twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவியன் - சினிமா விமர்சனம்

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள் : ஷாம்,ஆத்மியா,ஸ்ரீதேவி குமார்,சத்யன்
    ஒளிப்பதிவு - என்.எஸ்.ராஜேஷ் குமார்
    இசை - ஷ்யாம் மோகன்
    பாடல்கள் - மோகன்ராஜ்,
    படத்தொகுப்பு - அருண்தாமஸ்
    தயாரிப்பு - 2எம் சினிமாஸ்
    எழுத்து, இயக்கம் - சாரதி.

    சென்னை: ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் மற்றுமொரு த்ரில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சாரதி இயக்கியுள்ள காவியன் என்ற இப்படத்தில் ஷாம் ஒரு போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக நடித்துள்ளார். 2 M சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக இப்படம் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    Kaaviyyan Movie review

    அமெரிக்காவில் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஷாம், ஆத்மேயா, எல்.ஸ்ரீநாத் மற்றும் அறிமுக நடிகை ஸ்ரீதேவி குமார் உட்பட 32 பேர் மட்டுமே இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களில் மூன்று ஹாலிவுட் நடிகர்களின் பங்கு இணையற்றது.

    Kaaviyyan Movie review

    ஒய்ட் காலர் வேலைகளில் இந்தியர்களின் அயராது உழைப்பு அமெரிக்கர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆதலால் அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒரு வெறுக்கத்தக்க குற்றம். அதை மையமாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மியா. மேலும் மாடல் அழகியான ஸ்ரீதேவி குமார் இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    Kaaviyyan Movie review

    ஷாமுக்கு வில்லனாக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் சிறப்பாக நடித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக இது அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளதால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கின்றன காட்சித் தொகுப்புகள். சிவாவின் ஸ்டண்ட் மூலம் சண்டை காட்சிகள் தெறிக்க விடுகின்றன.

    Kaaviyyan Movie review

    என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அருண் தாமஸ் எடிட்டிங் செய்துள்ள இப்படத்தில் ஷ்யாம் மோகன் M.M இசையமைத்துள்ளார். அவர் பின்னணி இசையை மிகவும் அற்புதமாக செய்துள்ளார். இரண்டு பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு பொருத்தமாக அமைந்து உள்ளது.

    Kaaviyyan Movie review

    புறம்போக்கு என்கிற பொதுவுடமை மற்றும் ஜெயம் ரவி, தமன்னா நடித்த தில்லாலங்கடி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த பிறகு மூன்றாவது முறையாக காவியன் திரைப்படத்தில் போலீஸ் உடை அணிந்து சிறப்பாக நடித்துள்ளார் ஷாம். நடிகர் அர்ஜூனுடன் இணைந்து நடித்த ஒரு மெல்லிய கோடு திரைப்படத்திற்கு பிறகு காவியன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஷாம். இதை தவிர தெலுகு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடிப்பதன் மூலம் படு பிஸியாக இருக்கிறார் ஷாம்.

    Kaaviyyan Movie review

    இந்த படம் ஷாமுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வெற்றியும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். பிரமாண்டமான படங்கள் ஏதும் இன்றைக்கு ரிலீஸ் ஆகாததால் முதல் மூன்று நாள் கலெக்ஷனை அள்ளுவதற்கு இப்படத்திற்கு அருமையான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

    Read more about: sathyan shaam ஷாம்
    English summary
    Kaaviyyan Tamil Movie review Check out the latest movie Shaam's Kaaviyyan review. Here is the review of Kaaviyyan Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X