அவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ்.. 100% வொர்த்தான படம்ங்க.. கபெ ரணசிங்கம்.. டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: க பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் குறித்த விமர்சனத்தை ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

CLIMAX ல கண்டிப்பா கண்ணீர் வரும் | CLOSE CALL WITH CINEMATOGRAPHER EKAMBARAM | FILMIBEAT TAMIL

நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் இன்று பகல் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 இந்திய மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கபெ ரணசிங்கம் படத்தை காண 199 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு படமே போதும்

இந்த ஒரு படமே போதும்

இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி தள்ளியுள்ளனர். கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றும் அவரது நடிப்புத் திறமையை பேச இந்த ஒரு படமே போதும் என்றும் புகழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

கண்களில் கண்ணீர்

கண்களில் கண்ணீர்

அதன்படி படத்தை பார்த்த இந்த ரசிகர், அறம் படத்திற்கு பின்னர் படம் பார்த்த பிறகு கண்களில் கண்ணீர் வரவழைக்கும் மிக மிக தரமான திரைப்படம் சமூக அக்கறை கொண்ட படங்களை மக்களுக்கு கொடுக்கும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

எக்ஸெலென்ட் பர்ஃபாமன்ஸ்

எக்ஸெலென்ட் பர்ஃபாமன்ஸ்

மற்றொரு ரசிகரான இவர், கபெ ரணசிங்கம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதியின் எக்ஸெலென்ட் பர்ஃபார்மன்ஸ்.. மொத்த படக்குழுவுக்கும் பாராட்டு என்று கூறியுள்ளார்.

பவர்ஃபுல் டயலாக்ஸ்

பவர்ஃபுல் டயலாக்ஸ்

பிலிமி அப்டேட்ஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில் கபெ ரணசிங்கம் வெளிநாட்டிலிருந்து ஒரு சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தொழிலாளர்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்களை இரண்டாவது பாதியில் ஏராளமான உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் சக்திவாய்ந்த டயலாக்குகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின், கனவு பாத்திரம் அற்புதமான பர்ஃபாமன்ஸுடன் ஈர்க்கிறது என தெரிவித்துள்ளது.

எதுக்கான கண்ணீர்

எதுக்கான கண்ணீர்

மற்றொரு நெட்டிசனான இவர், கபெ ரணசிங்கம்.. கண்ணீர் ஒன்னுதான்... அது சந்தோஷத்துக்கா சங்கடத்துக்கான்னு நாம தான் முடிவு பண்ணனும் என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

மிஸ் பண்ணிட்டோம்

மிஸ் பண்ணிட்டோம்

இது தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் 100% ஃபேமிலி ஆடியன்ஸைக் கொண்டு ஹவுஸ்ஃபுல் ஷோவாக இருந்திருக்கும். ஆனால், பெரிய திரைகளில் அதைக் காணவில்லை. இயக்குநருக்கு வாழ்த்துக்கள், இத்தகைய வலுவான தைரியமான முயற்சிக்கு. ஐஸ்வர்யா ராஜேஷ் முற்றிலும் அற்புதமான நடிப்பு, அதிர்ச்சியூட்டும் சொல்லப்படாத ஒரு கதை. மிகவும் நல்ல படம் என பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மீட்பராக வந்துள்ளார்

மீட்பராக வந்துள்ளார்

மற்றொரு நெட்டிசனான இவர், சமீபத்திய OTT வெளியீடுகள் பொறுமையை சோதித்த பிறகு கபெ ரணசிங்கம் ஒரு மீட்பராக வந்துள்ளார்.. கடுமையாகத் தாக்கும் படம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முழு படத்தையும் சுமந்துள்ளார்.
ஜிப்ரான் இசை அற்புதம். விஜய் சேதுபதி படத்திற்கு ஒரு பெரிய சப்போர்ட். இது தியேட்டரில் வெளியிடப்பட்டிருந்தால் இன்னும் அதிகமாக அனுபவித்திருக்கலாம் என கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X