்றால் அந்தப் படத்திற்கு ஒரு கூடுதல் எதிர்ப்பார்ப்பு ஒட்டிக்கொள்ளும் . அதேபோல் இந்த படத்திலும் ரசிகர்களின் ஆச்சரியங்களும் அதிகப்படியான எதிர்பார்ப்பும் நிறைவேறும் வண்ணம் காமெடி கலந்த ஸ்டன்ட்ஸ் மற்றும் லாஜிக் இல்லா மேஜிக் காட்சிகள் அடுக்கடுக்காய் அள்ளிக் கொடுத்துள்ளனர்.

    கிளையில் உள்ள இலை

    கிளையில் உள்ள இலை

    அமேசான் காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பலவிதமான தடைகளைத் தாண்டி போராடுகிறார்கள். ஒரு நுட்பமான மரத்தையும் அந்த மரத்தின் சக்திவாய்ந்த ஒரு கிளையையும் அந்தக் கிளையில் உள்ள இலையையும் தேடி தேடி சோர்வுற்று மீண்டும் தேடி, காடு மேடு மலை என்று நாம் பார்த்துப் பார்த்துப் பழகிய பல சிறு வயது கதைகள் இந்த படத்திலும் உள்ளது. போகும் பாதையில் பழங்குடியினர் செவ்விந்தியர்கள் போல் வேடமிட்டு சினிமாவுக்கே உரித்தான பாணியில் காட்டுவாசி வாழ்க்கையை பதிவு செய்து அந்த காட்சிகளை இயக்குனரே கிண்டலும் செய்து உள்ளார். அட்வென்சர் படங்களில் வரும் ரெகுலரான காட்சிகள் இந்தப் படத்திலும் வரும் ஆனால் அந்தக் காட்சிகளை கொஞ்சம் கேலி செய்து கிண்டலாக வர்ணித்து இயக்குனர் அடுத்த கட்டத்திற்கு செல்வது சாமர்த்தியம் .

    நிலவின் கண்ணீர்

    நிலவின் கண்ணீர்

    பல நூற்றாண்டுகளாக சாபம் பெற்ற படை வீரர்கள் ஒரு குகையில் மாட்டி கொள்வதும் அவர்களுக்கு மோட்சம் கிடைத்தபின் உயிர்த்தெழுந்து சக்திவாய்ந்த மனிதர்களாக மாறி என்னென்ன செய்கிறார்கள் என்பது இன்னொரு பக்கம் தொடர்கிறது. "நிலவின் கண்ணீர்" என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான, யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத பொக்கிஷமான ஒரு இலை- அதைத் தேடும் பல கும்பல்கள் கடைசியில் அந்த நிலவின் ஒளியுடன் யாருக்கு இலை கிட்டியது அதை வைத்து என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

    செல்லப் பிராணியான  புலி

    செல்லப் பிராணியான புலி

    படம் முழுவதும் பல கதாபாத்திரங்கள் வந்து இருந்தாலும் vfx அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட செல்லப் பிராணியான புலி குழந்தைகளை மிகவும் கவரும். புலியின் நடிப்பு கதாநாயகனின் அன்பு போன்ற சில காட்சிகள் குட்டி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். படம் முழுக்க எதார்த்தமான வசனங்கள் பேசி ஆங்காங்கே கடி ஜோக்குகளை அள்ளி வீசி சாகசம் செய்யும் ஒரு வினோதமான கதாநாயகன் டுவைன் ஜான்சன். அந்த கடி ஜோக்குகள் சில இடங்களில் சலிப்பு தட்டினாலும் பல இடங்களில் சிரிப்பு வர வைக்கிறது.

    ஜாலி என்டர்டைன்மென்ட்

    ஜாலி என்டர்டைன்மென்ட்

    அட்வென்சர் படங்களை காலம் காலமாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதுதான் மிகப்பெரிய மைனஸ். இருந்தாலும்கூட காலத்தின் மாற்றத்திற்கேற்ப VFX தொழில்நுட்பத்துடன் சில பல நல்ல முயற்சிகளை இந்தப்படத்தின் குழு செய்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் திரைக்கதையில் மேலும் சுவாரஸ்சியம் கூடியிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் கூட இந்த படத்தை தியேட்டர்களில் சென்று குடும்பத்துடன் பார்த்தால் கண்டிப்பாக ஒரு ஜாலி என்டர்டைன்மென்ட் பார்த்த திருப்தி கிடைக்கும்.

    கம்பேர் செய்யாமல்

    கம்பேர் செய்யாமல்

    ஒல்லியாக லில்லி எனும் கதாபாத்திரத்தில் "எமிலி பிளண்ட்" அசத்தி உள்ளார் .ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் அசால்ட்டாக சண்டை செய்து அனைவரையும் கவர்ந்து உள்ளார் . லில்லி மற்றும் பிராங்க் ஓல்ஃப் ( எமிலி பிளண்ட் மற்றும் டுவைன் ஜான்சன் ) படம் முழுக்க நம்முடன் நிறைய நிறைய ட்ராவல் செய்து இறுதியில் இனிமையான ஃபேர்வெல் கொடுத்து மனதை நெகிழ செய்கிறார்கள். இந்த படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரசிக்க வைக்கிறது. பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்,ஜுமான்ஜி , அனகோண்டா,இண்டியானா ஜோன்ஸ் போன்ற படங்களை பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தை கம்பேர் செய்யாமல் இருக்கமாட்டார்கள். என்னதான் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அவரவர் மனதில் பிடித்த படங்கள் தான் முதன்மையாக நிற்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

    English summary
    jungle cruise is one among the most expected movie from disney. lots of fans following DWAYNE JOHNSON are very eager to share their experience with family watching in big screen. jungle cruise will bring more kids and families to theaters for an adventurous ride inside amazon forest which will create an impact inside mind for hours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X