twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காத்திருப்போர் பட்டியல் படம் எப்படி? - விமர்சனம் #kathirupporpattiyal

    |

    Recommended Video

    காத்திருப்போர் பட்டியல் ஹீரோ ஹீரோயின் பேட்டி, விமர்சனம்

    Rating:
    2.5/5
    Star Cast: சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, ராஜேந்திரன்
    Director: பாலையா டி. ராஜசேகர்

    சென்னை: மோதல், காதல், பெற்றோர் எதிர்ப்பு, ஓடிப்போய் கல்யாணம் என தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள பல நூறு காமெடி காதல் படங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது காத்திருப்போர் பட்டியல்.

    விஜய் சேதுபதியின் பின்னணி குரலுடன் தொடங்குகிறது படம். ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளராக வரும் அருள்தாஸ், விஜய் சேதுபதி கொடுக்கும் வர்ணனைக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார் . ஆனால் படம் முழுக்க அதே அதிகார மிடுக்குடனேயே இருப்பது தான்,'எதுக்கு பாஸ் இப்படி' எனக் கேட்க வைக்கிறது.

    Kaathiruppor pattiyal movie review

    வேலை வெட்டிக்கு போகாமல் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினராக சுற்றுத்திரியும் நாயகனாக இந்தப்படத்தில் அறிமுகமாகியுள்ளார் சச்சின் மணி. சத்தியா கதாபாத்திரத்துக்கு ஓரளவுக்கு நியாயம் செய்திருக்கிறார். ரொமன்ஸ் சீன்களில் புகுந்துவிளையாடியிருக்கும் சச்சின், மற்ற சீன்களுக்கும் அந்தளவுக்கு மெனக்கெட்டிருக்கலாம்.

    கதாநாயகனுடன் முதலில் சண்டையிட்டு, பின்னர் உருகி உருகி காதலிக்கும் வழக்கமான தமிழ் ஹீரோயினாக நந்திதா. சத்தியாவை(சச்சின்) திட்டுவது, சண்டையிடுவது, காதலிப்பது, அவருக்காக வீட்டை எதிர்ப்பது என சுமார் 20 காட்சிகள் மற்றும் மூன்று பாடல்கள் மட்டுமே நந்திதாவுக்கு. அவரளவுக்கு அவர் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

    காமெடிக்காக ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது படத்தில். சென்ராயன், அப்புக்குட்டி, மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், அருண்ராஜா காமராஜ் என பல பேர் காமெடிக்காக படத்தில் இருக்கிறார்கள். ஆனால் செக்ஸ் டாக்டர் குஞ்சிதபாதமாக டபுள் மீனிங் வசனங்களுடன் மனோபாலா வரும் இரண்டு காட்சிகளில் மட்டுமே தியேட்டரில் சிரிப்போசை கேட்கிறது.

    Kaathiruppor pattiyal movie review

    கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர், லாக்கப்பில் இருந்து தப்பிக்கப்போடப்படும் பிளான் காட்சி, பிறந்தநாள் பார்ட்டி சீன், சசிகுமார் ரசிகராக அருண்ராஜா காமராஜ் செய்யும் சேட்டைகள் என குறிப்பிட்ட சில சீன்களில் மட்டுமே கிச்சிக்கிச்சி மூட்டியிருக்கிறார்கள். இத்தனை நடிகர்கள் இருந்தாலும் நகைச்சுவை மட்டும் பெரும்பாலான காட்சிகளில் மிஸ்ஸிங்.

    ரயில் நிலையம், ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸ் ஸ்டேசன், அதில் உள்ள லாக் அப் என்ற புதுமையான களத்தில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாலையா டி. ராஜசேகர். ஆனால் லாக்கப்பில் உட்கார்ந்து தனது காதல் கதையை நாயகன் சொல்வதை மற்றவர்கள் கேட்பது, காதலை ஏற்க நாயகியின் தந்தை போடும் கண்டிஷன், அதற்காக ஹீரோ செய்யும் வேலைகள் என படம் முழுக்க குள்ளநரிக் கூட்டத்தையே நினைவூட்டுகிறது. 'கண்ணாடிக்கு கிடைச்ச பத்மினி' போன்ற ஒரு சில வசனங்களில் மட்டுமே வெளியே தெரிகிறார் இயக்குனர்.

    படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனுக்கு மூன்று சீன்கள் தான். அதிலும் ஒன்றில் டயலாக் ஏதும் இல்லை. மனுஷனை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கலாம். கால்ஷீட் பிரச்சினை என தோன்றுகிறது.

    ஷான் ரோல்டன் இசையில் மூன்று பாடல்கள் மட்டுமே. ஆனால் ஒன்றுமே மனதில் நிற்கவில்லை. அழகியே என்னை அடிப்பதேனடி மட்டும் சுமார் ரகம். தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன், காவல் நிலையம், லாக்கப் ஆகியவற்றை யதார்த்தமாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், பாண்டிச்சேரியையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு படம் பிடித்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு ஒன்று மட்டுமே படத்தை அதிகம் சலிப்படைய செய்யாமல் நகர்த்துகிறது.

    நந்திதா எப்படி திடீரென தாம்பரம் வந்தார், பாதாள சாக்கடையில் குதித்து தப்பிக்கும் சச்சின் எப்படி ஒரு துளி சேறுகூட இல்லாமல் வெளியில் வந்தார் என பல கேள்விகள் மனதில் எழுந்தாலும், லாஜிக் பற்றி எல்லாம் யோசிக்காமல் படம் பார்த்தால், சிறிது நேரம் சிரித்துவிட்டு வரலாம்.

    திரைக்கதையிலும், காமெடியிலும் செலுத்திய கவனத்தை கொஞ்சம் கதையிலும் செலுத்தியிருந்தால் இந்த "காத்திருப்போர் பட்டியல்" நிச்சயம் "கன்ஃபர்ம்" ஆகியிருக்கும்.

    English summary
    Kaathiruppor pattiyal is a comedy genre tamil movie released today in Tamilnadu, starring debut actor Sachin mani and actress Nandhitha swetha in the lead roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X