Jurassic World Rebirth Review: ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் விமர்சனம்.. ஏகப்பட்ட டைனோசர்கள்.. படம் எப்படி?
சென்னை: ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழில் 3டியில் வெளியாகியுள்ள இந்த படத்தில் நம்ம அவெஞ்சர் பிளாக் விடோ ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்திருக்கிறார். டைனோசர்களை எல்லாம் தனது இரண்டு கைகளில் அடித்து விளையாடும் காட்சிகளை எல்லாம் வைத்து விடக் கூடாது என ஆரம்பத்திலேயே வேண்டிக் கொண்டது போல அவர் கடைசி வரை அப்படியொரு ஸ்டன்ட்டை எல்லாம் இந்த படத்தில் செய்யாமல், படத்துக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
மான்ஸ்டர் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான கேரத் எட்வர்ட்ஸ் காட்ஸில்லா, ரோக் ஒன்: ஸ்டார் வார்ஸ், தி கிரியேட்டர் படங்களை தொடர்ந்து இந்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். சுமார் 1500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கியுள்ளனர். ப்ரீமியர் ஷோ மூலமாகவே 30 மில்லியன் வரை பாக்ஸ் ஆபீஸ் வந்துள்ளதாக கூறுகின்றனர்.

தொடர்ந்து ஹாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸிலும் கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் எஃப் 1, அடுத்த வாரம் சூப்பர்மேன் என லைன் கட்டியுள்ள நிலையில், இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படம் எப்படி இருக்கு என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் கதை: ஜுராசிக் பார்க் உருவாக்குவதற்காக மியூட்டண்ட் செய்யப்பட்ட டைனோசர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த தீவையே அட்டகாசம் செய்ய ஆரம்பித்த நிலையில், அதை அப்படியே விட்டு விட்டு ஆராய்ச்சிக் குழு எஸ்கேப் ஆகிவிடுகிறது. அந்த ஈக்வேடார் பகுதிக்கு சென்று 3 விதமான டைனோசர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்கிற வேலையை கூலிப்படை தலைவி போன்ற ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு வழங்கப்படுகிறது. அதை கொண்டு வந்தால், பல கோடி ரூபாய் கிடைக்கும். அதற்காக பிரபல ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹென்ரி லூமிஸை (ஜோனதன் பெய்லி) ஜோரா பென்னட் (ஸ்கார்லெட் ஜோஹன்சன்) அழைத்துக் கொண்டு ஒரு குழுவுடன் ஒரு கப்பலில் அந்த தீவுக்கு செல்கின்றனர்.
தனது வயதுக்கு வந்த மகள், அவனது காதலன் மற்றும் சிறிய மகளையும் அழைத்துக் கொண்டு ரூபன் டெல்காடோ சிறிய போட்டில் சென்றுக் கொண்டிருக்க, அவர்கள் போட்டை பெரிய திமிங்கலம் போன்ற டைனோசரஸ் கவிழ்த்து விடுகிறது. தேடுதல் வேட்டைக்காக செல்லும் குழுவுக்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ரேடியோ சிக்னல்ஸ் கிடைக்க அவர்களை காப்பாற்ற வருகின்றனர். பின்னர், அவர்களை அழைத்துக் கொண்டு டைனோசர் வேட்டைக்கு செல்ல, யாரையெல்லாம் டைனோசரஸ் சிப்ஸ் போல கடித்து சாப்பிடுகிறது, யாரெல்லாம் தப்பிக்கின்றனர். ஸ்கார்லெட் ஜோஹன்சனை வேலை முடிந்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

பிளஸ்: கேரத் எட்வர்ட்ஸ் டைனோசர்களை பார்ப்பதற்காக இந்த படத்துக்கு வரும் ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஏமாற்றாமல், அடிக்கடி வித்தியாசமான டைனோசர்களை காட்டி கல்லா கட்டும் வேலையை பார்த்திருக்கிறார். ஸ்கார்லெட் ஜோஹன்சனின் நடிப்பு மற்றும் அவரது துடிப்பு படத்தை கடைசி வரை போர் அடிக்காமல் கொண்டு செல்கிறது. ஜான் மெத்தல்சனின் ஒளிப்பதிவு, அலெக்ஸாண்ட்ரா டெஸ்பிளேட்டின் ஜம்ப் ஸ்கேர் கொடுக்கும் பின்னணி இசை என எல்லாமே பக்கா தான். முதன் முதலாக கடலில் வாழும் திமிங்கலம் போன்ற டைனோசரஸை வேட்டையாட ஹீரோயின் அதன் வாய் வரைக்கும் சென்று விட்டு வரும் காட்சி கூஸ்பம்ப்ஸ். அதன் பின்னர், அந்த தாவரங்களை மட்டும் உண்ணும் டைனோசர்களின் ரொமான்ஸ் காட்சி சூப்பர் கூல்.
மைனஸ்: ஆனால், கடைசியில் கிளைமேக்ஸ் காட்சி மட்டும் ரைட்டிங்கில் எந்தவொரு புதுமையும் இல்லாமல், பல டைனோசர்கள் மற்றும் ஏலியன் படங்களை பார்த்த அதே உணர்வை மட்டுமே தருவது ஏமாற்றத்தை அளிக்கிறது. கடைசியாக வரும் அந்த டைனோசரை பார்த்தாலும், சற்று அதன் உருவ அமைப்பு மற்றவற்றை கம்பேர் செய்து பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம் தான். அந்த போட்டை எடுக்க அந்த இளம்பெண் செல்லும் காட்சி, அந்த குழந்தையை கடிக்க வரும் டைனோசர் காட்சிகள் எல்லாம் சிறப்பான சம்பவம். உங்கள் குழந்தைகளுக்கு டைனோசர் படத்தை 3டியில் காட்ட விரும்பினால் தாராளமாக இந்த படத்திற்கு சென்று பார்க்கலாம். வொர்த் தான்.


Click it and Unblock the Notifications











