For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கேடி தனம் பண்ணும் கருப்புத்துரை கட்டாயம் கலங்க வைப்பார்

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: நாகவிஷால் , மு.ராமசாமி, யோக் ஜாபி , படுவா கோபி ,கணேஷ் கலியமூர்த்தி

  இசையமைப்பாளர் - கார்த்திகேய மூர்த்தி

  இயக்குனர்கள் - மதுமிதா

  சென்னை: கேடி என்கிற கருப்புதுரை படத்தை இயக்கி இருக்கிறார் பெண் இயக்குனரான மதுமிதா .படத்தில் நாகவிஷால் ,மு.ராமசாமி,யோக் ஜாபி ,படுவா கோபி ,கணேஷ் கலியமூர்த்தி ,கேப்பரில்லா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் . படத்தை யூட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர் .

  கேடி என்கிற கருப்புதுரை படத்தை பற்றி நீண்ட நாட்களாக சினிமா துறையில் பேச்சு அடிபட்டு வந்தது ,ஏனெனில் ஒரு படம் பல விருதுகளை வாங்கும் போது ,வெளிவருவதற்கு முன்பே சினிமாதுறையில் அந்த படத்தை பற்றி பேச துவங்கி விடுவார்கள் ,இது சில படங்களுக்கு நல்ல விளம்பரத்தையும் ஏற்படுத்தி தரும் .

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  11 திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட இப்படம் ஐந்து விழாக்களில் வெற்றி பெற்றுள்ளது ,ஜக்ரான் பிலிம் ஃபெஸ்டிவலில் படத்தில் சிறுவனாக நடித்து இருக்கும் நாகவிஷாலுக்கு விருது கிடைத்தது ,யூ.கே ஏசியன் பிலிம் ஃபெஸ்டிவலில் இயக்குனர் மதுமிதாவிற்கு விருது கிடைத்தது,சிங்கப்பூர் சவுத் ஏசியன் பிலிம் ஃபெஸ்டிவலில் படத்திற்காக விருது கிடைத்தது ,இந்திய திரைப்பட விழா சின்சினாட்டியில் சிறந்த இயக்குனருக்கான விருது மதுமிதாவுக்கு கிடைத்தது மற்றும் கலீடோஸ்கோப் இந்திய திரைப்பட விழா போஸ்டனில் சிறந்த நடிப்பிற்கான விருது கிடைத்தது .

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  கேடி என்கிற கருப்புதுரையின் வாழ்க்கையில் நடக்கும் சில முக்கியமான தருணங்களை அற்புதமான கதையாய் மாற்றியிருக்கிறார் . கருப்புதுரை என்கிற 80 வயது முதியவர் 3மாதம் கோமாவில் இருக்கிறார் ,அவரை பார்த்து கொள்ளமுடியாத அவரது குடும்பமே கருப்புதுரையை பழங்கால வழிமுறைகளில் கொல்ல முயல்கிறது, அதாவது தேங்காய்தண்ணியை கொடுத்து கொண்டே இருந்தால் உடல்பாகங்கள் கெட்டு இறந்துவிடுவார் என்று நம்புகிறது . அவ்வாறு செய்யலாம் இவ்வாறு செய்யலாம் என்று நினைக்க இதை அறிகின்ற கருப்புதுரை ,தன் குடும்பத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் விலகி செல்கிறார் .

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  அங்கிருந்து செல்லும் கருப்புதுரை குட்டி எனும் கோவிலில் வளரும் சிறுவனை சந்திக்கிறார், மிகவும் குறும்புசெய்யும் குட்டிக்கும், கருப்புதுரைக்கும் நல்ல பொருத்தம் உண்டாகிறது. இருவரும் இணைந்து பல சேட்டைகளை செய்கிறார்கள் ,அதே நேரத்தில் கருப்புதுரையை அவரது குடும்பம் தேடுகிறது இறுதியில் என்ன என்பதே கதை .

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  படம் மென்மையாகவும் மனித உணர்வுகளை எதார்த்தமாக சொல்லும் கதையாகவும் அமைந்துள்ளது .அதே நேரத்தில் இரண்டாம் பாதியில் வரக்கூடிய சில இடங்களில் காமெடியை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் கூட சுவாரஸ்யமாக இருந்திருக்கும் .

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  நிறைய கமர்சியல் படங்களுக்கு நடுவில் இப்படி ஒரு உன்னதமான படம் , இதை பார்க்க நினைக்கும் பலர் எந்த தியேட்டரில் படம் ஓடுகிறது என்பதை அலசி ஆராய்ந்து செல்ல வேண்டும். ஏன் என்றால் இப்படி பட்ட நல்ல பொக்கிஷமான படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை .

  சொத்துக்காக சண்டை போடும் நிறைய பிள்ளைகள் , பெற்றோர் உணர்வுகளை புரிந்து கொள்ள இப்படி பல நல்ல படங்களைப்பார்க்க வேண்டும் .படம் பார்த்தாவது திருந்துவார்கள் என்று கேட்டால் விடை கிடையாது . ஆனால் ஏதோ ஒரு வகையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த படம் என்பது மாற்று கருத்து இல்லை.

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  பிரியாணி சாப்பிடாத மனிதர்கள் கூட இந்த படம் பார்த்த பிறகு பிரியாணியை தேடி சென்று ஒரு வாய் டேஸ்ட் பண்ண வேண்டும் என்று நினைக்க தோன்றும். அப்படி ஒரு திரைக்கதை அமைப்பு .

  வசனங்கள் பல இடங்களில் நம் எதார்த்த வாழ்க்கையின் உண்மையை தோல் உறிக்கிறது.

  கார்த்திகேய மூர்த்தி இசையில் ஒவ்வொரு காட்சியும் மெல்லிய உணர்வோடு சிலிர்க்க வைக்கிறது .

  சிறு பையனாக நடித்திருக்கும் நாக் விஷால் இன்னும் பல படங்களில் பட்டய கிளப்ப போகிறான் என்பது தெள்ள தெளிவாக புரிகிறது.

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் நடிப்பை நாம் எப்படி ரசித்தோம் , அந்த வயதான காதலை எப்படி ஏற்று கொண்டோம் என்பதை தாண்டி காதல் எந்த வயதிலும் பொதுவானது தான் , மாறாதது தான் என்பதை புரியவைத்தது. அப்படி பட்ட காதலை மேலும் ஒரு படி உயர்த்தி மேலும் மேலும் வலு சேர்த்திருக்கிறார் ராமசாமி அவர்கள். ராமசாமி போன்ற நல்ல கலைஞர்களை வேறு வேறு கதாபாத்திரங்களில் நாம் ரசிக்க வேண்டும் , பயன் படுத்த வேண்டும் என்பது தான் ஆசை.

  k.d is a movie which has won in many film festivals directed by mathumitha

  மொத்தத்தில் படத்தை இந்த குறும்பு தாத்தாவுக்காவும் அரும்பு குட்டிகாகவும் கட்டாயம் பார்க்கலாம்

  Read more about: review gopi கோபி
  English summary
  mathumitha is such a wonderful director who has given various different films to tamil cinema and now again she has proved her best delivering a good script . The movie k.d yengira karuppudurai has really touched many souls and will be the talk of the town with its sensational screenplay.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more